)
Miss Universe Beauty Dies: முன்னாள் மிஸ்ஸ்யூனிவர்ஸ் போட்டியாளர் மற்றும் மாடல் க்சேனியா அலெக்சாண்ட்ரோவா (Kseniya Alexandrova), நான்கு மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டிருந்த நிலையில், ஒரு கார் விபத்தில் உயிரிழந்தார்.
என்ன நடந்தது?
ஜூலை 5 அன்று ரஷ்யாவின் ட்வெர் ஓப்லாஸ்ட் (Tver Oblast) பகுதியில், கணவருடன் காரில் பயணம் செய்தபோது, திடீரென ஒரு பெரிய மான் (Elk) சாலையில் பாய்ந்து வந்தது. அது நேரடியாக காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்து உள்ளே பாய்ந்தது. அந்த நேரத்தில், அலெக்சாண்ட்ரோவா போர்ஷ் பனாமிரா காரின் பயணியர் இருக்கையில் அமர்ந்து இருந்தார். மான் மோதியதில் அவரின் தலையில் கடுமையான காயம் ஏற்பட்டது. அதனால் அவர் கோமாவில் சென்றுவிட்டு, சிகிச்சை பலனளிக்காமல் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். ஆனால், அவரது கணவர் உயிர் தப்பினார்.

கணவரின் வேதனை:
“அந்த மான் திடீரென பாய்ந்து வந்தது. ஒரு விநாடிக்குள் கார் மீது மோதியது. எனக்கு எதையும் செய்ய நேரம் கிடைக்கவில்லை. அதிர்ச்சியுடன் க்சேனியாவின் தலையை நேரடியாக மோதி, அவர் மயக்கத்திலேயே இருந்தார்” என்று அவரது கணவர் ரஷ்ய ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
திருமணமாகி நான்கு மாதங்களில் சோகம்:
க்சேனியா, 2025 மார்ச் 22 அன்று திருமணம் செய்து கொண்டார். திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அவர், “அந்த நாளில் கிடைத்த மகிழ்ச்சி, அன்பு, உணர்ச்சிகளை நான் இன்னும் மனதில் கொண்டிருக்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார். ஆனால், நான்கு மாதங்களிலேயே இந்த சோக விபத்து நடந்துள்ளது. மேலும், அவரது மறைவுக்கு பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். “அவர் எப்போதும் பிரகாசமாக, திறமையாக, அற்புதமான நபராக இருந்தார்” என்று அவரது மாடலிங் ஏஜென்சி Modus Vivendis அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அவரது சாதனைகள்:
2017 ஆம் ஆண்டு லாஸ் வேகாஸில் நடந்த மிஸ்ஸ்யூனிவர்ஸ் போட்டியில் ரஷ்யாவை பிரதிநிதித்துவம் செய்தவர் க்சேனியா. அந்த போட்டியில் Vice Miss Russia பட்டமும் பெற்றிருந்தார்.

சுருக்கமாக:
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ