இந்திய வம்சாவளியை சேர்ந்த அனிதா ஆனந்த் கெனடாவின் புதிய பாதுகாப்பு அமைச்சராக நியமனம்
54 வயதான அனிதா ஆனந்த், நீண்டகாலமாக பாதுகாப்பு அமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹர்ஜித் சஜ்ஜனுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
டொராண்டோ: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனேடிய அரசியல்வாதியான அனிதா ஆனந்த், நாட்டின் புதிய பாதுகாப்பு அமைச்சராக செவ்வாயன்று நியமிக்கப்பட்டார். பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவை மறுசீரமைப்பின் போது அவரது நியமனம் நடந்தது. ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி திடீர் தேர்தல்களுக்குப் பிறகு மீண்டும் ஆட்சிக்கு திரும்பியுள்ள நிலையில், இராணுவ சீர்திருத்தங்களுக்கான கோரிக்கைகளுக்கு மத்தியில் இந்த நியமனம் நடந்துள்ளது.
54 வயதான அனிதா ஆனந்த், நீண்டகாலமாக பாதுகாப்பு அமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹர்ஜித் சஜ்ஜனுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார். இராணுவ பாலியல் துஷ்பிரயோக நெருக்கடியை ஹர்ஜித் சஜ்ஜன் கையாண்ட முறை விமர்சனத்திற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச மேம்பாட்டு முகமை அமைச்சராக சஜ்ஜன் நியமிக்கப்பட்டுள்ளார் என நேஷனல் போஸ்ட் நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
புதிய அமைச்சரவையில் பாலின சமநிலை உள்ளது என்றும், இது 38 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது என்றும், தேர்தலுக்கு முன்னர் இருந்த எண்ணிகையை விட தற்போது ஒரு நபர் அதிகமாக உள்ளார் என்றும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ALSO READ: 'துர்கா பூஜை' தாக்குதல்கள் திட்டமிடப்பட்டவை: வங்க தேச உள்துறை அமைச்சர்
குளோபல் நியூஸின் அறிக்கையின்படி, பல வாரங்களாக பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் மத்தியில் அனிதா ஆனந்த் ஒரு வலுவான போட்டியாளராகப் பேசப்பட்டு வந்தார். இந்த பதவியில் அவரை நியமித்தால், அது, இராணுவ பாலியல் துஷ்பிரயோகத்தில் தப்பிப்பிழைத்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஒரு சக்திவாய்ந்த சமிக்ஞையை அனுப்பும் என்றும், அரசாங்கம் முக்கிய சீர்திருத்தங்களை செய்ய தயாராக இருக்கிறது என்ற உறுதியை அளிக்கும் என்றும் வல்லுநர்கள் கருதினர்.
கனேடிய (Canada) இராணுவம் தனது வழக்கத்தை மாற்றுவதற்கும், பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளைத் தடுப்பதற்கும் சிறந்த அமைப்புகளை உருவாக்குவதற்கு கடுமையான பொது மற்றும் அரசியல் அழுத்தத்தை எதிர்கொள்கிறது என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அனிதா ஆனந்த் ஒரு கார்ப்பரேட் வழக்கறிஞராக ஒரு வலுவான பின்னணியைக் கொண்டவர் மற்றும் கார்ப்பரேட் நிர்வாகத்தில் பணியாற்றியுள்ளார்.
கலைக்கப்பட்ட அமைச்சரவையில் அனிதா ஆனந்த், சஜ்ஜன் மற்றும் பர்திஷ் சாக்கர் ஆகிய மூன்று இந்திய-கனடிய அமைச்சர்கள், கடந்த மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றனர்.
ஓக்வில்லில் அனிதா ஆனந்த் கிட்டத்தட்ட 46 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். கனடாவின் தடுப்பூசி (Vaccination) அமைச்சருக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக கருதப்படுகின்றது.
அவர் முதன்முதலில் 2019 ஆம் ஆண்டில் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள ஓக்வில்லியை பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். COVID-19 தொற்றுநோய் முழுவதும் கொள்முதல் அமைச்சராக பணியாற்றினார். கொரோனா தொற்றுநோய் சமயத்தில் அவர் ஆற்றிய பங்கு வெகுவாக பேசப்பட்டது.
ALSO READ: சீனாவில் வேகமாக பரவும் கொரோனா, மீண்டும் லாக்டவுன் அறிவிப்பு..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR