29 வயதில் ரூ.249 கோடிக்கு அதிபதியான இளைஞர்! ஒரே நாளில் மாறிய தலையெழுத்து..

Kerala Man Wins UAE Lottery : கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர், அபுதாபி லாட்டரியில் ரூ.249 கோடியை வென்றிருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம். 

Written by - Yuvashree | Last Updated : Oct 28, 2025, 03:52 PM IST
  • 249 கோடி வென்ற இளைஞர்!
  • அபுதாபியில் இந்திய இளைஞருக்கு அடித்த அதிர்ஷ்டம்
  • முழு விவரம், இதோ
29 வயதில் ரூ.249 கோடிக்கு அதிபதியான இளைஞர்! ஒரே நாளில் மாறிய தலையெழுத்து..

Kerala Man Wins UAE Lottery : “திண்ணைல கெடந்தவனுக்கு திடுக்குன்னு வந்துச்சாம் கல்யாணம்..” என்பது பழமொழி. இதை, திடீரென அதிர்ஷ்ட மழையால் நனைந்தவர்களை குறிப்பிடுவர். அப்படித்தான், கேரளாவை சேர்ந்த 29 வயது இளைஞரும் திடீரென அதிர்ஷ்ட மழையால் நனைந்திருக்கிறார். இவாது பெயர், அனில் குமார். அபுதாபி லாட்டரியில் பங்கு பெற்ற இவ்ருக்கு, 100 மில்லியன் தினார் கிடைத்திருக்கிறது. இதனால் இவரது வாழ்க்கையே ஒரே நாளில் தலைகீழாக மாறியிருக்கிறது. 

Add Zee News as a Preferred Source

துபாயில் வசித்து வரும் இந்தியர்!

கேரளாவை சேர்ந்த இளைஞர் அனில் குமார், அபுதாபியில் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவர், கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி நடந்த லாட்டரி போட்டியில் பங்கேற்றிருக்கிறார். இதில், 8.8 மில்லியன் பேரில் ஒருவராக, சிங்கிள் ஆளாக இத்தனை கோடி ரூபாயை  லாட்டரியில் வென்றிருக்கிறார். இது குறித்து நேரலை நிகழ்ச்சி நடந்திருக்கிறது. அப்போது, அனில் குமாரின் பெயர் வின்னர் என அறிவிக்கபட்டு, அவர் வீட்டிற்கு 100 மில்லியன் தினாரை வீட்டிற்கு எடுத்து செல்வதாக அறிவிக்கப்பட்டது. 

அனில் குமார் பேட்டி!

அத்தனை கோடி பரிசு பெற்றவுடன் அனில் குமார் மகிழ்ச்சியுடன் பேட்டியளித்திருக்கிறார். அப்போது, தான் வென்ற லாட்டரி சீட்டு தனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிவித்திருக்கிறார். தான் லாட்டரி சீட்டுகளை தேர்வு செய்யும் போது கவனத்துடன் செயல்படுவதாகவும், லாட்டரி சீட்டில் தனது தாயாரின் பிரந்த மாதமான 11 கடைசியில் வரும் வகையில் அதனை தேர்வு செய்ததாகவும் தெரிவித்து இருக்கிறார். 

லாட்டரி சீட்டில் இருக்கும் கடைசி இரண்டு நம்பர்கள் தனக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறும் அவர், இந்த லாட்டரி மூலமாக கிடைத்த பரிசை தன் தாய்க்கு அர்ப்பணிப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார். இந்த பரிசு கிடைத்த நாளில், தான் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பதை அவர் தெரிவித்திருக்கிறார்.

“லாட்டரியில் பரிசு அறிவிக்கப்பட்ட நாள் அன்று, நான் சோபாவில் அமர்ந்திருந்தேன். எனக்கு லாட்டரி நிர்வாகத்தினரிடம் இருந்து போன் வந்தது. நான், இது கற்பனையானது என்று நினைத்தேன். அதை கேட்கும் போது என்னால் நம்பவே முடியவில்லை. அவர்கள் இந்த விஷயத்தை சொன்ன பின்பு, அதை மீண்டும் மீண்டும் கேட்டு, உண்மைதானா என்று கேட்டுக்கொண்டே இருந்தேன். இதை எனக்கு புரிந்து கொள்ள கொஞ்ச நேரம் பிடித்தது. இன்னும் கூட என்னால் இதனை நம்ப முடியவில்லை” என்று கூறியிருக்கிறார்.

பணத்தை என்ன செய்யப்போகிறார்?

லாட்டரியில் கிடைத்த இந்த பணத்தை என்ன செய்யலாம் என்பது குறித்து திட்டமிட வேண்டியிருப்பதாகவும், பெரிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பதாகவும் கூறியிருக்கிறார். சூப்பரான கார் ஒன்று வாங்க வேண்டும் என்பது அவரது கணவாம். எனவே, அதை செய்யப்போவதாகவும், தன் பெற்றோரை அபுதாபிக்கு அழைத்து வந்து அவர்களுடைய சின்னசின்ன கனவுகளை நிறைவேற்றப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார். 

இந்த பரிசு படத்தில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் தேவைப்படுபவர்களுக்கு நன்கொடையாக கொடுக்க விரும்புவதாகவும், தீபாவளி நேரத்தில் இந்த பரிசு தனக்கு கிடைத்ததை ஆசீர்வாதமானதாக கருதுவதாகவும் தெரிவித்து இருக்கிறார்.

அனில் குமார், தலா 60 தினார் வீதம், மொத்தம் 12 லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கியிருக்கிறார். 23வது லாட்டரி குலுக்கலில்தான் இவருக்கு இந்த பரிசு கிடைத்திருக்கிறது. இந்த 100 மில்லியன் தினாரின் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.239 கோடி. இந்த லாட்டரி ஆரம்பித்த பிறகு, இவ்வளவு பெரிய பரிசு தொகை விழுந்திருப்பது இதுவே முதன்முறையாகும்.

மேலும் படிக்க | இன்றைய கேரளா ஜாக்பாட்: காருண்யா KR-728 லாட்டரி டிக்கெட் ரிசல்ட்.. ரூ. 1 கோடி பரிசு

மேலும் படிக்க | தங்க நகை அணிந்தால் ரூ.50,000 அபராதம்! ஆச்சரியப்படுத்தும் கிராம்-முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Trending News