Bonnie Blue: ஆபாச பட நடிகையான போனி ப்ளூ அதிரடியாக வரும் ஜூன் 15ஆம் தேதி 2000 ஆண்களுடன் உடலுறவு மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.

World Bizarre News, Bonnie Blue: இந்த நவீன இணைய யுகத்தில் வினோதமான பல்வேறு செயல்பாடுகள் அதிகம் வைரலாகி உள்ளன. இதனாலேயே பலரும் வினோதமான செயல்களில் ஈடுபட்டு பலதரப்பினரின் கவனத்தை இணையத்தில் ஈர்க்க கடுமையான பிரயத்தனங்களை செய்து வருகின்றனர். அதிலும், நீண்ட மணிநேரத்திற்கு அதிகமானோருடன் உடலுறவு கொள்வதை ஒரு சாதனையாகவும் ஒரு சில மாடல்கள் இணையத்தில் செய்துகாட்டி பிரபலத்தை தேடிக்கொள்கின்றனர்.
Bonnie Blue: 1000 பேருடன் உடலுறவு கொண்ட போனி ப்ளூ
செக்ஸ் மாராத்தான் என பொதுவான அதனை அழைக்கின்றனர். இந்த செக்ஸ் மாராத்தானில் ஈடுபட்டு இணையத்தில் அதிக கவனத்தை ஈர்த்த மாடல்களில் போனி ப்ளூவும் ஒருவர். OnlyFans என்ற ஆபாச தளத்தின் மாடலான இவர்தான் கடந்தாண்டு 1000 ஆண்களுடன் 12 மணிநேரத்தில் உடலுறவு மேற்கொண்டு சாதனை படைத்ததாக சுயதம்பட்டம் அடித்துக்கொண்டார்.
Bonnie Blue: அடுத்த 'செக்ஸ் மாராத்தான்'...?!
இந்நிலையில், போனி ப்ளூ செக்ஸ் மாராத்தானில் தனது அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்துள்ளார். அதாவது அடுத்து வரும் ஜூன் 15ஆம் தேதி அன்று 2 ஆயிரம் ஆண்களுடன் உடலுறவு மேற்கொள்ள இருப்பதாக கூறி போனி ப்ளூ அதிர்ச்சி அளித்துள்ளார்.
OF model Bonnie Blue brags about her plans to sleep with 2,000 men in one day and be “tied up in a glass box and open to the public.”
— Oli London (@OliLondonTV) June 1, 2025
Blue has told men to “get involved or just walk around and watch” as she plans the shocking 2,000 man stunt. pic.twitter.com/upUKa7dFC9
இதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராம் வீடியோவில் கூறுகையில், "ஜூன் 15ஆம் தேதி, என்னை கண்ணாடி பெட்டியில் கட்டியிருப்பார்கள், பொதுமக்களுக்கு கதவு திறந்தே இருக்கும்" என தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் அந்த வீடியோவில், ""நீங்கள் இதில் ஈடுபடவும் செய்யலாம் அல்லது சுற்றி நின்று நடப்பதை பார்த்தும் மகிழலாம், எது என்பதை நீங்களே தேர்வுசெய்யுங்கள்" என்றும் கூறியிருக்கிறார்.
Bonnie Blue: 2000 பேருக்கு அழைப்பு - வீடியோவால் பரபரப்பு
இந்த வீடியோவை அவர் கடந்த மே 29ஆம் தேதி அன்று பதிவேற்றி உள்ளார். அதில் 2 ஆயிரம் பேருடன் உடலுறவு கொள்ள இருக்கும் தனது திட்டம் குறித்து பேசியபோது, கணவன்மார்கள், தந்தைமார்கள், 18 வயதினர் உள்ளிட்டோர் தன்னுடன் உடலுறவு மேற்கொள்வதற்கு அவர் அழைப்பு விடுத்தார். "நான் 2,000 உடல்களுடன் உடலுறவு மேற்கொள்ள விரும்புகிறேன், உண்மையைச் சொன்னால், அது மிகவும் எளிதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். நான் கட்டப்பட்டிருப்பேன், பொதுமக்களுக்கு அணுகக்கூடியதாக இருக்கப் போகிறேன், நீங்கள் வந்து என்னுடன் சேர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என பேசி உள்ளார்.
Bonnie Blue: கொதிக்கும் நெட்டிசன்கள்
இந்த நிகழ்வு லண்டனில் நடைபெறும் என்பதை அவர் தெரிவித்தார். அவரின் இந்த மோசமான அறிவிப்பு சமூக வலைதளங்களில் கடும் அதிருப்தியையே சம்பாதித்துள்ளது. "அவர் ஏன் இதைச் செய்கிறார் என்று எனக்குப் புரியவில்லை," என்று ஒரு நெட்டிசன் பதிவிட்டிருந்தார். மேலும், ஒருவர், "அவளுடைய தந்தை பெருமைப்படுவார் என்று நான் பந்தயம் கட்டுகிறேன்!" என்று எழுதியிருக்கிறார். போனி ப்ளூவுக்கு கடும் எதிர்ப்புகள் இணையத்தில் உள்ளன.
Bonnie Blue: இது தவறான செயல் - மருத்துவர்கள் எச்சரிக்கை
மருத்துவர்கள் பொதுவாக இதுபோன்ற செயல்களை செய்யக்கூடாது என்றே கூறுகின்றனர். இது உடல்நிலை சார்ந்த பிரச்னைகளை மட்டுமின்றி மனநிலை சார்ந்த பிரச்னைகளையும் வரவழைக்கும் என்கின்றனர். இது ஒரு மோசமான செயல்பாடு என கூறும் மருத்துவர்கள் இதுபோன்றவற்றை ஊக்குவிக்கக்கூடாது என்றும் யாரும் இதை ஒரு முன்னுதாரணமாக எடுக்கக் கூடாது என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ