Japan New Baba Vanga Prediction: ஜப்பானைச் சேர்ந்த ரியோ டட்சுகி என்ற பெண்மணி காமிக்ஸ் கலைஞர் ஆவார். மங்கா காமிக்ஸ் எனப்படும் கலையில் இவர் பிரபலமான கலைஞராக இருந்தார். இவர் கடந்த 1999ஆம் ஆண்டு The Future I Saw என்ற பெயரில் மங்கா காமிக்ஸ் புத்தகம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானில் இயற்கை பேரிடர் நிகழும் என்பதை கணித்திருந்தார்.
New Baba Vanga Prediction: கணித்தது 2011இல் நடந்ததா?
இவர் கணித்தது போலவே, 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் தேதி அன்று வடக்கு ஜப்பானின் டோஹோகு பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தால் கடலில் சுனாமி ஏற்பட்டது. இந்த சுனாமியால் உயிரிழந்தார் மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை சுமார் 18,500 ஆகும். ரியோ டட்சுகி கணித்தபடியே இயற்கை பேரழிவு ஜப்பானை தாக்கியதாக கூறப்பட்டது. இதனால், ரியோ டட்சுகி ஜப்பானில் மிகவும் பிரபலமடைந்தார்.
New Baba Vanga Prediction: ரியோ டட்சுகி கணிப்புகள் என்னென்ன?
ரியோ டட்சுகி இவற்றையெல்லாம் கனவில் கண்டு, அதன்பின் அதனை மங்கா காமிக்ஸ் வடிவில் வெளிப்படுத்துவாராம். இவர் இங்கிலாந்து இளவரசி டையானா, பிரபல பாடகர் ஃப்ரெடி மெர்குரி ஆகியோரின் மரணத்தையும் முன்கூட்டியே கணித்ததாக இவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். மேலும், ரியோ டட்சுகி அவரது Future I Saw காமிக் புத்தகத்தில் 2020ஆம் ஆம்டில் வைரஸ் தாக்குதல் குறித்து குறிப்பிட்டிருந்தார், இதன்மூலம் கொரோனா குறித்தும் அவர் முன்கூட்டியே கணித்ததாக கூறப்படுகிறது. இவர் 1995ஆம் ஆண்டு நடந்த ஜப்பானின் கோபே நிலநடுக்கத்தை கணித்ததாக கூறப்படுகிறது. இதில் 6 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இதுதான் அவரது முதல் கணிப்பு என்றும் கூறப்படுகிறது.
New Baba Vanga Prediction: புதிய பாபா வாங்காவின் வைரலாகும் கணிப்பு
ஜப்பானின் ரியோ டட்சுகி எதிர்காலத்தையும், பேரழிவையும் முன்கூட்டியே கணிப்பதால் இவரை பலரும் 'புதிய பாபா வாங்கா' என்றழைக்கின்றனர். இந்நிலையில், புதிய பாபா வாங்காவின் கணிப்பு ஒன்று ஜப்பானிலும், உலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, 2025ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஜப்பானை சுனாமி தாக்கும் என கணித்திருக்கிறாராம். இதுகுறித்த தகவல்கள் வெளியானதும் பலரும் தங்களின் ஜப்பான் பயணத்தை ரத்து செய்துள்ளனர். ரியோ டட்சுகி வரும் 2025ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி ஜப்பானுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையில் கடலுக்கடியில் ஏற்படும் பேரழிவால் சுனாமி அல்லது பூகம்பம் வரலாம் என கணித்துள்ளாராம்.
New Baba Vanga Prediction: அச்சத்தில் சுற்றுலா பயணிகள்
ரியோ டாட்சுகியின் கணிப்பை தொடர்ந்து, ஜப்பானில் விமான முன்பதிவுகள் 83 சதவீதம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. கிழக்கு ஆசியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் ஜூலை 5ஆம் தேதி பேரழிவு ஏற்படும் என்ற அச்சம் காரணமாக தங்களின் பயணத் திட்டங்களை ரத்து செய்கின்றனர். ப்ளூம்பெர்க் உளவுத்துறை அளித்த தகவலின்படி, ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் வரும் பயணிகளின் சராசரி முன்பதிவுகள் ஆண்டுக்கு ஆண்டு 50% குறைந்துள்ளன, ஜூன் மாத இறுதிக்கும் ஜூலை மாத தொடக்கத்திற்கும் இடையிலான முன்பதிவுகள் 83% வரை சரிந்துள்ளன.
New Baba Vanga Prediction: ஜப்பான் கூறுவது என்ன?
இதையடுத்து, ரியோ டாட்சுகியின் கணிப்புகள் அறிவியல் பூர்வமானது அல்ல என்றும் அவை முற்றிலும் ஆதாரமற்றவை என்றும் கூறி, இதுபோன்ற கணிப்புகளை புறந்தள்ளுமாறு ஜப்பானிய அதிகாரிகள் பொதுமக்களை அறிவுறுத்துகின்றனர். இதுகுறித்து ஜப்பானின் மியாகி மாகாண கவர்னர் யோஷிஹிரோ முராய் கூறுகையில், "சமூக ஊடகங்களில் அறிவியல்பூர்வமற்ற வதந்திகள் பரவுவது சுற்றுலாவைப் பாதித்தால் அது ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கும். இதில் கவலைப்பட எந்த காரணமும் இல்லை, ஏனென்றால் ஜப்பானியர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லவில்லை, மக்கள் வதந்திகளைப் புறக்கணித்து வருகை தருவார்கள் என்று நம்புகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | இஸ்ரேல்-ஈரான் போர் இந்தியாவையும் பாதிக்குமா? பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயருமா?
மேலும் படிக்க | 11 A சீட்: அகமதாபாத் போல் தாய்லாந்திலும் உயிர்தப்பிய ஒருவர் - ராசியா? மர்மமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









