மீண்டும் படையெடுக்கும் கொரோனா.. இந்தியாவில் பாதிப்பு இருக்கா?

கொரோனா நோய் தொற்று மீண்டும் பரவ தொடங்கி உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. 

Written by - R Balaji | Last Updated : May 19, 2025, 03:17 PM IST
  • கொரோனா நோய் தொற்று மீண்டும் பரவ தொடங்கி உள்ளது
  • இந்தியாவில் பரவுகிறதா?
மீண்டும் படையெடுக்கும் கொரோனா.. இந்தியாவில் பாதிப்பு இருக்கா?

கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா என்ற வைரஸ் பரவியது. இந்த வைரஸ் இந்தியா உட்பட உலகம் முழுவதும் பரவி பொதுமக்களை அச்சுறுத்தியது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உயிர்களை இழந்தனர். அதேபோல், இந்த கொடிய வைரஸால், பல நாடுகளின் பொருளாதாரம் பலத்த சேதத்தை சந்தித்தது. இன்னமும் கூட பல நாடுகள் அந்த சரிவில் இருந்து மீளுவதற்கு கஷ்டப்பட்டு வருகிறது. 

இந்த கொடிய வைரஸை உயர்தர மருத்துவம் மற்றும் தடுப்பூசியின் மூலம் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து படிப்படியாக குறைந்த கொரோனா வைரஸ், பின்னர் அது குறித்த தகவல்கள் முற்றிலுமாக நின்றது. இந்த நிலையில், கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. சிங்கப்பூர், ஹாங்காங், தாய்லாந்து போன்ற நாடுகளில் கொரோனாவால் மக்கள் மீண்டும் பாதிப்படைக்கின்றனர் என்ற தகவல்கள் வெளியாகி வருகிறது. 

சிங்கப்பூரில் மட்டும் இம்மாத தொடக்கத்தில் சுமார் 14000க்கும் மேற்பட்ட புதிய தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஏப்ரல் மாத இறுதியில் 11,100ஆக இருந்த தொற்று, அடுத்த ஒரு வாரத்தில் 3000க்கும் மேற்பட்ட தொற்று அதிகரித்துள்ளது. தற்போதைய கொரோனா மாறுபாடுகள் முந்தியதை விட அதிகமாக பரவும் திறன் கொண்டதா என்பதை இன்னும் உறுதி படுத்தவில்லை என்றாலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு காரணமாகே புதிய கொரோனா அலையை சந்திக்க நேர்ந்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அதே சமயம் ஜேஎன் - 1 எனப்படும் ஒமைக்ரான் பிஏ.2.86 என்ற துணை வேரியண்ட் மிக வேகமாக பரவுவதால் மருத்துவ உலகம் அதிர்ச்சியில் உள்ளது. 

பல்வேறு நாடுகளின் மருத்துவர்கள் புதிய ஜேஎன் - 1 கொரோனா வேரியண்ட் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இது பிஏ.2.86 வைரஸின் தொடர்ச்சி என கூறுகின்றனர். அதேபோல் ஜேஎன் - 1 வைரஸ் பிஏ 2.86 வைரஸில் இருந்து கூடுதலாக 30 மாற்றங்களை கொண்டுள்ளதாகவும் இது மனித நோய் எதிர்ப்பு சக்தியை தாண்டி வேகமாக பரவுவதாகவும் கூறுகின்றனர். இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று பரவல் பெரிய அளவில் இல்லை என கூறப்படுகிறது. இன்றைய நிலவரப்படி, இந்தியாவில் 93 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஜேஎன் - 1 வைரஸின் பாதிப்பு முந்தைய கொரோனா தொற்றை போதான் இருக்கும் என கூறப்படுகிறது. காய்ச்சல், தொண்டை வலி, தலைவலி, உடல் வலி, வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்படும். இது போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என சுகாதாரத்துறை வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். 

மேலும் படிங்க: ஜோ பைடனுக்கு புரோஸ்டேட் கேன்சர்... எலும்பு வரை பரவிய புற்றுநோய்!

மேலும் படிங்க: லஷ்கர் பயங்கரவாதி சுட்டுக்கொலை... பாகிஸ்தானில் பயங்கரம் - யார் இந்த சைபுல்லா காலித்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News