Iran Intel Chief Majid Khademi Killed: அமெரிக்கா - இஸ்ரேல் நாடுகளின் கூட்டு தாக்குதலில், ஈரானின் உளவுத்துறை தலைலவர் மஜித் காதேமி உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) அறிவித்துள்ளது. IRGC அதிகாரிகளால் இன்று அறிவிக்கப்பட்டாலும், அவர் எந்த பகுதியில் உயிரிழந்தார் உள்ளிட்ட விவரங்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
இஸ்ரேலும், அமெரிக்காவும் தொடர்ச்சியாக ஈரான் தலைநகர் தெஹ்ரானை குறிவைத்து, அதுவும் பொதுமக்களின் குடியிருப்பு பகுதியிலும் தாக்குதல் தொடுத்து வரும் நிலையில், இந்த உயிரிழப்பு சம்பவம் நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
IRGC அறிவிப்பு
Telegram செயலின் சேனலில், IRGC போட்டுள்ள பதிவில், "இஸ்லாமியப் புரட்சிகர காவலர் படை, புலனாய்வு அமைப்பின் சக்திவாய்ந்த மற்றும் மெத்த படித்த தலைவரான மேஜர் ஜெனரல் மஜித் காதிமி, இன்று அதிகாலையில், எதிரி நாடுகளான அமெரிக்க - ஈரான் நடத்திய குற்றவியல் பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்தார்" என குறிப்பிட்டுள்ளது. மேலும் ஈரான் அரசு சார்ந்து வெளியாகும் தகவலிலும், IRGC சொன்னதுபோல் இஸ்ரேல் - அமெரிக்க வான்வழித் தாக்குதலிலேயே காதேமி உயிரிழந்தார் என்பதும் தெரிகிறது.
தீவிரமடையும் போர்
சுமார் 50 ஆண்டுகளாக உளவு மற்றஉம் பாதுகாப்பு பணிகளிலும், ஈரானிய புரட்சி காலகட்டத்திலும், அரசு அமைப்பிலும், நாட்டைப் பாதுகாப்பதிலும் அர்ப்பணிப்புடனும், தைரியத்துடனு் பணியாற்றிய காதேமி, நீடித்து மற்றும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கி உள்ளார் என IRGC தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வு ஈரானின் ராணுவ தலைமைக்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளதின் அறிகுறி இதுவாகும்.
யார் இந்த மஜித் காதேமி?
பிரிகேடியர் ஜெனரலான மஜித் காதேமி, ஈரானின் வலிமைமிக்க பாதுகாப்பு அமைப்பிற்குள் தொடர் வளர்ச்சியை பெற்றார். 2022ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் IRGC உளவு பாதுகாப்பு அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டார். 2025ஆம் ஆண்டுக்குள் முகமது காசெமிக்குப் பதிலாக அவர் IRGC உளவுத்துறை தலைவராகவே பொறுப்பேற்றார். பல ராணுவ அதிகாரிகளை போல் இன்றி, காதேமி உள்ள வியூகம் வகுப்பாளர் மட்டுமில்லை... அவர் தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாயப் பாதுகாப்பு அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.
உளவுத்துறை தலைவர்: IRGC உளவுத்துறை தலைவராக கடந்த தலைவராக கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டார். இதற்கு முன் காசெமி கொல்லப்பட்டதை தொடர்ந்து 2025 ஜூன் 19ஆம் ஆம் தேதியே அன்று IRGC உளவு அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
உளவுப் பாதுகாப்புத் தலைவர்: 2022ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரை பிரதான உளவுப் பிரிவை வழிநடத்துவதற்கு முன்பு, அவர் ஈரானிய புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) உளவுப் பாதுகாப்பு அமைப்பை வழிநடத்தினார். அவர் பாதுகாப்பு படைக்குள் உளவு எதிர்ப்பு மற்றும் உள் கண்காணிப்பில் கவனம் செலுத்தினார்.
பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைவர்: 2018ஆம் ஆண்டில் இருந்து 2022ஆம் ஆண்டு வரை ஈரானின் பாதுகாப்பு அமைச்சகத்தில் உள்ள தகவல் பாதுகாப்பு அமைப்பிற்கும் தலைமை வகித்தார்.
மேலும் படிக்க | பொருளாதார சிக்கல்.. அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக போர் கொடி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









