எல்லையில் இந்தியா - பாகிஸ்தான் பயங்கர மோதல்.. அமெரிக்கா வைத்த முக்கியமான கோரிக்கை

India Pakistan War Latest News: இந்தியாவுக்கு ஆத்ரவாக அமெரிக்கா இருந்தாலும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இருநாடுகளுக்கும் முக்கிய கோரிக்கை வைத்துள்ளது. தாக்குதலுக்கு வேண்டாம் என்றும், பேச்சு வார்த்தையில் ஈடுபடுங்கள் என்றும் அமெரிக்கா கோரிக்கை.

Written by - Shiva Murugesan | Last Updated : May 9, 2025, 02:36 AM IST
எல்லையில் இந்தியா - பாகிஸ்தான் பயங்கர மோதல்.. அமெரிக்கா வைத்த முக்கியமான கோரிக்கை

Important Demand From America: இந்தியாவுடன் உலக தலைவர்கள் தற்போது பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 10 நாடுகளின் அமைச்சருடன் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறார். பாகிஸ்தானி நகர்கள் மீது தற்போது தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வரக்கூடிய சூழலில், இந்தியாவுடன் உலக தலைவர்கள் பேச்சு வார்த்தைகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Add Zee News as a Preferred Source

10 நாடுகளின் அமைச்சர்களுடன் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு வார்த்தை ஈடுபட்டு வருகிறார். லாகூர் இஸ்லாமாபாத், கராச்சி, மஷாவர் முசாராபாத்தை தொடர்ந்து குவாட்டா மீதும் தற்போது தாக்குதலை இந்திய ராணுவம் தீவிரப்படுத்தி இருக்கிறது. 

அதேநேரம் தாக்குதல் எதிரொழியாக காஷ்மீர் மற்றும் பஞ்சாபில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையானது அறிவிக்கப்பட்டிருக்கிறது. மறுபுறம் தொடர் தாக்குதல் காரணமாக இந்தியாவுடன் உலக தலைவர்கள் பேச்சு வார்த்தைகள் ஈடுபட்டு வருகின்றனர். 

பாகிஸ்தானில் இருக்கக்கூடிய ராணுவ தலைவாடங்கள் மீதான நகரங்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதலை நடத்தி வருகிறது. முக்கியமாக ராணுவ தளவாடங்களை குறிவைத்தே இந்திய ராணுவம் தன்னுடைய தாக்குதலை தொடர்ந்திருக்கிறது. 

இந்நிலையில், அமெரிக்கா தற்போது முக்கியமான ஒரு கோரிக்கை ஒன்றை வைத்திருக்கிறது. தீர்வை நோக்கி நகருங்கள் என்று தற்போது அமெரிக்கா இரு நாடுகளுக்கும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அறிவுறுத்தி இருக்கிறது. 

இந்தியா, பாகிஸ்தான் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்றும், தீர்வை நோக்கி நகருங்கள் என்றும் அமெரிக்கா தற்போது முக்கியமான கோரிக்கை முன்வைத்திருக்கிறது.

இந்தியா நடத்திய தாக்குதலை அமெரிக்கா ஆதரித்திருந்த போதிலும் தொடர் தாக்குதலுக்கு வேண்டாம் என்றும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் பேச்சு வார்த்தையில் ஈடுபடுங்கள் என்றும் அறிவுறுத்தி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தீர்வை நோக்கி நகருங்கள் என்றும் அமெரிக்கா தனது கருத்து தெரிவித்திருக்கிறது. ஏற்கனவே தாக்குதல் குறித்து வெளியரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெளிவாக பேசியிருந்தார். இநிலையில் தற்போது 10 நாடுகளின் அமைச்சர்கள் வெளியுற துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் பேச்சு வார்த்தை ஈடுபட்டு வரக்கூடிய சூழலில் அமெரிக்கா தற்போது இந்த வலியுறுத்தி இருக்கிறது.

மேலும் படிக்க - LIVE இந்தியா பாகிஸ்தான் போர் அப்டேட்: ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்!

மேலும் படிக்க - முக்கிய அமைச்சர்கள் தப்பியோட்டம்.. தலை இல்லாத முண்டமானது பாகிஸ்தான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

...Read More

Trending News