Pills That Will Make Your Fart Smell Like Chocolate : மனிதராக பிறந்த அனைவருக்கும் இயற்கை உபாதைகள் இருப்பதும், அதை நேரா நேரத்திற்கு கழிப்பதும் மிகவும் சகஜம். ஆனால், நம் ஆட்கள் அனைவருக்கும் மலம் கழித்தேன் என்று சொல்வதிலும், வாயுவை வெளியேற்றினால்-அது நாற்றமடித்தால் “நான்தான் அதற்கு காரணம்” என்று சொல்வதிலும் பெரிய மானப்பிரச்சனையே உள்ளது. இந்த பிரச்சனை யாராலும் கட்டுப்படுத்த முடியாத ஒன்று. வயிறு கெட்டுப்போயிருந்தாலோ, 1 நாளுக்கு மேல் மலம் கழிக்கவில்லை என்றாலே இது போன்ற பிரச்சனைகள் வரலாம்.
இப்படி பல நாள் வயிற்றில் அழுக்கு சேர்த்து வைத்திருக்கும் சமயத்தில் வாயு வெளியேறுகையில் கெட்ட நாற்றம் அடிக்கும். இது, நமக்கு அசெளகரியத்தை ஏற்படுத்துவதோடு, நம்மை சுற்றி இருப்பவர்களையும் முகம் சுளிக்க வைக்கும். இதற்குதான், தற்போது ஒரு பிரெஞ்சு காரர் ஒரு புது வழியை கண்டுபிடித்திருக்கிறார்.
வினோத மாத்திரை..
பிரான்சு நாட்டை சேர்ந்தவர், Christian Poincheval. இவர், அங்குள்ள ஜெஸ்வெரஸ் எனும் கிராமத்தில் வசித்து வருகிறார். 65 வயதாகும் இந்த நபர்தான், இப்படிப்பட்ட ஒரு மாத்திரையை கண்டுபிடித்திருக்கிறார். 2006ஆம் ஆண்டு, தனது நண்பர்களுடன் நேரம் செலவழிக்கையில்தான் இப்படிப்பட்ட ஒரு யோசனையே அவருக்கு தோன்றியிருக்கிறது. ஒரு பெரிய விருந்து சாப்பிட்ட பிறகு இவர்களின் நண்பர்கள் ஒவ்வொருவரும் வாயுவை வெளியேற்ற ஆரம்பித்து இருக்கின்றனர். இதனால் இவர்களால் மூச்சு விட முடியாமல் போய் இருக்கிறது. தங்களின் அருகில் இருந்தவர்களும் இதனால் சங்கடப்பட்டுள்ளனர். இதை பார்த்தவுடன் அவருக்கு இப்படியொரு வித்தியாசமான யோசனை தோன்றியுள்ளது.
இந்த மாத்திரை சாப்பிட்டால் என்ன நடக்கும்?
இதனை பலர் சாக்லேட் மாத்திரை என்கின்றனர். இவர், இதோடு நிறுத்திவிடவில்லை. ரோஸ், வயலட் பூக்கள் நறுமனம் வீசும் மாத்திரைகளையும் உருவாக்கியிருக்கிறார். வளர்ப்பு பிராணிகளின் வாயுவை கட்டுப்படுத்தும் பவுடரையும் கூட கண்டுபிடித்து இருக்கிறார். இதில் மருந்துகள் பெரிதும் இல்லாததால், வேறு உடல் நல பிரச்சனைகளும் வராது என்றும் உத்தரவாதம் கொடுக்கிறார் இந்த வயதான மனிதர். அசிங்கப்படும் ஒரு சூழலை நல்ல நறுமனம் வீசுவதாக நாம் மாற்றிக்கொள்ளலாம் என்கிறார் இவர்.
தனது கண்டுபிடிப்பு குறித்து பேசும் அவர், மனிதர்களின் டயட்டிற்கும் அவர்களின் வாயுக்களும் சம்மந்தம் இருக்கிறது என்கிறார். “நாம் வெறும் சைவ உணவுகள் மட்டும் சாப்பிட்டு வரும் போது, நமது வாயு காய்கறிகள் போல நாற்றமடிக்கும். அதை நுகரும் போது மாட்டு சாணி போன்ற மணம் வரும். இறைச்சி சாப்பிட ஆரம்பித்த பிறகு, நம் வாயு நாற்றம் வேறாக மாறிவிட்டது” என்கிறார்.
மாத்திரையில் என்னவெல்லாம் சேர்க்கிறார்?
இப்படி சாக்லேட், ரோஸ், வைலட் என விதவிதமான நறுமணம் வரும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மாத்திரைகளில் கடற்பாசி, தாவர பிசின், பெருஞ்சீரகம் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளதாம். இவை, நாற்றாத்தை நறுமணமாக மாற்றுவதோடு வாயுவை கட்டுப்படுத்தவும், வயிறு உப்பசத்தை குறைக்கவும் கூட உதவுமாம்.
மேலும் படிக்க | 'உடலுறவு தான் எல்லாமே' அதுவும் 10 நிமிஷத்திற்கு ஒருமுறை... மனம் திறந்த ஆபாச நடிகை
மேலும் படிக்க | 23 வயதில் ஓய்வு..! அதுவும் பல கோடிகளுடன்..! என்ன வேலை செய்தார்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









