இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம்: டிரம்ப் தான் காரணமா? என்ன மேட்டர்?

நீண்ட நேர இரவு உரையாடலுக்கு பிறகு இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். 

Written by - R Balaji | Last Updated : May 10, 2025, 06:49 PM IST
  • இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம்
  • அமெரிக்க அதிபர் டிரம்ப் காரணமா?
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம்: டிரம்ப் தான் காரணமா? என்ன மேட்டர்?

ஜம்மு காஷ்மீரின் பகல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. அதாவது கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பகல்காம் சுற்றுலா தளத்தில் பாகிஸ்தானின் ஆதரவு பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 அப்பவி பொதுமக்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியதோடு இந்தியாவை ஆத்திரமடைய செய்தது. 

Add Zee News as a Preferred Source

இதனால் இந்தியா பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. கடந்த சில நாட்களாக இந்தியா நேரடி தாக்குதலில் இறங்கியது. பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கும் 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் என்ற இந்திய ராணுவ நடவடிக்கை தாக்கி தரைமட்டமானது. 

இதையடுத்து பாகிஸ்தானும் தாக்குதலை தொடங்கியது. இந்தியாவின் 15 முக்கிய நகரங்கள், எல்லை பகுதிகள், அமிர்தசரஸ் பொற்கோயில் என மக்கள் கூடும் இடங்களை தாக்க முயன்றது. ஆனால் இந்தியா அதனை தடுத்தது. இதனால் பெரிய அளவில் போர் வெடிக்கும் என்ற அபாயம் இரு நாட்டு மக்கள் மத்தியிலும் நிலவி வந்தது. இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தம் செய்ய முடிவு எடுத்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் முக்கிய காரணம் என கூறப்படுகிறது. 

இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். அதில், நீண்ட நேர இரவு உரையாடலுக்கு பிறகு அமெரிக்காவின் மத்யஸ்தத்தை  இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டது. இரு நாடுகளுக்கும் இடையேயான போரை உடனடியான மற்றும் முழுமையான போர் நிறுத்தத்திற்கு ஒப்பு கொண்டுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். பொது அறிவு மற்றும் இண்டலிஜண்ட்ஸை அந்த நாடுகள் பயன்படுத்தி உள்ளது. இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி என பதிவிட்டுள்ளார். 

இந்தியா - பாகிஸ்தான் போரின் நடுவில் அமெரிக்கா தலையிட போவதில்லை என்றும் அது அடிப்படையில் எங்களில் வேலை இல்லை என்றும் அமெரிக்காவின் சார்பில் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் நேற்று கூறியிருந்தார். இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், இரு நாடுகள் இடையே பேசியதாகவும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதற்கு நன்றி என பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிங்க: இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தம்: இந்திய ராணுவ DGMOக்கு போன் போட்ட பாகிஸ்தான்... நடந்தது என்ன?

மேலும் படிங்க: India Pakistan Ceasefire: போர் நிறுத்தத்தை உறுதிசெய்த இந்தியா... மே 12இல் மீண்டும் பேச்சுவார்த்தை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News