Iran Huge Warning To America: அமெரிக்கா - இஸ்ரேல் தொடர்ச்சியாக ஈரானின் மீது தீவிர தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. ஈரானும் ஓரளவு பதிலடி தாக்குதலை தொடுத்து வருகிறது. தொடர்ச்சியாக 6வது நாளாக மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடித்து வருகிறது.
87 பேர் உயிரிழப்பு
அந்த வகையில், ஈரானின் IRIS Dena போர் கப்பலை அமெரிக்கா தாக்கி அழித்ததன் மூலம் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் போர் பயிற்சியை முடித்துவிட்டு, ஈரானுக்கு திரும்பிக்கொண்டிருந்த IRIS Dena கப்பலை, அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் தாக்கி வீழ்த்தியதில் இதுவரை 87 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது ஈரானிய அரசை கடும் கோபத்திற்குள்ளாகி உள்ளது.
ஈரான் கொடுத்த வார்னிங்
இந்நிலையில், அமெரிக்காவுக்கு ஈரான் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. அமெரிக்காவின் இந்த தாக்குதல் கொடூரமான அட்டூழியம் என்றும் இதற்கு அமெரிக்கா மிகவும் வருத்தப்படும் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் கடல் எல்லையில் இருந்து வெகு தொலைவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், சமீபத்தில் இந்திய கடற்படையுடன் இணைந்து செயல்பட்ட போர் கப்பலான IRIS Dena-ஐ தாக்கியதற்கு ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கண்டித்தார்.
'அமெரிக்கா அட்டூழியம்'
"ஈரானின் கடற்கரையில் இருந்து 2,000 மைல்கள் தொலைவில் கடலில் அமெரிக்கா ஒரு அட்டூழியத்தைச் செய்துள்ளது. ஏறத்தாழ 130 மாலுமிகளை ஏற்றிச் சென்ற இந்திய கடற்படையின் விருந்திராக உள்ள போர் கப்பல் IRIS Dena, சர்வதேச கடல் எல்லையில் எச்சரிக்கை இல்லாமல் தாக்கப்பட்டது" என அரக்சி X பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அதில், "எனது வார்த்தையை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்: அமெரிக்கா நிச்சயம் இந்த செயலுக்கு கடுமையாக வருத்தப்படும்" என்றும் எச்சரித்துள்ளார்.
The U.S. has perpetrated an atrocity at sea, 2,000 miles away from Iran's shores.
Frigate Dena, a guest of India's Navy carrying almost 130 sailors, was struck in international waters without warning.
Mark my words: The U.S. will come to bitterly regret precedent it has set. pic.twitter.com/cxYiI9BLUk
— Seyed Abbas Araghchi (@araghchi) March 5, 2026
ஈரானின் உச்சபட்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கடந்த சனிக்கிழமை அன்று இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில், கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்திருந்தது. கடந்த 37 ஆண்டுகாலமாக ஈரானின் உச்சபட்ச தலைவராக அலி கமேனி செயல்பட்டு வந்தார். தற்போது அயத்துல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா ஹொசைனி கமேனி உச்சபட்ச தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஈரானுக்கு கடும் பாதிப்பு
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தொடர்ச்சியாக ஈரான் மீது தாக்கி வருகிறது. ஆனால், கடுமையான உயிரிழப்புகளும், கடும் சேதங்களும் ஏற்பட்டுள்ளன. ஈரானில் இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், லெபனான் நாட்டில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இஸ்ரேலில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் மீதான இஸ்ரேல் - அமெரிக்கா போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பெருமளவில் தடைப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் தொடர் போர் பதற்றம் காரணமாக, சர்வதேச கப்பல் பாதைகள் தடைப்பட்டுள்ள நிலையில், மத்திய கிழக்கு முழுவதும் லட்சக்கணக்கான பயணிகள் சிக்கித் தவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று ஈரான் மீதான தாக்குதல் குறித்து கூறுகையில், போர் முனையில் அமெரிக்கா சிறப்பாக செயலாற்றி வருவதாகவும், போரில் முன்னணியில் இருந்து வருவதாகவும் தெரிவித்திருந்தது, உலகளவில் இது பெரிதும் கவனிக்கப்பட்டது. மேலும், சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதால் சர்வதேச அரசியலிலும் பெரும் பதற்றம் நிலவுகிறது.
மேலும் படிக்க | ஈரான் தாக்குதல்... கேப்டன் ஆஷிஷ் குமார் உள்பட 2 இந்தியர் பலி... ஷாக் தகவல்
மேலும் படிக்க | உலகை சூழ்ந்த போர் மேகங்கள்... 3ஆம் உலகப் போர் ஆரம்பமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









