)
Israel Gaza Attack: காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஐந்து ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதில் ஒருவர் ஹமாஸ் உடன் தொடர்புடையவர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
Al Jazeera Media Network condemns the targeted assassination of its correspondents Anas Al Sharif and Mohammeel Qraiqea, along with photographers Ibrahim Al Thaher, and Mohamed Nofal, by Israeli forces.#JournalismIsNotACrime pic.twitter.com/F3p9PbhGZF
— Al Jazeera English (@AJEnglish) August 11, 2025
Al Jazeeera Arabic ஊடகத்தின் செய்தியாளர் அனாஸ் அல் ஷரீஃப் உள்பட 5 ஊடகவியலாளர்கள் இஸ்ரேல், காஸா மீது மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் நேற்று (ஆக. 10) உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்-ஷிஃபா மருத்துவமனையின் பிரதான நுழைவுவாயிலில் செய்தியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் நின்றுகொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது.
ஷிஃபா மருத்துவமனையின் அதிகாரி ஒருவரின் கூற்றுப்படி இந்த தாக்குதலில் மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர், இந்த தாக்குதல் மருத்துவமனைக்கு வெளியே இருந்த தற்காலிக கூடாரத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என Al Jazeera ஊடகம் தெரிவித்துள்ளது. ஆனால், வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட அனாஸ் அல்-ஷரீஃப் இஸ்ரேலிய பொதுமக்கள் மற்றும் துருப்புக்கள் மீது ராக்கெட் தாக்குதல்களை நடத்தும் ஹமாஸ் பயங்கரவாதப் பிரிவை வழிநடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் மீது குற்றஞ்சாட்டியிருக்கிறது.
இதுகுறித்து இஸ்ரேலிய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், "அனஸ் அல் ஷெரீப் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பில் ஒரு பயங்கரவாத பிரிவின் தலைவராகப் பணியாற்றினார். மேலும் இஸ்ரேலிய பொதுமக்கள் மற்றும் இஸ்ரேல் ராணுவத்திற்கு எதிராக ராக்கெட் தாக்குதல்களை முன்னெடுப்பதற்குப் பொறுப்பானவர்" என்றார்.
இந்த தாக்குதலில் அல்-ஷரீஃப் மட்டுமின்றி செய்தியாளர் முகமது கிரீகே, கேமரா ஆபரேட்டர்கள் இப்ராஹிம் ஜாஹர், முகமது நௌபால், மோமென் அலிவா மற்றும் இவர்களுக்கு உதவியாளராக இருந்துவந்த முகமது நௌபால் ஆகிய மற்ற ஊடகவியலாளர்களும் கொல்லப்பட்டதாக Al Jazeera தெரிவித்துள்ளது.
உயிரிழப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன் அனாஸ் அல்-ஷரீஃப் அவரது சமூக வலைப்பக்கத்தில், "அனைத்து வழிகளிலும் நான் வலியை அனுபவத்திருக்கிறேன், அந்த வலியையும் இழப்பையும் நான் மீண்டும் மீண்டும் அனுபவித்துள்ளேன். இருந்தபோதிலும்ஸ, நான் பொய்யுரைத்தோ அல்லது திரிபுபடுத்தியோ சொல்லாமல் உண்மையை உள்ளபடி வெளிப்படுத்த நான் ஒருபோதும் தயங்கியதில்லை. அமைதியாக இருந்தவர்களுக்கும், எங்கள் மீதான தாக்குதலை ஏற்றுக்கொண்டவர்களுக்கும், எங்கள் உயிர்மூச்சைப் பிடித்து வைத்திருந்தவர்களுக்கும், எங்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதிக்கப்பட்டும் இதயங்களில் எவ்வித மாற்றமும் இல்லாதவர்களுக்கும், ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் மக்கள் அனுபவித்து வரும் படுகொலையை நிறுத்தாதவர்களுக்கும் எதிராக கடவுள் ஒரு சாட்சியாக இருக்கட்டும்" என குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அந்த பதிவில், "நாட்டின் விடுதலைக்கும் அதன் மக்களுக்கும் பாலங்களாக இருந்து செயல்படுங்கள். இதனால் நமது அபகரிக்கப்பட்ட தாய்நாட்டின் மீது கண்ணியம் மற்றும் சுதந்திரத்தின் சூரியன் பிரகாசித்து ஒளி பாய்ச்சட்டும்" என மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் தனது தாய், மனைவி, மகன், மகள் உள்ளிட்ட குடும்பத்தினரையும் மக்கள் கவனித்துக்கொள்ளும்படி அவர் அதில் கேட்டுக்கொண்டார். நான் இறந்தாலும், என் கொள்கைகளில் உறுதியுடன் உயிர்விடுகிறேன் என்றும் காசாவை மறந்துவிடாதீர்கள் என்றும் அவர் பதிவில் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ