)
World Bizarre News: பலரையும் அதிரவைக்கும் சம்பவம் ஒன்று தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதாவது பெண் ஒருவர் அவரது மகனையே திருமணம் செய்துகொண்ட சம்பவம்தான் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது எப்படி நடந்தது, அந்த பெண்ணும் அவரது மகனும் தற்போது எந்த நிலையில் உள்ளனர் என்பதை இங்கு காணலாம்.
இந்த சம்பவம் இருவரின் வாழ்க்கையையும் பெரிதும் பாதிக்கும் என்பதால் இதில் பாதிக்கப்பட்டவர்கள் எந்த நாட்டை, எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிவிக்கப்படவில்லை. அதேநேரத்தில், அவர்களின் பெயரும் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு பெண் தாயாக இருந்து, பின்னர் மனைவியாக மாறிய ஒரு வினோத கதை எனலாம். இளம் வயதிலேயே குழந்தையை பெற்றெடுத்ததால், பொருளாதார நிலை காரணமாக அந்த குழந்தையை வேறொருவருக்கு அந்த பெண் தத்துக்கொடுத்துள்ளார். அதன்பின், அவர்களுடன் அந்த பெண் தொடர்பில் இருக்கவில்லை. அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று கூட அவருக்கு தெரியவில்லை.
அந்த வகையில், பல ஆண்டுகள் கழித்து அந்த பெண்மணி ஒரு இளைஞனை சந்தித்து, அவனுடன் காதல் வசப்படுகிறார். தன்னைவிட வயதில் குறைந்த அவனையே திருமணமும் செய்துகொள்கிறார். திருமணம் செய்துகொண்டது மட்டுமின்றி அவனுடன் இரண்டு குழந்தைகளையும் பெற்றெடுக்கிறார்.
ஒரு கட்டத்தில், அவர்களின் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து முடிவு செய்ய இந்த தம்பதியினர் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போதுதான் அந்த பரிசோதனை முடிவு அந்த அதிர்ச்சிகரமான விஷயத்தை உறுதிசெய்திருக்கிறது. அதாவது, சுமார் 36 ஆண்டுகளுக்கு முன் அந்த பெண்மணி பெற்றெடுத்த மகன்தான் தற்போது அவரின் கணவன் என்பது தெரியவந்திருக்கிறது. இது இருத்தரப்புக்கும் தலையில் பேரிடியாக விழுந்துள்ளது. அந்த இளைஞனுக்கும், பெண்ணுக்கும் இனி என்ன செய்வது என்றே தெரியாத துயரம் நிகழ்ந்திருக்கிறது.
கடந்த 2015ஆம் ஆண்டில் அந்த பெண், அந்த இளைஞனை சந்தித்துள்ளார். அப்போது அந்த இளைஞனுக்கு வயது 21 ஆகும். அதன்பின் அவர்களுக்குள் திருமணம் நடந்து 2016 மற்றும் 2017 என அடுத்தடுத்து இரண்டு குழநதைகள் பிறந்துள்ளன.
அந்த இளைஞன் யார் என்று முன்னரே தெரியாதா என அந்த பெண்ணிடம் கேட்டால், தனக்கு அது தெரியவில்லை என மன வருத்தத்துடன் கூறியுள்ளார். தற்போது இருவரும் பிரிந்துவிட்டனர், மேலும் அவர்களின் குழந்தைகளின் எதிர்காலம் தற்போது வரை நிச்சயமற்றதாகவே உள்ளது.
இதுபோல் ரத்த உறவுக்குள் திருமணம் செய்துகொண்டு குழந்தைகளை பெற்றெடுப்பது என்பதில் அதிகம் பாதிக்கப்படுவது அவர்களின் குழந்தைகள்தான். ரத்த உறவுக்குள் திருமணம் செய்துகொண்டு குழந்தை பெறுவது உயிரியல் ரீதியாக பாதகமானது. ஏனெனில் குழந்தை இரு பெற்றோரிடம் இருந்தும் தீங்கு விளைவிக்கும் பண்புகளைப் பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள். இதனால் மரபணு கோளாறுகள், பிறப்பு குறைபாடுகள் மற்றும் இனப்பெருக்க சாத்தியத்தை குறைப்பது போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ