மகளின் காதலனால் கர்ப்பமான தாய்! அதுவும் 14 வயது சிறுவன்..பெண்ணை கைது செய்த போலீஸ்..

Woman Pregnant By Daughter Boyfriend : அமெரிக்காவின் Illinois என்கிற இடத்தில், ஒரு தாய் தனது மகளின் காதலனால் கர்ப்பமாகியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

Written by - Yuvashree | Last Updated : Nov 9, 2025, 04:00 PM IST
  • மகளின் காதலனால் கர்ப்பமான பெண்
  • அவரது குழந்தையையும் பெற்றெடுத்தார்..
  • இதோ முழு விவரம்!
மகளின் காதலனால் கர்ப்பமான தாய்! அதுவும் 14 வயது சிறுவன்..பெண்ணை கைது செய்த போலீஸ்..

Woman Pregnant By Daughter Boyfriend : அமெரிக்காவை சேர்ந்த 43 வயது பெண், தற்போது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவனான தன் மகளின் காதலனுடன் உறவு வைத்துக்கொண்ட இவர், அவர் குழந்தையையும் வயிற்றில் சுமந்திருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

சிறுவனை பாலியல் வன்புணர்வு செய்த பெண்!

அமெரிக்காவின் Illinois என்கிற பகுதியை சேர்ந்த 43 வயாது பெண், ராபின் போல்ஸ்டன். இவருக்கு, இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் ஒரு குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையின் தந்தை யார் என்கிற விவரத்தை அவர் மறைக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், அதன் மூலமாகத்தான் அவர் ஒரு சிறுவனை பாலியல் ரீதியாக வன்புணர்வு செய்திருக்கிறார் என்கிற விவரம் தெரிய வந்திருக்கிறது.

13 முதல் 17 வயதுக்குள் இருக்கும் குழந்தைகளை இந்த பெண் பாலியல் ரீதியாக துன்புருத்தியதாக எழுந்த புகாரில் அதிகாரிகள் இவரை விசாரித்துள்ளனர். மேலும், வீட்டையும் சோதனை போட்டுள்ளுனர். அப்போதுதான், குழந்தை ஆபாசப் படங்களை வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. 
அதிகாரிகளின் கையில், இந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தையின் பிறப்பு சான்றிதழ் கிடைத்துள்ளது. இதில், இந்த பெண் ஒரு டீன் - ஏஜ் சிறுவனை குழந்தையின் தந்தை என்று குறிப்பிட்டிருக்கிறார். பெயர் வெளியிடப்படாத அந்த சிறுவனின் வயது  14. ஆனால் இது குறித்த வழக்கு விசாரணை நடந்த போது, அது வயது வந்த ஒரு ஆள்தான் என்று அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார். இப்போது, அந்த நபருடன் தான் தொடர்பில் இல்லை என்பதையும் தெரிவித்திருக்கிறார்.

மகளின் காதலன்..

இந்த பெண் பாலியல் வன்புணர்வு செய்த சிறுவன், இவரது மகளுக்கு 2023ல் பாய் பிரண்டாக இருந்ததும், பள்ளியில் நடந்த ஒரு விழாவிற்கு அந்த சிறுமியின் Date-ஆக இந்த சிறுவன் சென்றிருப்பதும் தெரிய வந்தது. அந்த சமயத்தில் சிறுவனுடன் இப்பெண் பழகியிருக்கிறார். பின்னர், 2024ஆம் ஆண்டில் மீண்டும் அந்த சிறுவனை இவர் தொடர்பில் இருந்துள்ளார். போலீசார் விசாரணையில், இந்த பெண்ணும் இச்சிறுவனும் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொண்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து டிஎன்ஏ டெஸ்டும் நடத்தப்பட்டுள்ளது. இதில், அந்த பெண்ணின் குழந்தைக்கு இவர்தான் தந்தை என்பது தெரிய வந்திருக்கிறது. தற்போது பாேலீஸார் அப்பெண்ணை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தைகளின் நிலை என்ன?

தற்போது, கைக்குழந்தையாக இருக்கும் அப்பெண்ணின் குழந்தையை பார்த்துக்கொள்ள அரசு மூலமாக அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட சிறுவன் மற்றும், அப்பெண்ணின் முதல் மகள் உள்ளிட்டோரின் பெயர், விவரங்கள் வெளியிடப்படாமல் பாதுகாக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கு குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | 29 வயதில் ரூ.249 கோடிக்கு அதிபதியான இளைஞர்! ஒரே நாளில் மாறிய தலையெழுத்து..

மேலும் படிக்க | தங்கம் விற்கும் விலையில்...102 கிலோ தங்க டாய்லெட்! விலை என்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News