20 முறை குத்தி கொல்லப்பட்ட பிரபல மாடல்! கொடூரனாக மாறிய காதலன்..

Italian Model Stabbed To Death : பிரபல மாடல் அழகி ஒருவர், தனது காதலனால் 20 முறை குத்தி கொல்லப்பட்டு உயிரிழந்திருக்கிறார். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.

Written by - Yuvashree | Last Updated : Oct 16, 2025, 05:24 PM IST
  • 20 முறை குத்தி கொல்லப்பட்ட மாடல்
  • இத்தாலியை சேர்ந்தவர்
  • காதலனே கொன்ற கொடூரம்!
20 முறை குத்தி கொல்லப்பட்ட பிரபல மாடல்! கொடூரனாக மாறிய காதலன்..

Italian Model Stabbed To Death : இத்தாலிய மாடல் ஒருவர், தனது காதலனால் 20 முறை குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கிறார். இவர் கொல்லப்பட்டது ஏன்? அவர் காதலன் கைது செய்யப்பட்டாரா? இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

இளம் மாடல்:

இத்தாலியை சேர்ந்த இளம் மாடல் அழகி, பாமிலா ஜெனினி. இவருக்கு 29 வயது ஆகிறது. பல பிராண்டுகளுக்கு மாடலாக இருப்பது மட்டுமன்றி, ரியாலிட்டி டிவி நிகழ்ச்சி பிரபலமாகவும் இருக்கிறார். இவர், மிலன் என்கிற இடத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி வந்திருக்கிறார். இந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் பாமிலாவின் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டதாக அக்கம் பக்கத்தினர் காவல்துறையிடம் புகார் தெரிவித்திருக்கின்றனர். அந்த வீட்டிலிருந்து யாரோ தன்னை காப்பாற்றுமாறு யாரோ அலறியதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

பாமிலாவிற்கு காதலர் ஒருவரும் இருக்கிறார். அவர், இவரை விட வயதில் மிகவும் மூத்தவர். அவருக்கு வயது 59 ஆவதாக கூறப்படுகிறது. இவரது பெயர், Gianluca Soncin. இவர்கள் இருவரும், சம்பவம் நடந்த இரவு பயங்கரமாக கத்தி சண்டை போட்டதாக கூறப்படுகிறது. இந்த சண்டை, கைகலப்பாகவும் சென்றிருக்கிறது.

குத்தி கொலை!

அக்கம்பக்கத்தினர் கொடுத்த புகாரின் பேரில், என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்திருக்கின்றனர். அப்போது, அருகில் இருந்த வீட்டிலிருந்து ஒருவர், பால்கனியில் நின்று கொண்டு போலீசாருக்கு சிக்னல் கொடுத்து பாமிலாவின் வீட்டிற்குள் என்ன நடக்கிறது என்று கூற முயற்சி செய்திருக்கிறார். காவல் துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றிருக்கின்றனர். அப்போது அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

போலீஸாரின் வீட்டின் கதவை உடைத்து வந்த பின்புதான், பாமிலாவின் காதலன் அவரை குத்துவதை நிறுத்தியிருக்கிறார். இதில், சம்பவ இடத்திலேயே குத்தப்பட்ட பாமிலா உயிரிழந்திருக்கிறார். அவரது காதலனும் இரு முறை தனது கழுத்தை அறுக்க முயற்சி செய்திருக்கிறார். இதனால், அவரும் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால், அவரை உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்துள்ளனர். இதனால் அவர் உயிர் பிழைத்திருக்கிறார். 

உயிரிழந்த மாடல், தனது காதலனால் 24 முறை குத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. கொலையான மாடல் அழகியின் காதலர் மீது திட்டமிட்ட கொலை, பின்தொடர்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்த மாடலின் தோழி இது குறித்து பேசுகையில், பல மாதங்களாகவே இருவருக்குள்ளும் இருந்த உறவு, மிகவும் மோசமானதாக இருந்ததாக தெரிவித்திருக்கிறார். இவரும் சேர்ந்து தொழிலையும் தொடங்கி இருக்கின்றனர். இதுதான், இவர்களின் சண்டைக்கு காரணம் என்று தெரிகிறது.

மேலும் படிக்க | ஆப்கானை தாக்கிய பாகிஸ்தான்... திடீர் தாக்குதல் ஏன்? பின்னணியில் இந்தியாவா?

மேலும் படிக்க | உலகில் குறைந்த செலவில் வாழக்கூடிய நாடு எது தெரியுமா? - டாப் 10 லிஸ்ட் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News