)
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள ஒரு தனியார் கிறிஸ்தவ பள்ளியில் பணியாற்றிய 26 வயது ஆசிரியை போனி எலிசபெத் பிரவுன் தனது பள்ளியில் படித்த 15 வயது மாணவனை பாலியல் ரீதியாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு, கடந்த 2024 ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
விசாரணையின் இரண்டாம் நாளில், தற்போது 19 வயதாகும் அந்த மாணவன் நீதிமன்றத்தில் ஆஜராகி ஆசிரியருக்கு எதிராக சாட்சி கூறினார்.
கடந்த 2023ம் ஆண்டில், தான் 9ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது ஆசிரியை பிரவுனுடன் இரண்டு முறை உடலுறவு கொண்டதாக அந்த மாணவன் நடுவர் குழுவிடம் தெரிவித்தார். அதாவது, ஒருநாள் வகுப்பு முடிந்த பிறகு தனது அத்தையின் வீட்டில் முதல் முறையும், கோடைகால விடுமுறையின்போது ஆசிரியையின் சொந்த வீட்டில் இரண்டாவது முறையும் நடந்ததாக மாணவர் தெரிவித்தார்.
இந்த குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில், புலனாய்வு அதிகாரிகளுக்கு உதவ ஆசிரியையின் படுக்கையறை எப்படி இருக்கும் என்பதை அந்த மாணவன் துல்லியமாக வரைந்து காட்டியுள்ளார். இந்த முக்கிய ஆதாரமே ஆசிரியை கைது செய்யப்பட காரணம்.
ஆசிரியை பிரவுன், 'ஸ்னாப்சாட்' (Snapchat) செயலியை பயன்படுத்தி அந்த மாணவனுக்கு ஆபாச படங்களை அனுப்பியுள்ளார். அனுப்பும் மெசேஜ்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னர் தானாகவே அழிந்துவிடும் என்பதால் அவர் இந்த செயலியை பயன்படுத்தியதாக மாணவன் தரப்பில் கூறப்பட்டது. மேலும், அந்த மாணவனுக்கு ஒரு மோதிரத்தை பரிசளித்த ஆசிரியை, அவனைத் தனக்குப் "பிடித்தமானவன்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பத்தில் பயத்தின் காரணமாக இந்த தொடர்பை மறுத்த மாணவன், பின்னர் தனக்கு நேர்ந்த துயரத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார்.
வழக்கை விசாரித்த புலனாய்வு அதிகாரி நீதிமன்றத்தில் கூறும்போது, "விசாரணையின் போது மாணவனுடனான பாலியல் தொடர்பு குறித்து கேட்கும் போதெல்லாம், ஆசிரியை பிரவுனின் நடத்தை முற்றிலும் மாறிவிடும். அவர் பதற்றத்தில் பேசுவதை நிறுத்திவிடுவார் அல்லது வாந்தி எடுப்பது போலச் சைகை செய்வார்," என்று குறிப்பிட்டார்.
தற்போது ஆசிரியை பிரவுன் மீது 8 பாலியல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்நாட்டு சட்டத்தின்படி, ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 20 ஆண்டுகள் வரை அவருக்கு சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
இதே மாணவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றத்திற்காக, இதே பள்ளியை சேர்ந்த மற்றொரு 61 வயது ஆசிரியை ஷெர்ரி டெல் மால்டினுக்குச் சில வாரங்களுக்கு முன்புதான் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.