)
பிரான்ஸ் அதிபரின் மனைவி பெண்ணா, திருநங்கையா, ஆணா என்ற பேச்சு கடந்த சில வருடங்களாகவே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது தனது மனைவி ஒரு ஆணில்லை என்பதை நிரூபிக்க பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் புதிய திட்டம் ஒன்றை கையில் எடுத்திருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த சர்ச்சை பேச்சு எப்போது, எப்படி தொடங்கியது? ஒரு அதிபர் இதை நிரூபிக்க வேண்டிய நிலைக்கு ஏன் தள்ளப்பட்டார்? என இதுகுறித்த முழு விவரத்தை இங்கு காணலாம்.
இம்மானுவேல் மக்ரோனின் மனைவி பிரிகெட் மாக்ரோன் பெண் இல்லை என்ற குற்றச்சாட்டு கடந்த 2017ஆம் ஆண்டில் ஆரம்பித்தது. யூ-ட்யூப் பிரபலமான நடாச்சா ரே அல்லது நதாலி ரே என்பவர் அவரது யூ-ட்யூப் வீடியோவில் இதுகுறித்த முதன்முதலில் பேசியிருந்தார்.
அதாவது, பிரான்ஸ் அதிபரின் மனைவி பெண் இல்லை என்றும் பிரிகெட்டின் சகோதரர் ஜீன்-மைக்கெல் ட்ரோக்னக்ஸ் என்பவர்தான் தனது பாலினத்தையும், பெயரையும் மாற்றி பிரிகெட்டின் என்ற அடையாளத்தில் இருப்பதாக கூறினார். மேலும், 2021ஆம் ஆண்டில் அமண்டின் ராய் என்பவருடன் நேர்காணல் ஒன்றிலும் அதை மீண்டும் சொல்லியிருக்கிறார். இது 2022ஆம் பிரான்ஸ் அதிபர் தேர்தலின்போது வைரலானது.
மேலும், அதற்கான ஆதாரத்தையும் நடாஷா ரே வெளியிட்டார். பிரகெட்டின் சகோதரருடைய சிறு வயது புகைப்படத்தை வெளியிட்டு, எப்படி அவர் பிரகெட்டைப் போலவே இருக்கிறார் என்பதை அவர் விளக்கியிருந்தார். தொடர்ந்து, நடாஷா மீதும், அமண்டின் ராய் மீதும் இம்மானுவேல் மக்ரோன் அவதூறு வழக்கை தொடர்ந்தார். அந்த வழக்கில் 2024 செப்டம்பரில் அவர்கள் இருவர் மீதும் குற்றம் நிரூபணமானது. இரு்பபினும் கடந்த ஜூலை மாதம் பாரீஸ் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது. அவர்கள் குற்றச்சாட்டுகளை நல்ல எண்ணத்துடன் முன்வைத்தததாகவும், அதனால் அது அவதூறு ஆகாது என்றும் தீர்ப்பு வழங்கியது.
ஆனால், இவர்களை தொடர்ந்து கேன்டஸ் ஓவன்ஸ் என்ற யூ-ட்யூப் பிரபலமும், பிரிகெட் மாக்ரோனை ஒரு ஆண் என்றே கூறத் தொடங்கிவிட்டார். மேலும், தனது ஒட்டுமொத்த நற்பெயரை பணயம் வைத்து இந்த குற்றச்சாட்டை நிரூபிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பிரான்ஸ் அதிபரும் அவரது மனைவியும் கேன்டஸ் ஓவன்ஸ் மீதும் அவதூறு வழக்கை தொடுத்தது. அவதூறு வழக்கு குறித்து பேசிய கேன்டஸ் ஓவன்ஸ், இந்த வழக்கு என்பது வெளிப்படையான மற்றும் அவநம்பிக்கையான விளம்பர உத்தி என்றும் அதிபரின் மனைவி பிரகெட் மக்ரோன் மிகவும் முட்டாள்தனமான ஆண் என்றும் கூறி அதிர்ச்சி அளித்தார். கேன்டஸ் ஓவன்ஸின் யூ-ட்யூப் பக்கத்தை சுமார் 40 லட்சம் பேர் பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்த வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கில் பிரகெட் மாக்ரோனின் வழக்கிறஞராக டாம் கிளேர் என்பவர் ஆஜராகி உள்ளார். அவர் கொடுத்த அப்டேட் தான் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது, அமெரிக்க நீதிமன்றத்தில் நடைபெறும் இந்த அவதூறு வழக்கின் விசாரணையில், கேன்டஸ் ஓவன்ஸின் கூற்றுக்களை பொய் என நிரூபிக்க புகைப்படங்கள் மற்றும் விஞ்ஞானப்பூர்வ ஆதாரங்களை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் நீதிமன்றத்தில் சமர்பிக்க இருப்பதாக தெரிவித்தார். அதாவது, அவரது மனைவி கருவுற்றிருந்ததன் புகைப்படங்களையும், அவர்களின் குழந்தையை வளர்த்த புகைப்படங்களையும் சமர்பிக்க உள்ளதாக தெரிவித்தார்.
இம்மானுவேல் மாக்ரோன் (47) அவரது மனைவி பிரகெட் மாக்ரோனை பள்ளிப் பருவத்தில் சந்தித்துள்ளார். பிரகெட் மாக்ரோனுக்கு தற்போது வயது 72. அதாவது இம்மானுவேல், பிரெகட்டை விட 25 வயது இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது. இம்மானுவேல் மாணவராக இருந்துள்ளார், பிரகெட் ஆசிரியராக இருந்துள்ளார். அந்த நேரத்தில் பிரகெட்டுக்கு வேறு ஒருவருடன் திருமணமாகியிருந்தது, அவர் மூன்று குழந்தைகளுக்கு தாயாக இருந்தார்.
இவர்களுக்குள் காலம் செல்ல செல்ல காதல் மலர்ந்துள்ளது. இம்மானுவேல் பாரீஸ் வந்தபோது, பிரகெட்டை திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்துள்ளார். பாரீஸில் இம்மானுவேலுடன் இணைந்து பிரகெட், அவரது முன்னாள் கணவரை அப்போது விவாகரத்து செய்திருந்தார். இம்மானுவேல் - பிரகெட் இடையே கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இம்மானுவேல் மாக்ரோன் தற்போது இரண்டாவது முறையாக பிரான்ஸ் நாட்டின் அதிபராக இருந்து வருகிறார். இதுதான் அவரது கடைசி ஆட்சிக்காலம் ஆகும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ