உலகப் போர் அச்சம்? ஈரான்-இஸ்ரேல் மோதல் நடுவே... வட கொரியாவின் ஏவுகணை அட்டாக்!

North Korea Fires Ballistic Missiles: மத்திய கிழக்கில் இஸ்ரேல், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், வட கொரியா ஜப்பான் மற்றும் தென் கொரியாவை நோக்கி சுமார் 10 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Mar 14, 2026, 05:50 PM IST
உலகப் போர் அச்சம்? ஈரான்-இஸ்ரேல் மோதல் நடுவே... வட கொரியாவின் ஏவுகணை அட்டாக்!

வட கொரியா ஏவுகணை செய்திகள்: மத்திய கிழக்கில் பதற்றம் தொடர்ந்து நீடிக்கிறது. இஸ்ரேல், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நடந்து வரும் போர் இன்று 15-வது நாளை எட்டியுள்ளது. மார்ச் 14 காலை, ஈரானின் கார்க் தீவு (Kharg Island) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக செய்தி வெளியானது. அதேநேரம் வடகொரியாவிலிருந்தும் ஒரு முக்கிய செய்தி வருகிறது.  மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், வட கொரியா ஏவுகணைகளை ஏவியிருப்பது சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

Add Zee News as a Preferred Source

ஜப்பான் மற்றும் தென்கொரியாவை நோக்கி சில ஏவுகணைகளை வடகொரியா ஏவியுள்ளது. இந்த ஏவுகணைகள் எங்கே விழுந்தன? அவை எந்த வகையான ஏவுகணைகள்? இது குறித்து தென்கொரியா, வடகொரியா மற்றும் ஜப்பான் என்ன கூறியுள்ளன? அனைத்து தகவல்களையும் பார்ப்போம்.

வடகொரியாவின் ஏவுகணை வல்லமை

வடகொரியாவின் ஏவுகணை கையிருப்பு (Arsenal) மிகப்பெரியது. அவர்களிடம் 15,000 கி.மீ. தூரம் வரை சென்று அமெரிக்காவைத் தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகள் உள்ளன. இவை அமெரிக்காவை அச்சுறுத்த அல்லது அழுத்தம் கொடுக்க உருவாக்கப்பட்டவை.

என்ன வகையான ஏவுகணைகள் ஏவப்பட்டது?

தற்போது தென்கொரிய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சுமார் 10 அடையாளம் தெரியாத பாலிஸ்டிக் ஏவுகணைகள் (Ballistic Missiles) ஏவப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இவை நோடாங் (Nodong) வகை ஏவுகணைகளாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதேநேரம் தென்கொரிய ராணுவத்தை பொறுத்தவரை  இன்னும் தெளிவான தகவல் இல்லை. ஆய்வு செய்து வருகின்றனர்.

மறுபுறம் ஜப்பான், வடகொரியாவில் இருந்து பாலிஸ்டிக் ஏவுகணை போன்ற ஒன்று ஏவப்பட்டது என்று கூறுகிறது. ஜப்பான் இன்னும் இதை ஆய்வு செய்து வருகிறது. அவர்கள் 'புரொஜெக்டைல்' (Projectile) என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளனர். வான்வழித் தாக்குதலின் போது காற்றில் பயணிக்கும் எந்தவொரு பொருளையும் குறிக்க இந்த வார்த்தை பயன்படுத்தப்படும். எனவே அது பாலிஸ்டிக் ஏவுகணையா, க்ரூஸ் ஏவுகணையா அல்லது வேறு ஏதேனும் ஆயுதமா என்பதை அவர்கள் உறுதிப்படுத்தி வருகின்றனர். 

வடகொரியா வீசிய ஏவுகணை எங்கு விழுந்தன?

வடகொரியாவிலிருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணைகள் அனைத்தும் ஜப்பான் மற்றும் தென் கொரியாவிற்கு இடைப்பட்ட கடல் பகுதியில் (Sea of Japan) விழுந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வடகொரியா ஏவுகணை தென் கொரியாவின் ரியாக்சன் என்ன?

வட கொரியாவின் இந்த நடவடிக்கையை ஒரு "ஆத்திரமூட்டும் செயல்" என்று தென் கொரியா கண்டித்துள்ளது. தனது ராணுவத்தை தயார் நிலையில் வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

வடகொரியா ஏவுகணை ஜப்பானின் ரியாக்சன் என்ன?

ஜப்பான் அரசு இதை ஒரு "கடுமையான அச்சுறுத்தல்" என்று கூறியுள்ளது. இந்த ஏவுகணைகள் எங்கு விழுந்தன மற்றும் அவற்றின் தன்மை என்ன என்பதை ஆராய ஒரு சிறப்பு குழுவை அமைத்துள்ளது.

வடகொரியாவின் நோடாங் ஏவுகணையின் சிறப்பு என்ன? 

இந்தத் தாக்குதலுக்கு வடகொரியா 'நோடாங்' (Nodong) ரக பாலிஸ்டிக் ஏவுகணையைப் பயன்படுத்தியிருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் வடகொரியாவிலிருந்து ஜப்பானுக்கு இடைப்பட்ட தூரம் சுமார் 1200 கி.மீ. ஆகும். இந்த ஏவுகணையின் வரம்பு (Range) 1500 கி.மீ. பொதுவாக 1500 கி.மீ. இலக்கைத் தாக்க 4000 கி.மீ. வரம்பு கொண்ட ஏவுகணையைப் பயன்படுத்த மாட்டார்கள். எனவே நோடாங் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனத்`எனக் கூறப்படுகிறது.

வடகொரியாவின் க்ரூஸ் ஏவுகணை சோதனை

மார்ச் 10ஆம் தேதிதான் கிம் ஜாங் உன் க்ரூஸ் ஏவுகணையைச் சோதித்தார். அவர் அடிக்கடி இத்தகைய சோதனைகளைச் செய்கிறார். இது உலகிற்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு முயற்சியாகவும், ஈரானுக்குச் செய்தது போல எங்களை ஒடுக்க முடியாது என்று அமெரிக்காவிற்கு காட்டும் ஒரு செயலாகவும் இருக்கலாம்.

வடகொரியா ஏவுகணையை ஏவ காரணம் என்ன?

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தின் பின்னணியில், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் 'தாட்' (THAAD) வான் பாதுகாப்பு அமைப்புகள் அங்கிருந்து மத்திய கிழக்குக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது 1000 கி.மீ. வரம்பு கொண்ட மிகவும் மேம்பட்ட பாதுகாப்பு அமைப்பு. இது தென்கொரியா மற்றும் ஜப்பானில் ரகசிய இடங்களில் நிறுத்தப்பட்டிருந்தது. ஈரானின் ட்ரோன் தாக்குதல்களைத் தடுக்க தாட் தேவையில்லை என்றாலும், பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தடுக்க இது மிக முக்கியமானது. இந்த அமைப்புகள் மாற்றப்பட்ட பிறகு, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தனது வலிமையைக் காட்ட  தங்கள் ஏவுகணைகளை அவர்களால் கண்டறிய முடிகிறதா என்பதை வடகொரியா சோதித்துப் பார்க்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது.

வடகொரியா - அமெரிக்கா உறவு பாதிக்குமா?

டிரம்ப் தனது முந்தைய பதவிக்காலத்தில் கிம் ஜாங் உன்னுடன் பேசினார். மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த ஏவுகணைத் தாக்குதல்கள் அந்த உறவைப் பாதிக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

அதேநேரம் இது ஒரு திட்டமிட்ட செயலா அல்லது பயிற்சியின் ஒரு பகுதியா என்பது போகப்போகத்தான் தெரியும். வடகொரியாவில் எந்தவொரு ஏவுகணைச் சோதனையும் அதன் தலைவரின் நேரடி மேற்பார்வை இன்றி நடக்காது. இதுவரை வடகொரியா தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வரவில்லை. ஜப்பான் இது குறித்து விசாரிக்க ஒரு குழுவை அமைத்துள்ளது. மத்திய கிழக்கு பதற்றங்களுக்கு இடையே வடகொரியாவும் இதில் இணைந்தால், இந்த மோதல் எந்த திசையில் செல்லும் என்பதை காலம் தான் சொல்லும்.

மேலும் படிக்க | இனி இந்தியாவுக்கு பிரச்னை இல்லை... புறப்பட்ட 2 LPG கப்பல்கள் - ஹார்முஸ் ஜலசந்தியில் அனுமதி

மேலும் படிக்க | முஸ்தபா காமேனி முதல் உரை.. அமெரிக்காவுக்கு விழுந்த பலத்த அடி! ஈரான் கொடுத்த 'ஷாக்' 6 பேர் பலி

மேலும் படிக்க | ஈரான் போர்: கடந்த 10 நாட்களில் தலைகீழாக மாறிய உலகம் - நீங்கள் அறிய வேண்டிய 7 முக்கிய மாற்றங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News