ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலா தளமான பகல்காமில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சூட்டு கொல்லப்பட்டனர். இச்சம்பவம் உலகையே உலுக்கியது. இந்த தாக்குதலை பாகிஸ்தானின் ஆதரவு பயங்கரவாத அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இதற்கு இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாகிஸ்தானும் மிரட்டல் விடுத்து எல்லையில் சோதனைகளை நடத்தி வருகிறது. இதனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே எப்போது வேண்டுமானாலும் போர் வரலாம் என்ற சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், பகல்காம் பயங்கரவாத தாக்குதலை நியாயப்படுத்தும் விதமாக பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் குவாஜா ஆசிஃப் சமிபத்தில் பேசி இருந்தார். அது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், ஜநா சபையில், இந்தியாவின் துணை தூதர் யோஜ்னா படேல் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்து பேசி உள்ளார். அவர் பேசியதாவது, பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்து ஊக்குவிப்பதாக அந்நாட்டு பாதுகாப்பு துறை பேசியதை இந்த உலகமே பார்த்தது. அவரது வாக்குமூலம் யாரையும் வியப்பில் ஆழ்த்தவில்லை. காரணம், பாகிஸ்தான் தொன்றுதொட்டு பயங்கரவாதத்தை ஆதரித்து வருகிறது. அதற்காக உலக நாடுகள் அதை வேடிக்கை பார்க்க முடியாது.
கடந்த 2008ஆம் ஆண்டு மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிறகு பகல்காம் மிகப்பெரிய தாக்குதலாக அமைத்திருக்கிறது. எல்லை கடந்த பயங்கரவாதிகளின் தாக்குதலால் இந்தியா ஆண்டுக்கணக்கில் பாதிக்கப்பட்டு வருகிறது. உயிரிழப்பை சந்தித்த குடும்பத்தினரின் நீண்டகால வலியையும் வேதனையையும் நாங்கள் நன்கு அறிவோம். பகல்காம் தாக்குதலில் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்த உலக நாடுகளுக்கு நன்றி தெரிவிக்க கடமைபட்டிருக்கிறோம்.
பயங்கரவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் அதை வேரறுக்க வேண்டும். அதனை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம் என உலக நாடுகள் சத்திய பிரமாணம் எடுக்க வேண்டும். பபயங்கரவாதத்தால் பாதிகப்பட்டோர் சங்கம் தொடங்கப்பட்டது நல்லதொரு முடிவு. பாதிக்கப்பட்டவர்களின் குரலை ஒலிப்பதற்கு நல்ல ஒரு தலமாக அந்த சங்கம் திகழ்கிறது என யோஜ்னா படேல் பேசினார்.
மேலும் படிங்க: பயங்கரவாதத்தை ஆதரிக்கிறோமா? இந்தியாவை கடுமையாக சாடிய அப்ரிடி!
மேலும் படிங்க: பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்பரப்பில் நுழைய தடை.. மத்திய அரசு அதிரடி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









