டாய்லெட் பேப்பரில் ராஜினாமா கடிதம்! பெண் பகிர்ந்த வைரல் பாேஸ்ட்..

Singapore Employee Toilet Paper Resignation : ஒருவர், டாய்லெட் பேப்பரில் ராஜினாமா கடிதம் எழுதி கொடுத்துள்ள விவகாரம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Written by - Yuvashree | Last Updated : Apr 16, 2025, 04:54 PM IST
  • டாய்லெட் பேப்பரில் ராஜினாமா கடிதம்!
  • பெண் பகிர்ந்த போஸ்ட்..
  • விவாதத்தை கிளப்பிய பதிவு..
டாய்லெட் பேப்பரில் ராஜினாமா கடிதம்! பெண் பகிர்ந்த வைரல் பாேஸ்ட்..

Singapore Employee Toilet Paper Resignation : அனைவருக்கும் வேலை கிடைப்பதும், அந்த வேலை செட் ஆகாமல் வேறு ஒரு வேலைக்கு செல்வதும் மிகவும் சகஜம். அப்படி ஒரு வேலையிலிருந்து வேறு ஒரு வேலைக்கு மாறும் போது நாம், ராஜினாமா கிடைத்தது கொடுத்துவிட்டு செல்ல வேண்டும். ஆரம்பத்தில் இது கையால் எழுதப்பட்ட கடிதமாக இருந்தாலும், நவீன உலகின் பரிணாம வளர்ச்சி காரணமாக மெயில் போன்ற டிஜிட்டல் வடிவமாக மாறிவிட்டது. ஆனால் ஒருவர் தனது வேலையில் இருந்து போகும் போதும் டாய்லெட் பேப்பரில் ராஜினாமா கடிதத்தை எழுதிக் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார். இதற்குப் பின்னால் இருக்கும் காரணம் குறித்தும், அந்த கடிதத்தில் என்ன யோகி இருக்கிறார் என்பது குறித்தும் இங்கு பார்ப்போம். 

Add Zee News as a Preferred Source

வைரலான ராஜினாமா கடிதம்..

சிங்கப்பூரில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர்தான் இதை செய்திருக்கிறார். Angela Yeoh இன்று அந்த பெண், ஒரு நிறுவனத்தில் இயக்குனராக பணிபுரிந்து வந்திருக்கிறார். இவர், ஒருவர் அவரது நிறுவனத்தில் இருந்து வெளியேறும் போது டாய்லெட் பேப்பரில் ராஜினாமா கடிதத்தை எழுதி கொடுத்ததை போட்டோ எடுத்து பதிவிட்டிருக்கிறார். LinkedIn தளத்தில் வெளியிட்டு அந்த பெண், இந்த இந்த பதிவை பகிர்ந்திருக்கிறார். கூடவே, “டாய்லெட் பேப்பரை தேவைப்படும் போது உபயோகித்து விட்டு யோசிக்காமல் தூக்கி போட்டு விட வேண்டும்” என்ற வாக்கியத்தை வேலையை விடும்போது அந்த ஊழியர் தன்னிடம் கூறியதாகவும் அது தனக்குள் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் கூறியிருக்கிறார். 

ராஜினாமா கடிதத்தில் இருந்தது…

பொதுவாக அனைவரும் ராஜினாமா கடிதத்தில், தனக்கு இந்த நிறுவனம் கற்றுக் கொடுத்த விஷயங்களை எழுதி, தனக்கு ஏன் இந்த வேலையில் தொடர விருப்பமில்லை என்பதை எழுதியிருப்பர். என்னதான் அந்த நிறுவனம் டாக்ஸிக்காக இருந்தாலும் ஒரு சிலர் தனது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பிறரை பகைத்துக் கொள்ள கூடாது என்று தங்களின் ராஜினாமா கடிதத்தில் பெரிதும் வெறுப்பு காட்ட மாட்டார்கள். ஆனால், இவர் அது குறித்து எந்த கவலையும் படவில்லை. காரணம், அவரை அந்த அளவிற்கு இந்த நிறுவனம் பாடாய்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. 

அந்த டாய்லெட் பேப்பரில் அவர், “இந்த நிறுவனம் என்னை எப்படி நடத்தியது என்பதற்கு அடையாளமாக, எனது ராஜினாமா கடிதத்தை எழுத இது போன்ற ஒரு காகிதத்தை தேர்வு செய்துள்ளேன்” என்று குறிப்பிட்டு இருக்கிறார். 

இந்த போஸ்டை பகிர்ந்திருக்கும் அந்த பெண், “உங்களிடம் வேலை பார்ப்பவர்களை பாராட்டுங்கள். அவர்கள் உங்கள் நிறுவனத்தில் இருந்து வெளியேற வேண்டுமென நினைத்தாலும், அவரை நன்றியுணர்வுடன் வழி அனுப்பி வையுங்கள். மனதில் வெறுப்புணர்வை வைத்துக்கொள்ளாதீர்கள். இது போன்ற சம்பவங்கள், ஒருவரின் விசுவாசத்தை காட்டாது. அவரை அவர் வேலை பார்த்த நிறுவனம் எப்படி நடத்தியது என்பதைத்தான் காட்டும். ஒருவரை பாராட்டுவது என்பது, ஒரு நபர் எவ்வளவு மதிக்கப்படுகிறார் என்பதற்கான பிரதிபலிப்பாகும். அவர்களை தக்க வைத்துக்கொள்வதற்காக மட்டும் இதனை செய்யக்கூடாது. 

ஒருவர்,தங்களை குறைத்து மதிப்பிடுவதாக உணர்ந்தால், அதைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது. பாராட்டுவதில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இன்றே மாற்றத்தை தொடங்குங்கள்.” என்று அந்த பெண் குறிப்பிட்டிருக்கிறார். தற்போது இந்த போஸ்ட், பல்வேறான விவாதங்களை இணையதளத்தில் கிளப்பியிருக்கிறது.

மேலும் படிக்க | 23 வயதில் ஓய்வு..! அதுவும் பல கோடிகளுடன்..! என்ன வேலை செய்தார்..!

மேலும் படிக்க | 66 வயதில் 10வது குழந்தையை பெற்றெடுத்த பெண்! இரும்பு பெண்தான் பாேல..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News