)
US Crime News: தம்பதியினர் மத்தியில் வாக்குவாதம், சண்டை சச்சரவுகள் ஏற்படுவது சகஜம் தான். ஒருவருக்கொருவர் அதிக எதிர்பார்ப்புகள் கொண்டிருப்பதால், தம்பதியினரிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படுவதற்கான காரணமாக இருக்கிறது. ஆனால், தம்பதியினரிடையே ஏற்படும் சண்டைகள், வாக்குவாதத்தோடு முடிவடையாமல், சில நேரங்களில் கொலை வரை முடிந்திருக்கிறது. சின்ன சின்ன விஷயங்களால் வாக்குவாதம் ஏற்பட்டு, கடைசியில் கொலையில் முடிந்துள்ள சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அப்படியொரு சம்பவம் தான், தற்போது அமெரிக்காவில் அரங்கேறி இருக்கிறது.
இந்தியாவைச் சேர்ந்த தம்பதி அரவிந்த் - சந்திரபிரபா. இவர்கள் இருவரும் 44 வயதாகிறது. இவர்கள் இரண்டு பேரும் அமெரிக்காவின் வடகரோலினா மாகாணத்தில் வசித்து வந்தனர். அரவிந்த தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சந்திரபிரபா அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இரண்டு பேருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
அப்படி தான், 2025 அக்டோபர் 12ஆம் தேதியும் இருவரும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வீட்டை சுத்தமாக வைப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. எப்போதுமே, மனைவி சந்திரபிரபா பள்ளியில் இருந்து மாலையில் வீட்டிற்கு திரும்புவார். அப்படி தான், சம்பவத்தன்று வீட்டிற்கு வந்தபோது, வீடு குப்பையாக இருந்துள்ளதாம். இதனால், வீட்டை சுத்தம் செய்திருக்கலாம் என கணவர் அரவிந்திடம் கூறியிருக்கிறார்.
அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாம். இந்த வாக்குவாதம் நீண்ட நேரம் நீடித்த நிலையில், சமையல் அறையில் இருந்த கத்தியால் சந்திரபிரபா கணவர் அரவிந்தின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் கழுத்தில் படுகாயம் அடைந்த அரவிந்த் அலறி துடித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், உடனே அரவிந்தை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கணவரை கத்தியால் குத்தியதை அடுத்து, பெண் சந்திரபிரபா கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கும் 2025 அக்டோபர் 12ஆம் தேதி நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது, வீட்டை சுத்தம் செய்யாததற்காக அவர் தன்னைத் தாக்கியதாக அவரது கணவர் கூறினாலும், இந்த சம்பவம் தற்செயலானதாக பெண் சந்திரபிரபா கூறியுள்ளார்.
காலை உணவு தயாரித்துக் கொண்டிருந்தபோது தான் கையில் கத்தியை வைத்திருந்ததாகவும், அப்போது, அவரை நோக்கி வந்தபோது, தற்செயலாக கணவரின் கழுத்தில் குத்திவிட்டதாகவும் அவர் நீதிமன்றத்தில் கூறினார். சந்திரபிரபா வாதத்தை கேட்ட நீதிபதி, அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளார்.
அக்டோபர் 13 அன்று அவருக்கு 10,000 அமெரிக்க டாலர் மதிப்பு பினை பத்திரம் வழங்கப்பட்டது. அவர் மின்னணு கண்காணிப்பு சாதனைத்தை அணிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவரது கணவரை அணுகவோ அல்லது தொடர்பு கொள்ளவோ கூடாது என்று நீதிமன்றம் நிபந்தனைகளை விதித்துள்ளது. வீட்டை சுத்தம் செய்யாததற்காக கணவரின் கழுத்தை மனைவி அறுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ