சகோதரனின் இறந்த உடலுடம் ஒரே வீட்டில் வசிக்கும் பாசமலர்!
தாய் பாசத்திற்கு இந்தியனை மிஞ்ச யாரும் இல்லை என்ற பலர் கூறுவது உண்டு. ஆனால் அமெரிக்காவே சேர்ந்த ஒருவர் இதையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு ஒரு காரியத்தினை செய்து உலக மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
வொய்ட் பியர் லேக்(யு.எஸ்): தாய் பாசத்திற்கு இந்தியனை மிஞ்ச யாரும் இல்லை என்ற பலர் கூறுவது உண்டு. ஆனால் அமெரிக்காவே சேர்ந்த ஒருவர் இதையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு ஒரு காரியத்தினை செய்து உலக மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
அமெரிக்காவின் வொய்ட் பியர் லேக் பகுதியை சேர்ந்தவர் ராபர்ட் ஜேம்ஸ் குயுப்லர்(60). சமிபத்தில் இவரது குடியிருப்பில் இருந்து அழுகிய நிலையில் இரண்டு சடலங்கள் காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அவரது குடியிருப்பில் இருந்து துற்நாற்றம் வருவதாக சுற்றார் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரது வீட்டினை சேதனையிடுகையில் இந்த அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
கண்டெடுக்கப்பட்ட சடங்களில் ஒன்று அவரது தாயார் எவ்ளின் குயுப்லர்(94). ஒரு வருடத்திற்கு முன்னர் உடல்நல குறைவால் இறந்துள்ளார். மற்றொரு உடல் அவரது இட்டை(சகோதரர்). தன் தாயின் இறப்புக்கு முன்னதாகவே இவரும் இறந்துள்ளார். எனவே இவரது உடலின் எலும்கூடு மட்டுமே மீட்கப்பட்டது.
இதுகுறித்து கியுப்லர் கூறுகையில், தனது தாய் மற்றும் சகோதரனை பிரிந்து வாழ மனம் இல்லாததால் அவர்கள் இறந்தபின்பும் அவரது இறந்த உடல்களை தனது வீட்டிலே வைத்து பராமரித்து வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இது தொடர்பாக கூடுதல் விவிரங்களை அறிய காவல்துறையினர் வழக்கு தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்