Israel And Iran War Ceasefire: ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையிலான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இரு நாடுகளும் ஏவுகணையின் மூலம் தாக்குதல் நடத்தி வந்தனர். இதனால் பல நாடுகள் தங்களது வான்வெளியை முழுவதுமாக மூடினர். இந்த தாக்குதல் காரணமாக உலக பொருளாதாரம் பாதிப்பிற்கு உள்ளாகுமா என்ற அச்சமும் நிலவி வந்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான ராணுவ தாக்குதலில் பலருக்கும் உயிர் சேதமும், காயமும் ஏற்பட்டது. ஜூன் 13ஆம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இரண்டு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் அதிகரித்தது.
அமெரிக்கா தலையீடு!
இதற்கிடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா ராணுவம் தாக்குதல் நடத்தியது, இதனை அதிபர் டொனால்டு டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கத்தாரில் உள்ள அமெரிக்காவின் விமானப்படை தளத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இருப்பினும் இதனால் எங்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார். ஈரான் வீசிய 14 ஏவுகணைகளில் 13ஐ அழித்து விட்டோம். மீதமுள்ள ஒன்று எங்களுக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதால் அதனை அப்படியே விட்டுவிட்டோம். தாக்குதல் குறித்து எங்களுக்கு முன்கூட்டியே தெரிவித்த ஈரானுக்கு நன்றி என்றும், இந்த தாக்குதலால் எங்கள் வீரர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
போர் நிறுத்தப்பட்டதாக டொனால்டு டிரம்ப் அறிவிப்பு
ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே எப்போது போர் நிறுத்தப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்பு கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்ரூத் சோசியல் சமூக ஊடக பக்கத்தில் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளதாவது, " அனைவருக்கும் வாழ்த்துக்கள்! இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே முழுமையான CEASEFIRE இன்னும் 6 மணி நேரத்தில் அமலுக்கு வரும். இஸ்ரேலும் ஈரானும் தங்கள் இறுதிப் பணிகளை முடித்த பிறகு அடுத்த 12 மணி நேரத்தில் போர் முடிந்ததாகக் கருதப்படும்!
அதிகாரப்பூர்வமாக, ஈரான் CEASEFIREஐ தொடங்கும், மேலும் 12வது மணி நேரத்தில், இஸ்ரேல் CEASEFIREஐ தொடங்கும். மேலும் 24வது மணி நேரத்தில், 12வது நாள் போரின் அதிகாரப்பூர்வ முடிவை உலகமே வரவேற்கும். ஒவ்வொரு CEASEFIREன் போதும், மறுபக்கம் அமைதியாகவும் மரியாதையுடனும் இருக்கும். எல்லாம் அது நடக்க வேண்டும் என்ற அனுமானத்தின் அடிப்படையில், இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் முடிவுக்கு வருவதற்கான சகிப்புத்தன்மை, தைரியம் மற்றும் உளவுத்துறையைப் பெற்றதற்கு நான் வாழ்த்த விரும்புகிறேன், அதை "12 நாள் போர்" என்று அழைக்க வேண்டும். இது பல வருடங்களாக நீடித்து, முழு மத்திய கிழக்கையும் அழித்திருக்கக்கூடிய ஒரு போர், ஆனால் அது நடக்கவில்லை. கடவுள் இஸ்ரேலை ஆசீர்வதிப்பாராக, கடவுள் ஈரானை ஆசீர்வதிப்பாராக, கடவுள் மத்திய கிழக்கை ஆசீர்வதிப்பாராக, கடவுள் அமெரிக்காவை ஆசீர்வதிப்பாராக, கடவுள் உலகை ஆசீர்வதிப்பாராக!" என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை? - பதற்றத்தை தணிக்க அறிவுறுத்தல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ