ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பாகிஸ்தானின் ஆதரவு பயங்காரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இதனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும் சூழல் நிலவி வந்தது. முதலில் இந்தியா பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு மறைமுக நடவடிக்கைகளை எடுத்து வந்தது. பின்னர் ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் மீது நேரடியாக தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த 9 பயங்கரவாத குழுக்கலை தரமட்டமாக்கியது. எல்லை பகுதிகளிலும் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவி வந்தது. பாகிஸ்தான், சீன தயாரிப்பு ஏவுகணைகள், ட்ரோன்கள் ஆகியவற்றை ஏவி தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. ஆனால் இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகள் அவற்றை வெற்றிகரமாக தாக்கி அளித்தன. இந்நிலையில், துருக்கி பாகிஸ்தானுக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்து ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை கொடுத்து உதவியது.
இந்தியா பாகிஸ்தான் அனுப்பிய ஏவுணைகளை அளித்தது. அதன் எச்சங்கள் மீட்கப்பட்ட நிலையில், இந்த தாக்குதலுக்கு பின்னணியில் சீனாவும் துருக்கியும் இருந்தது தெரியவந்தது. இதில் அதிக அளவு ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் துருக்கினுடையது. இதேபோல் பாகிஸ்தானுக்கு அஜர்பைஜானும் ஆதரவு தெரிவித்தது. பாகிஸ்தான் மீதுதான் தவறு இருக்கிறது என மற்ற நாடுகள் அமைதியாகவும் இந்த இரு நாடு பிரச்சனைகளுக்குள் பெரிதாக மூக்கை நுழைக்க வேண்டும் என்று மற்ற நாடுகள் ஒதுங்கி இருந்த நிலையில், துருக்கி மற்றும் அஜர்பைஜான் ஆதரவு தெரிவித்தது.
இந்த நிலையில், இந்த இரு நாடுகளையும் புறகணித்து வருகின்றனர் இந்தியர்கள். துருக்கி மற்றும் அஜர்பைஜானுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலோனோர் இந்தியர்கள். இச்சுழலில் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த இந்த இரு நாடுகளுக்கும் செல்ல வேண்டாம் என இந்தியர்கள் புறகணித்து வருகின்றனர். இதேபோல், இந்த இரு நாடுகளிலும் இந்திய திரைப்படங்கள் எடுக்கக் கூடாது என வர்த்தக சபை முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பாக இந்தியாவில் இருக்கும் அனைத்து மொழி திரைத்துறையினருக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்படி ஒரு வேளை அனைத்து திரைத்துறையினரும் இந்த கோரிக்கையை ஏற்று துருக்கி மற்றும் அஜர்பைஜானில் படம் எடுக்க செல்லவில்லை என்றால், கோடிக்கணக்கில் இந்த இரு நாடுகளுக்கு ஏற்படும் என கூறப்படுகிறது.
மேலும் படிங்க: மீண்டும் பரவுகிறதா கொரோனா? அதிர்ச்சி தகவல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ