ஏலியன்களை கவர நிர்வாண புகைப்படங்களை அனுப்பும் நாசா!

விண்வெளியில் உள்ள வேற்றுகிரக வாசிகளோடு தொடர்பு கொள்ளும் நோக்கில் ஆண் மற்றும் பெண்ணின் நிர்வாண புகைப்படங்களை நாசா அனுப்ப திட்டமிட்டுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : May 5, 2022, 07:24 PM IST
  • ஏலியன்களை கண்டுபிடிக்க புதிய திட்டம்.
  • நாசா செய்த புதிய முயற்சி.
  • பல ஆண்டுகளாக ஏலியன்களை கண்டுபிடிக்க திட்டம்.
ஏலியன்களை கவர நிர்வாண புகைப்படங்களை அனுப்பும் நாசா! title=

பல ஆண்டு காலமாகவே விஞ்ஞானிகள் பூமியை தவிர்த்து மற்ற கிரகங்களில் உயிரினங்கள் எதுவும் வாழ்கின்றதா என்று தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.  ஏலியன்கள் இருப்பதாக அடிக்கடி சில செய்திகள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றனர், ஏலியன்கள் இருக்கிறதா இல்லையா என்பது மர்மமாகவே இருந்து வருகிறது.  சில இடங்களில் பறக்கும் தட்டை பார்த்ததாகவும், சில இடத்தில் ஏலியன் வந்து இறங்கியதாகவும் பல செய்திகள் இணையத்தில் உலவிக்கொண்டு இருக்கிறது.  ஆனால் இவை பற்றிய உண்மையான தகவல்கள் எதுவும் இன்றளவும் உறுதிப்படுத்தப்படவில்லை.  இருப்பினும் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஏலியன்கள் பற்றி ஆய்வுகளை செய்துகொண்டே தான் இருக்கின்றனர்.

மேலும் படிக்க | பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை...தாலிபன்களின் புதிய கட்டுப்பாடு

இந்த ஆராய்ச்சியின் அடுத்தகட்ட முயற்சியாக தற்போது நாசா ஒரு திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது.  அதன்படி ஆண் மற்றும் பெண் ஆகியோரின் நிர்வாண படங்களை விண்வெளியில் ஒளிர செய்து ஏலியன்களை கவரும் முயற்சியை நாசா செய்யவிருக்கிறது.  'பீகன் இன் தி கேலக்சி' என்கிற திட்டத்தின் மூலம் ஏலியன்களுக்கு சில செய்திகளை நாசா அனுப்பி வருகிறது, இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக தற்போது இத்தனையும் நாசா செய்கிறது.  இதில் நிர்வாண புகைப்படங்களாக இல்லாமல் ஆண் மற்றும் பெண்ணின் டிஎன்ஆ வரைபடத்திற்கு அடுத்ததாக உள்ள பிக்ஸலேட் போன்ற புகைப்படங்களை தான் அனுப்புகிறது, இதில் இருவரும் 'ஹலோ' என்று கை அசைக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

alien

பைனரி குறியீடுகளுடன் இப்படம் அமைந்துள்ளது, பைனரி குறியீடுகள் ஏலியன்களுக்கு புரியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர், பைனரி என்பது கணிதத்தின் எளிமையான வடிவமாகும்.  விஞ்ஞானிகள் இதுபோன்று நிர்வாண புகைப்படங்களை அனுப்புவது இதுவே முதல் தடவியல்ல, இதற்கு முன்னர் 1972-ல் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட பயோனியர்-10 மற்றும் 1973-ல் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட பயோனியர்-11 ஆகியவற்றில் மனிதர்களின் நிர்வாண வரைப்படங்கள் இடம்பெற்று இருந்தன.

a1

மேலும் படிக்க | இனி ட்விட்டரை பயன்படுத்த கட்டணம் வசூல்; எலோன் மஸ்கின் அதிரடி திட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

 

Trending News