)
Breast Milk Ice Cream: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தற்போது புதிய டிரெண்ட் ஒன்று உருவாகி உள்ளது. நியூயார்க்கில் புரூக்ளினில் செயல்பட்டு வரும் நிறுவனம் ஒன்று தனித்துவமான தாய்ப்பால் ஐஸ்கிரீமை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. நியூயார்க் வாசிகள் இந்த ஐஸ்கிரீமை அதிகளவில் விரும்புவதாக கூறப்படுகிறது.
புரூக்ளின் பகுதியில் OddFellows Ice Cream Co. என்ற நிறுவனம் பிரத்யேக பதிப்பாக தாய்ப்பால் ஐஸ்கிரீம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது விற்பனைக்கு வந்ததில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து இந்த ஐஸ்கிரீமை வாங்கிச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. விற்பனையகம் இருக்கும் வீதி நெடுக கூட்டம் வரிசைக் கட்டி நிற்பதாகவும் கூறப்படுகிறது.
இதன் பெயர் தாய்ப்பால் என வைக்கப்பட்டாலும், உண்மையாகவே இது பெண்களிடம் இருந்து எடுக்கப்பட்ட பாலில் தயாரிக்கப்படவில்லை. ஆனால், இதில் liposomal bovine colostrum என்ற உணவு சார்ந்த Supplement சேர்க்கப்பட்டுள்ளது, இது தாய்ப்பால் காணப்படும் ஒன்றாகும். இதை சேர்த்து தனித்துவமான சுவையில் ஐஸ்கிரீம் தயாரித்து விற்பனை செய்துள்ளனர்.
குறிப்பாக, சுவை ஓரளவுக்கு தெரிந்து வகையிலும் ஆனால் வாடிக்கையாளர்களுக்கு ஆச்சர்யமளிக்கக் கூடிய வகையிலும் இருக்க வேண்டும் என்பதை கருத்தில்கொண்டு OddFellows Ice Cream Co நிறுவனம் இந்த முயற்சியை கையில் எடுத்திருக்கிறது. Frida என்ற தாய் நிறுவனத்துடன் கைக்கோர்த்து இந்த OddFellows Ice Cream Co தாய்ப்பால் ஐஸ்கிரீமை விற்பனை செய்து வருகிறது. மேலும் இதன் மீதான ஆர்வம் நீடிக்க வேண்டும் என்பதால் தினமும் வெறும் 50 ஸ்கூப் மட்டுமே விற்பனை செய்கிறது. இதனால், தினம் தினம் இந்த ஐஸ்கிரீமை ருசிபார்க்க கடையில் கூட்டம் கூடிவிடுகிறது.
கலிபோர்னியாவைச் சேர்ந்த சார்லின் ரிம்ஷா என்ற பெண்மணி கூறுகையில், "என் தாயார் 1974ஆம் ஆண்டு முதல் 1978ஆம் ஆண்டு வரை எனக்கு தாய்ப்பால் கொடுத்தார். ஆனால் எனக்கு அது ஞாபகமே இல்லை. அதனால் அது (ஐஸ்கிரீம்) இன்னும் என்னை உணர்ச்சி ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆச்சரியப்படுத்தியது" என்றார். ரிம்ஷாவுக்கு அந்த ஜஸ்கிரீம் பிடித்திருந்தாலும் அவருடன் வந்த தோழிக்கு அந்த ஐஸ்கிரீம் பிடிக்கவில்லை.
ரிம்ஷாவின் தோழி டேல் கப்லான் கூறுகையில், "எல்லா ஐஸ்க்ரீமும் தாய்ப்பாலில் செய்யப்பட்டது தானே? எல்லா ஐஸ்க்ரீமிலும் சேர்க்கப்படும் பால் பசுவின் மடியில் இருந்துதானே வருகிறது? வழக்கமான ஐஸ்க்ரீமை வேறு பெயரில் அழைப்பது போல்தான் எனக்கு தோன்றுகிறது. ஏனென்றால் ஐஸ்க்ரீம் என்றாலே தாய்ப்பாலில் செய்ததுதான். நான் அப்படிச் சொல்வது தவறா?" என கேள்வி எழுப்பினார்.
மேலும் நீண்ட தூரம் நடந்துவந்து தாய்ப்பால் ஐஸ்கிரீமை ஆசை ஆசையாய் சாப்பிட்ட டேல் என்ற நபர் அவரது அதிருப்தியையும் வெளிப்படுத்தி உள்ளார். "நான் இது இன்னும் பால் சுவையோடு இருக்கும், அதாவது அதிகமாக பால் சுவை இருக்கும் என நினைத்தேன். ஆனால் இது அப்படி இல்லை" என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ