)
அமெரிக்காவில் ட்ரம்ப் அதிபராக பெற்றுப்பேற்றத்தில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் மிகவும் முக்கியமானது, விசா நடைமுறைகளை கடுமையாக்குவது. ஏற்கனவே வெளிநாட்டவர்கள் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு வருகிறார். சமீபத்தில் கலிபோர்னியாவில் கூட பலரும் போராட்டத்தில் குதித்தனர். இப்படி பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது அமெரிக்கா. இதனால், விசா பெற முடியாமல் பலரும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தியர்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியை வெளியிட்டிருக்கிறது நியூசிலாந்து. அதாவது பெற்றோர் பூஸ்ட் விசா (Parent Boost Visa) என்ற ஒரு திட்டத்தை நியூசிலாந்து அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களின் பெற்றோர் நியூசிலாந்து நாட்டில் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்காமல் 10 ஆண்டுகள் வரை அந்நாட்டில் வசிக்க முடியும்.
இந்த பெற்றோர் பூஸ்ட் விசாவை பெறுவதன் மூலம் நியூசிலாந்தில் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்க தேவையில்லை. இந்த விசாவிற்கு வரும் செப்டம்பர் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம். ஆனால் இது நிரந்தர குடியுரிமைக்கான ஆவணம் அல்ல. அதேநேரம் இந்த விசாவை பெறுவதன் மூலம் பல முறை எவ்வித சிக்கலும் இல்லாமல், நியூசிலாந்து நாட்டிற்கு சென்று வரலாம். இந்த விசா முதலில் 5 வருடத்திற்கு வழங்கப்படும். பின்னர் இந்த மேலும், 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும்.
யார் விண்ணப்பிக்கலாம்
நியூசிலாந்து குடிமக்களின் பெற்றோர்கள் அல்லது நிரந்தர குடியிருப்பாளர்களின் இந்திய பெற்றோர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும், தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் இருந்தார், அவர்களும் இந்த விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்.
அதே சமயம், பொதுவாக விசாக்களை பெறும்போது, அடிப்படை ஆங்கல அறிவு கண்டிப்பாக இருக்க வேண்டும். ஆனால் இந்த விசாவை பெற ஆங்கில மொழி அறிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆங்கிலம் பேச தெரியாதவர்களும் இந்த விசாவை பெற முடியும்.
நிபந்தனைகள்
பெற்றோரை பாத்துக்கொள்ள போதுமான வருவாய் இருக்கிறது என்பதை அங்குள்ள இந்திய குடும்பங்கள் நியூசிலாந்து அரசிடம் காட்ட வேண்டும். அப்படி இல்லை என்றால், இங்கிருந்து செல்லும் பெற்றோர்கள் தங்கள் நிதி ஆதாரத்தை காட்ட வேண்டும். அதேபோல் இந்த விசாவின் மூலம் நியூசிலாந்துக்கு வருவோர் அங்கு வேலை செய்ய முடியாது. ஆனால் வருடத்திற்கு மூன்று மாதங்கள் வரை படிக்க முடியும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ