Donald Trump Volodymyr Zelenskyy Fighting On Live : டொனால்ட் ட்ரம்ப் சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் தனது நாட்டுக்காக செய்யும் பல விஷயங்கள் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதையடுத்து, அவரும் துணை அமெரிக்க ஜனாதிபதியுமான ஜேடி வேன்ஸ் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோர் வெள்ளை மாளிகையில் சந்தித்து கொண்டனர். அப்போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட காரசார விவாதம்தான் தற்போது உலக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை கிளப்பிய விஷயமாக மாறியிருக்கிறது.
சந்திப்பின் போது ஏற்பட்ட தகராறு:
கடந்த வெள்ளிக்கிழமை அன்று (நேற்று) அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. கடந்த வெள்ளிக்கிழமை (நேற்று) அமெரிக்க வெள்ளை மாளிகையில் இவர்களின் சந்திப்பு நடைப்பெற்றது. இந்த சந்திப்பில், ஜெலன்ஸ்கியும் ட்ரம்பும் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டனர். ஜெலன்ஸ்கி, சில விஷயங்களை பேச முயல, அவரை குரலை உயர்த்தி அடக்கிய ட்ரம்ப், அமெரிக்கா ஆயுதம் கொடுத்தும், உக்ரைன் அதை உபயோகிக்காதது குறித்தும், அதற்கு அமெரிக்காவிற்கு அவர் நன்றி தெரிவிக்காதது குறித்தும் பேசினார். ஜெலன்ஸ்கி “என்னை கொஞ்சம் பேச விட்றீங்களா?” என கேட்க, அதற்கு ட்ரம்ப் “நீ இதுவரை பேசியதே போதும். அமைதியாக இரு” என்று கூறினார்.
தொடர்ந்து ஜெலன்ஸ்கியுடனான விவாதத்தில் ஈடுபட்ட ட்ரம்ப், ஜெலன்ஸ்கி 3ஆம் உலகப்போருக்கு வழிவகுப்பதாகவும், இதுவரை அவர் செய்த செயல்பாடுகள் அப்படித்தான் இருப்பதாகவும் கூறினார். இந்த விவாதத்தில், பெரும் குரலாக இருந்த இன்னொருவர் ஜேடி வேன்ஸ். இவர், “நீங்கள் அமெரிக்காவிற்கு நன்றி உள்ளவராக இல்லை” என்று ஜெலன்ஸ்கி மீது குற்றம் சாட்டினார்.
வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறிய ஜெலன்ஸ்கி:
இந்த சந்திப்பு நிகழ்ந்ததே ஜெலன்ஸ்கி கனிம வள ஒப்பந்தத்தில் கையெழுத்து போட வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால், இந்த சந்திப்பு விவாதத்தில் முடிந்த நிலையில், ஜெலன்ஸ்கி கோபமாக வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து பேசிய ட்ரம்ப், இது போன்ற நிகழ்வு நடந்தது தங்களுக்கு பெரிய வருத்தம்தான் என்று தெரிவித்தார். இப்படி ஒரு சென்சிடிவான சந்திப்பு மீடியா முன்னிலையில் நடந்திருக்க கூடாது என்று பேசிய ட்ரம்ப், இதனால் தங்களுக்கு பெரிய வருத்தம் என தெரிவித்தார். தற்போது, இந்த சம்பவம் குறித்து பரபரப்பாக பேசி வருகின்றனர்.
மேலும் படிக்க | அமெரிக்கா வாழ் இந்தியர்கள் அச்சம்! கொலம்பியாவை அடுத்து இந்தியா? ட்ரம்ப் ஆடும் ஆட்டம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEata









