'நரி திட்டம்' அச்சத்தில் அமெரிக்கா... பயமுறுத்தும் ஈரான்... ஸ்லீப்பர் செல் ஞாபகம் இருக்கா?

Sleeper Cell: ஈரானுக்கு எதிரான போரில் தற்போது இஸ்ரேலுடன் அமெரிக்கா கைக்கோர்த்துவிட்டது. இந்நிலையில், ஈரானின் ஸ்லீப்பர் செல்கள் மூலம் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Jun 22, 2025, 01:03 PM IST
  • மத்திய கிழக்கில் மொத்த நாடுகளும் உற்று நோக்குகிறது.
  • அமெரிக்கா நேற்று ஈரான் மீது தாக்குதல் தொடுத்தது.
  • ஈரான் தற்போது பதிலடியை தொடங்கி உள்ளது.
'நரி திட்டம்' அச்சத்தில் அமெரிக்கா... பயமுறுத்தும் ஈரான்... ஸ்லீப்பர் செல் ஞாபகம் இருக்கா?

Sleeper Cell, Israel Iran War: இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையேயான பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்து வந்தாலும், தற்போது மீண்டும் உச்சமடைந்துள்ளது. கடந்த ஜூன் 13ஆம் தேதி இஸ்ரேல் 'ஆபரேஷன் ரைஸ்ஸிங் லயன்' என்ற பெயரில் தொடங்கிய தாக்குதல் நடவடிக்கையே பதற்றத்தை அதிகரித்தது. ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்தும், ராணுவ பகுதிகளை குறிவைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. 

Israel Iran War: மத்திய கிழக்கை உற்றுநோக்கும் உலக நாடுகள்

தொடர்ந்து ஈரானும் ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் பதிலடி தாக்குதல்களை மேற்கொண்டது. இந்த சூழலில், ஜூன் 21ஆம் தேதி அன்று (நேற்று) ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது துல்லியமாக தாக்குதல் தொடுத்ததாக அமெரிக்கா அறிவித்தது. இதன்மூலம் இஸ்ரேல் - ஈரான் போரில் அமெரிக்காவுக்கும் குதித்திருக்கிறது. 

அமெரிக்காவின் தாக்குதலுக்கு நிச்சயம் தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போதே இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலையும் ஈரான் தொடங்கிவிட்டது. இனியாவது ஈரான் போரை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா தெரிவித்திருந்தாலும், அதையும் மீறி ஈரான் தாக்குதலை தொடங்கியிருக்கிறது. தற்போது ஏமனும் இந்த போரில் அதிகாரப்பூர்வமாக இணைவதாக அறிவித்திருக்கிறது. எனவே மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தையும், போக்கையும் ஒட்டுமொத்த உலகமும் கண்காணித்து வருகிறது.

Sleeper Cell: அமெரிக்காவில் ஈரானின் 'ஸ்லீப்பர் செல்'

இந்த சூழலில், தற்போது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு மேலும் ஒரு அச்ச உணர்வு எழுந்துள்ளது எனலாம். ஆம், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மறைந்திருக்கும் ஈரானின் ஸ்லீப்பர் செல் குறித்த அச்சம்தான் இப்போது அதிகரித்துள்ளது. நடிகர் விஜய் நடித்து 'துப்பாக்கி' திரைப்படம் பார்த்தவர்களுக்கு நிச்சயம் ஸ்லீப்பர் செல் என்றால் என்னவென்று தெரிந்திருக்கும். இருப்பினும் ஸ்லீப்பர் செல் குறித்து இங்கு விரிவாக காணலாம். 

What is Sleeper Cell: ஸ்லீப்பர் செல் என்றால் என்ன?

ஸ்லீப்பர் செல் என்பவர்கள் உளவாளிகள் அல்லது பயங்கரவாதிகள் எனலாம். அவர்கள் ஒரு தலைமைக்கு கட்டுப்பட்டு ஒரு நாட்டிலோ அல்லது ஒரு பகுதியிலோ தங்களின் உண்மையான அடையாளத்தை மறைத்து மக்களோடு மக்களாக வாழ்ந்துகொண்டிருப்பார்கள். இவர்களின் தலைமை உத்தரவிடும் வரை இவர் மக்களோடு மக்களாக எந்த ஒரு பயங்கரவாத செயல்களிலும் ஈடுபடாமல் இருப்பார்கள். உத்தரவு கிடைத்த உடன் பயங்கரவாதத் தலைமையின் திட்டத்தை நிறைவேற்றுவார்கள். இவர்களைதான் ஸ்லீப்பர் செல் என்பார்கள். இவர்களை கைது செய்தாலும் கூட இவர்களுக்கு அந்த திட்டம் குறித்த முழு விவரங்களும் தெரிந்திருக்காது.  

Sleeper Cell: அமெரிக்காவின் தாக்குதல்... அதிகரித்த பதற்றம்...

அந்த வகையில், ஈரானின் ஸ்லீப்பர் செல் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் நிச்சயம் மறைந்திருப்பார்கள். ஏனென்றால் மேற்கத்திய நாடுகளின் மேல் ஈரான் நீண்ட காலமாகவே எதிர் மனப்பான்மையில் இருந்து வருகிறது. அந்த வகையில், ஒருவேளை இஸ்ரேல் - ஈரான் இடையிலான போரில் அமெரிக்கா தலையிட்டு தாக்குதலை தொடங்கினால், அமெரிக்காவில் உள்ள தனது ஸ்லீப்பர் செல் உளவாளிகளை முடுக்கிவிட ஈரான் திட்டமிட வாய்ப்புள்ளதாக பலரும் தெரிவித்தனர். 

அந்த வகையில், தற்போது போரில் தலையிட்டது மட்டுமின்றி ஈரானின் 3 அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கியிருக்கிறது. இது ஈரானை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. நிச்சயம் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் என கூறப்படுகிறது. ஈரான் அரசு தொலைக்காட்சி சேனலில், "ஈரானின் வான்வெளியில் அத்துமீறி நுழைந்ததன் மூலம் அமெரிக்கா ஈரானுக்கு எதிராக பெரிய குற்றத்தைச் செய்துள்ளது. மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அதற்கு இடமில்லை. அமெரிக்க ஜனாதிபதி அவர்களே, நீங்கள் இதை தொடங்கினீர்கள், நாங்கள் அதை முடிவுக்குக் கொண்டுவருவோம்" என செய்தி வாசிப்பாளர் பேசும் காணொலிகளும் வைரலாகி வருகின்றன. 

Sleeper Cell: டொனால்ட் டிரம்பை கொல்ல நடந்த சதி!

ஈரான் பதிலடி கொடுக்கும் என்றால் ஆயுதங்கள், ஏவுகணை மூலம்தான் தாக்குதல் தொடுக்கும் என்றில்லை. ஈரான் ஆதரவு தீவிரவாத குழுக்கள், சைபர் தாக்குதல்கள் ஆகியவை மூலமும் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க வாய்ப்புள்ளது. Sleeper செல்கள் மூலமும் கூட ஈரான் தாக்குதல் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

அமெரிக்காவில் ஈரான் ஸ்லீப்பர் செல் இருக்கிறார்களா என்றால், ஆம் என்றே சொல்ல வேண்டும்...! ஈரான் நாட்டைச் சேர்ந்த ஃபர்ஹாத் ஷாகேரி என்பவர்  அதிபர் டொனால்ட் டிரம்ப்பை கொல்ல சதி திட்டம் திட்டியிருக்கிறார். ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) 7 நாள்களுக்குள் கண்காணித்து, திட்டமிட்டு டொனால்ட் டிரம்ப்பை கொல்ல ஷேகரியை பணித்துள்ளனர். ஆனால், அவரது சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது.

Sleeper Cell: ஈரான் என்ன செய்யும்...? 

2020ஆம் ஆண்டு IRGC தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா டிரோன் தாக்குதல் மூலம் கொன்றதற்கு பழிவாங்க ஃபர்ஹாத் ஷாகேரி என்ற ஸ்லீப்பர் செல்-ஐ ஈரான் பயன்படுத்தியது. இதேபோன்று, இங்கிலாந்திலும் ஈரான் ஸ்லீப்பர் செல் சம்பந்தப்பட்ட 15 சம்பவங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை இஸ்ரேலுக்கு எதிரான போரில் மேற்கத்திய நாடுகளால் நெருக்கடி அதிகமானால் தங்களது ஸ்லீப்பர் செல்-ஐ ஈரான் முடுக்கிவிட வாய்ப்புள்ளது என அஞ்சப்படுகிறது.

மேலும் படிக்க | அமெரிக்கா போட்ட குண்டுகள்... ஈரானின் 3 அணுஉலைகள் துவம்சம் - போரில் இணைந்த டிரம்ப்!

மேலும் படிக்க | பதிலடியை தொடங்கிய ஈரான்... எகிறும் கச்சா எண்ணெய் விலை - இந்தியாவுக்கு பாதிப்புகள் என்ன?

மேலும் படிக்க | இஸ்ரேல் - ஈரான் போர் குறித்த முழு பின்னணியை தெரிந்து கொள்ளுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News