Israel Iran Conflict: கடந்த ஜூன் 13ஆம் தேதி இஸ்ரேல், ஈரானின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து வான்வழித் தாக்குதலை மேற்கொண்டது. ஆபரேஷன் ரைஸ்ஸிங் லயன் என்ற பெயரில், ஈரானின் அணு ஆயுத தளங்களை குறிவைத்தும், ராணுவ உள்கட்டமைப்புகளை குறிவைத்தும் தாக்குதல் மேற்கொண்டது. இதில், ஈரானின் உயர் ராணுவ தலைவர்கள் பலரும் உயிரிழந்ததாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஈரானும் பதில் தாக்குதலை இஸ்ரேல் மீது தொடுத்தது. இதனால், இஸ்ரேல் - ஈரான் இடையே பதற்றம் அதிகரித்தது.
Israel Iran Conflict: இஸ்ரேல் ஈரான் மோதல்...
இந்நிலையில், இன்று அதிகாலையில் இருந்து இஸ்ரேல் - ஈரான் மாறி மாறி தாக்குதல்களை தொடுத்து வருகின்றன. அதிலும் ஈரானின் பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அணு ஆயுத தளங்களை நோக்கி விரிவான தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை (IDF) தெரிவித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்பு படை அதன் X பக்கத்தில் இந்திய நேரப்படி காலை 5.10 மணிக்கு போட்ட பதிவில், "ஈரான் அரசின் அணு ஆயுதத் திட்டத்துடன் தொடர்புடைய தெஹ்ரானில் உள்ள இலக்குகள் மீது இஸ்ரேல் பாதுகாப்பு படை விரிவான தொடர் தாக்குதல்களை முடித்தது.
Israel Iran Conflict: தாக்குதலை தவிர வேறு வழி இல்லை
இஸ்ரேலின் இந்த இலக்குகளில் ஈரானிய பாதுகாப்பு அமைச்சக தலைமையகம், SPND அணுசக்தி திட்டத்தின் தலைமையகம் உள்ளிட்டவை இதில் அடங்கும். ஈரானிய ஆரசு அணு ஆயுதத்தைப் பெறுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்தது. ஈரானிய அரசு அதன் அணு ஆயுதக் காப்பகத்தை மறைத்து வைத்திருந்தது" என பதிவிட்டுள்ளது.
தொடர்ந்து, இன்று காலை 7.11 மணிக்கு போட்ட பதிவில், "ஈரான் தனது நோக்கங்களை தெளிவாக்கியது. எனவே, நாங்கள் செயல்படுவதை தவிர வேறு வழியில்லை. ஈரான் அணு ஆயுதங்களை நோக்கி சென்று, அப்பாவி பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தும் நிலையில், இஸ்ரேலைப் பாதுகாக்கவும், உலகம் புறக்கணிக்க முடியாத அச்சுறுத்தலைத் தடுக்கவும் இஸ்ரேலிய பாதுகாப்பு படை நடவடிக்கை எடுத்து வருகிறது" என்றார்.
Israel Iran Conflict: ஈரான் நிலைப்பாடு என்ன?
இஸ்ரேலிய தாக்குதல்களை நியாயப்படுத்தவே முடியாது என்றும், இந்த நிலைமைகளின் கீழ் தொடர் பேச்சுவார்த்தை என்பது அர்த்தமற்றது என்றும் ஈரான் தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்கா உடனான அதன் வரவிருக்கும் அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஈரான் நிறுத்தி உள்ளது. ஈரான் நான்கு கட்டங்களாக சுமார் 200 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை கொண்டு இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுத்தது. பெரும்பாலானவை அமெரிக்காவின் உதவியுடன் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைப்புகளால் முறியடிக்கப்பட்டன.
இரு நாடுகளும் அதிக எச்சரிக்கையுடன் இருக்கின்றன. சர்வதேச சமூகம் இருநாடுகளுக்கும் இடையே அமைதி திரும்ப தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இருப்பினும், நிலைமை தொடர்ந்து நிலையற்றதாகவே உள்ளது. தங்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் வரை, அமெரிக்கா உடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகளில் ஈரான் கலந்து கொள்ளாது என்று ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் உறுதிபடுத்தி உள்ளார். இந்த மோதல் உலகளாவிய எண்ணெய் விலைகள் மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மையில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்தும் கவலைகளை எழுப்பி உள்ளது.
கடந்த இரண்டு நாள்களாக இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் ஈரானில் 78 பேர் முதல் நாளில் உயிரிழந்தனர் என கூறப்படுகிறது. மேலும் ஏவுகணை தாக்குதல்களை தொடர்ந்து 60 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. உயர் ராணுவ அதிகாரிகள் மட்டுமின்றி அணுசக்தி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த விஞ்ஞானிகள் சிலரும் இந்த தாக்குதல்களில் உயிரிழந்திருப்பதாக இஸ்ரேல் தெரிவிக்கிறது.
மேலும் படிக்க | துபாயில் 67 மாடிக் கட்டடத்தில் தீ விபத்து: 3,820 பேர் பாதுகாப்பாக வெளியேற்றம்!
மேலும் படிக்க | இஸ்ரேல் கடற்படை செயலால் உலக நாடுகளை கடும் கோபம்..! கிரேட்டா கைதின் பின்னணி என்ன?
மேலும் படிக்க | 11 A சீட்: அகமதாபாத் போல் தாய்லாந்திலும் உயிர்தப்பிய ஒருவர் - ராசியா? மர்மமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ