Bizarre World News: அமெரிக்காவைச் சேர்ந்த தம்பதியினரின் திருமண வாழ்க்கை குறிப்பிடத்தக்க சவாலை எதிர்கொண்டது. நீண்ட காலமாக கணவர் செய்து வந்த செயலால், மனைவி எடுத்த விபரீத முடிவும், தம்பதி இருவரும் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளனர். இதுபோன்ற முடிவுகளை யாரும் எடுக்க வேண்டாம் எனவும் அவர்கள் அட்வைஸ் கொடுத்தனர்.
ஆபாச படம் பார்த்த கணவன்
அமெரிக்கா உட்டாவின் சால்ட் லேக் நகரத்தைச் சேர்ந்த பிளம்பர் கைல். இவரது மனைவி மேடிசன் லோஃப்டின். இவர்கள் இரண்டு பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 2019ஆம் ஆண்டில் இவர்களது திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பிறகு, இவர்கள் வெளிநாடுகளுக்கு நீண்ட பயணம் மேற்கொண்டனர். இந்த பயணத்தின் ஒருபகுதி மனைவி மேடிசன் லோஃப்டின் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அதாவது, பயணத்தின்போது, கணவர்ன் பிளம்பர் கைலின் தொலைபேசியில் ஷாக்கான ஒரு விஷயத்தை பார்த்துள்ளார். அதாவது, கணவர் கைலின் செல்போனில் ஆபாச படத்தை பார்த்துள்ளார். இதுபற்றி கணவர் கைலிடம் விசாரித்தபோது, நீண்ட காலமாக செல்போனில் ஆபாச படங்களை பார்த்து வந்ததாக அவர் ஒப்புக் கொண்டார். அவர் நிறுத்த முயற்சித்தால், தன்னால் நிறுத்த முடியவில்லை என்றும் அவர் விளக்கி இருந்தார்.
அப்போதும் கூட, மனைவி மாடிசன் மனம் மாறாமல், கணவரை பழிவாங்க முடிவு செய்திருக்கிறார். இருப்பினும், இந்த பழிவாங்கும் செயல் எதிர்பாராத விளைவை ஏற்படுத்தியது. இந்த விஷயம் தெரிந்த ஒரு வாரத்திற்கு பிறகு, மாடிசன் போதை பழக்கத்திற்கு அடிமையானார். தொடர்ந்து, தினம் தினம் போதைப் பொருட்களை உட்கொண்டு வந்தார். நான் அனுபவத்த அதே வழியை கணவர் கைலும் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக அவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானார்.
பழிவாங்கிய மனைவி
இருவரும் வெவ்வேறு விஷயத்திற்கு அடிமையானதால், இருவரும் பிரச்னைகளை ஒன்றாக எதிர்கொள்ள முடிவு செய்தனர். அவர்கள் இதற்காக அவர்கள் கிறிஸ்தவ நம்பிக்கையின் அடிப்படையில், போதை பழக்கம் போன்ற சில Addiction-ல் இருந்து விடுபடும் திட்டத்தில் சேர்ந்தனர். சில மாதங்களுக்கு பிறகு இருவருக்கு போதை மற்றும் ஆபாச படங்களை பார்த்தில் இருந்தே மீட்டனர். தற்போது, இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்த கைல், "நான் முதன்முதலில் ஆபாசத்தைப் பார்த்தபோது எனக்கு சுமார் எட்டு வயது. நான் விரைவில் அடிமையாகிவிட்டேன். மேலும் அது எந்த எதிர்மறை உணர்ச்சிகளையும் கையாளும் ஒரு வழியாக மாறியது. திருமணத்திற்கு முன்பு நாங்கள் இருவரும் டேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, நான் மேடிசனிடம் ஆபாச படங்களை பார்க்கும் பழக்கத்திற்கு சிறுவயதில் ஆளானதைப் பற்றி மட்டுமே கூறினார். ஆனால் நான் இன்னும் தன்னைப் பாதித்ததாக பகிர்ந்து கொள்ளவில்லை. இந்தப் பழக்கம் என்னை நான் அடையாளம் காணாத ஒருவராக மாற்றியது. அது நான் நேசித்தவர்களை காயப்படுத்தியது. விட்டுக்கொடுப்பது எளிது, ஆனால் மீள்வது சாத்தியம் என்பதை மற்றவர்கள் அறிய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று கூறினார்.
மேலும் படிக்க: பிபி, சுகர் இருக்கா? இனி வெளிநாடு போக முடியாது.. புது ரூல்ஸ் வந்திருக்கு!
மேலும் படிக்க: மகளின் காதலனால் கர்ப்பமான தாய்! அதுவும் 14 வயது சிறுவன்..பெண்ணை கைது செய்த போலீஸ்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









