Israel Iran Conflict News: ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் உலக நாடுகளுக்கு பல நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், உலக எரிசக்தி சந்தையை பெரிதும் பாதிக்கிறது. இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் கச்சா எண்ணெய் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்குமா? எனப்தைக் குறித்து பார்ப்போம்.
ஈரான்-இஸ்ரேல் மோதல் பெட்ரோல் விலை உயருமா?
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் மோதல் இந்தியாவில் பெட்ரோல் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இதற்கு முக்கிய காரணம் மத்திய கிழக்கில் நிலையற்ற தன்மை காரணமாக உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வே காரணமாக இருக்கிறது.
இந்தியா எத்தனை சதவீதம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது?
அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளது. அதாவது இந்தியா 85% க்கும் அதிகமாக கச்சா எண்ணெய் மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. எனவே சர்வதேச அளவில் ஏற்படும் எந்தவொரு விலை உயர்வு உள்நாட்டு பொருளாதாரத்தையும் பாதிக்க வாய்ப்புள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு காரணம் என்ன?
தற்போது கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. அதற்கு முக்கியக் காரணமாக பார்க்கப்படுவது இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் ஆகும். இந்த இரண்டு நாடுகளின் மோதலால் கச்சா எண்ணெய் விநியோகத்தை பாதிக்கலாம்.
ஈரான் எவ்வளவு கச்சா எண்ணெயை உற்பத்தி செய்கிறது?
எம்.கே. குளோபலின் அறிக்கையின்படி, ஈரான் ஒரு நாளைக்கு சுமார் 3.3 மில்லியன் பீப்பாய்கள் (mbpd) கச்சா எண்ணெயை உற்பத்தி செய்கிறது மற்றும் சுமார் 1.5 mbpd ஏற்றுமதி செய்கிறது. இதில் சீனா 80 சதவீத பங்கைக் கொண்ட முக்கிய இறக்குமதியாளராக உள்ளது. ஈரான் நாடு ஹார்முஸ் ஜலசந்தியின் வடக்கு கரையில் உள்ளது. அங்கிருந்து தான் உலக முழுவதும் 20mbpd க்கும் அதிகமான கச்சா எண்ணெய் வர்த்தகம் செய்யப்படுகிறது. சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்றவையும் இந்த பாதை வழியாக கப்பல்களை அனுப்புகின்றன. மத்திய கிழக்கில் அமைந்துள்ள ஹார்முஸ் ஜலசந்தி எப்பொழுதும் பிரச்சனைக்குரிய இடமாகவே இருக்கிறது. முன்பு இந்த ஹார்முஸ் ஜலசந்தியை மூடுமாறு ஈரான் எச்சரித்துள்ளது.
மத்திய கிழக்கு தொடரும் பதற்றம்
மத்திய கிழக்கு உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பிராந்தியங்களில் ஒன்றாக இருக்கிறது. ஈரான், சவுதி அரேபியா, ஈராக் மற்றும் பிற நாடுகள் இணைந்து உலகின் எண்ணெய் இருப்புக்களில் பெரும் பங்கைக் கையாளுகின்றன. எனவே பிராந்தியத்தில் ஏதேனும் அரசியல் அல்லது இராணுவ பதற்றம் ஏற்படும்போது, எண்ணெய் வழங்கல் பாதிக்கப்படும் மற்றும் சந்தையில் நிச்சயமற்ற தன்மை ஏற்படும். எனவே, ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே அதிகரித்து வரும் மோதலுக்கு மத்தியில், இந்த பதற்றத்திற்கு மத்தியில் பெட்ரோல் விலை உயரும் வாய்ப்பு உள்ளது.
எண்ணெய் விநியோகம் தடைப்படும்?
உலகின் மூன்றில் ஒரு பங்கு எண்ணெய் ஈரானின் நீர்வழிகள் வழியாக, குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கொண்டு செல்லப்படுகிறது. இங்கு ஏதேனும் இராணுவ பதற்றம் அல்லது தடை ஏற்பட்டால், எண்ணெய் விநியோகம் தடைபடும். இது விலை அதிகரிக்க காரணமாக மாறக்கூடும்.
கச்சா எண்ணெய் விலைகள் உயரும்
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் ஏவுகணை தொழிற்சாலைகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு மத்திய கிழக்கில் புவிசார் அரசியல் பதட்டங்கள் அதிகரித்ததால், கடந்த வெள்ளிக்கிழமை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 9 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது. இந்த மோதல் உலகின் எண்ணெய் விநியோகத்தில் அழுத்தத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பாதிப்பு ஏற்படுமா?
இந்தியா போன்ற எண்ணெய் இறக்குமதி செய்யும் நாட்டிற்கு பெரும் தலைவலியாக உள்ளது. போர் தொடரும் வரை இந்த பிரச்சினையில் நிலைமை கவலையளிக்கும் வகையில் இருக்கும். இந்தியா தனது பெரும்பாலான எண்ணெய் தேவைகளுக்கு மத்திய கிழக்கையே சார்ந்துள்ளது. கச்சா எண்ணெயின் விலை அதிகரித்தால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேரடியாக அதிகரிக்கும். இது சாதாரண மக்களின் பாக்கெட்டில் பெரும் சுமையை ஏற்படுத்தும். குறிப்பாக இந்த மோதல் தீவிரமடைந்து எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டால். விலைகளில் மாற்றம் ஏற்படலாம். அதேநேரம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு பல காரணிகளைப் பொறுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க - அமெரிக்காவில் பெண் பத்திரிகையாளர் மீது துப்பாக்கி சூடு.. வைரலாகும் வீடியோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ