இந்தியாவில் மல்கோவா, இமாம் பசந்த், கிளி மூக்கு மாம்பழம், பங்கனபள்ளி, துசேரி, அல்போன்சா, போன்ற பல வகையான மாம்பழங்கள் பயிரிடப்படுகின்றன. ஆனால் உலகின் மிக விலையுயர்ந்த மாம்பழம் எது, அது எங்கு விளைகிறது என்று உங்களுக்குத் தெரியுமா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகின் மிக விலை உயர்ந்த மாம்பழம், ஊதா மாம்பழம் அல்லது மியாசாகி மாம்பழம் ஆகும். ஜப்பானில் உள்ள மியாசாகி நகரில் பயிரிடப்படும் உலகின் மிக விலையுயர்ந்த மாம்பழம், சர்வதேச சந்தையில் ஒரு கிலோ சுமார் ரூ.2.70 லட்சம் என்ற அளவில் விற்கப்படுகிறது. 


மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் இரண்டு வகையான மா மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இந்த மரங்களின் பாதுகாவலுக்காக, நாய்கள் மரத்தின் அருகில் காவல் காக்கின்றன.


மியாசாகி மாம்பழம் 


உலகின் மிக விலையுயர்ந்த மாம்பழங்களில் ஒன்றான மியாசாகி மாம்பழம் கடந்த ஆண்டு சர்வதேச சந்தையில் ஒரு கிலோ ரூ.2.70 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த மாம்பழங்கள் ‘தையோ-நோ-டோமாகோ’ அல்லது ‘எக்ஸ் ஆஃப் சன்ஷைன்’ என முத்திரை குத்தப்பட்டு விற்கப்படுகின்றன. இது மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் இல்லாமல், பழுத்தவுடன் ஊதா நிறத்தில் இருந்து அடர் சிவப்பு நிறமாக மாறும்.


மேலும் படிக்க | மாம்பழமாம் மாம்பழம்: சுவை மட்டுமல்ல, இது அளிக்கும் ஆரோக்கிய நன்மைகளும் ஏராளம்


இது டைனோசரின் முட்டைகள் போன்ற தோற்றத்தில் இருக்கும். அதன் அடர் சிவப்பு நிறம் தோற்றத்தின் காரணமாக, மியாசாகி மாம்பழங்கள் டிராகன் முட்டை என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த மாம்பழங்கள் 350 கிராம் எடையுடன், 15 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமான சர்க்கரையையும் கொண்டுள்ளது.


மியாசாகி மாம்பழங்கள் எங்கு வளர்க்கப்படுகின்றன


மியாசாகி மாம்பழங்களை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு ஜப்பான். மியாசாகி மாம்பழங்கள் முக்கியமாக ஜப்பானின் கியூஷு மாகாணத்தில் உள்ள மியாசாகி நகரில் வளர்க்கப்படுகின்றன. மியாசாகியில் இந்த மாம்பழத்தின் உற்பத்தி 70 மற்றும் 80 களில் தொடங்கியது. இந்த மாம்பழத்தின் உற்பத்திக்கு சாதகமான காலநிலை இந்த நகரம் நிலவுகிறது. வெப்பமான வானிலை, நீடித்த சூரிய ஒளி மற்றும் ஏராளமான மழைப்பொழிவு ஆகிய அனைத்தும் இருப்பதால், இந்த நகரில் இவை பயிரிடப்படுகின்றன.


இந்தியாவில் விளையும் மியாசாகி மாம்பழம்


மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள ஒரு தம்பதியினர் தங்கள் தோட்டத்தில் இரண்டு மியாசாகி மா மரங்களை நட்டுள்ளனர். அவர்கள் ரயில் பயணத்தின் போது சென்னைக்கு பயணித்த ஒருவரிடமிருந்து மரக்கன்றுகளை பெற்றதாக கூறப்படுகிறது. அவர்கள் மரக்கன்றுகளைப் பெற்ற நேரத்தில், இது உலகின் மிக விலையுயர்ந்த மாம்பழம் என்பது அவர்களுக்குத் தெரியாது. பின்னர் அவர்கள் மாம்பழத்தின் நிறம் வித்தியாசமாக இருப்பதைக் கண்டறிந்தனர், இறுதியில் அவர்கள் உலகின் மிக விலையுயர்ந்த மாம்பழங்களை பயிரிட்டுள்ளனர் என்பதை அறிந்து இப்போது அந்த மாம்பழங்களை ‘தாமினி’ என்று பெயரிட்டுள்ளனர்.


திருடர்கள் இரண்டு மாம்பழங்களைத் திருட முயன்றதாகக் கூறப்பட்டதை அடுத்து, அவர்கள் இப்போது நான்கு பாதுகாப்புப் பணியாளர்களையும் ஆறு நாய்களையும் காவலுக்கு அமர்த்தியுள்ளனர். கடந்த ஆண்டு, ஒரு கிலோ மாம்பழத்திற்கு 21,000 ரூபாய் தருவதாக தொழிலதிபர் ஒருவர் கூறியிருந்தார். ஆனால் அவர்கள் அதை மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. “முதல் மாம்பழத்தை கடவுளுக்கு” ​​காணிக்கையாக்க இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.


மேலும் படிக்க | இதய துடிப்பை சீராக்கும் ‘பொட்டாஷியம்’; இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR