'பதற்றத்தை தணிக்க தயார்' - கவாஜா ஆசிப்... வெள்ளை கொடி காட்டுகிறதா பாகிஸ்தான்?

India Pakistan War Tension: இந்தியா உடனான பதற்றத்ததை தணிக்க தயார் என பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Written by - Sudharsan G | Last Updated : May 7, 2025, 02:38 PM IST
'பதற்றத்தை தணிக்க தயார்' - கவாஜா ஆசிப்... வெள்ளை கொடி காட்டுகிறதா பாகிஸ்தான்?

India Pakistan War Tension: இந்தியா பதற்ற நிலைமையை தணித்தால், இந்தியாவுடனான பதட்டங்களை குறைக்க பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் இன்று (மே 7) தெரிவித்தார்.

Add Zee News as a Preferred Source

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா இராணுவம் இன்று நள்ளிரவு நடத்திய தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்குப் பிறகு அவர் இந்த கருத்துகளை தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்தப்பட்டால் மட்டுமே பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என்று கவாஜா ஆசிப் கூறியதாக ப்ளூம்பெர்க் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்தால், பாகிஸ்தான் பதற்றத்தை தணிக்க முயற்சி எடுக்கும் என அவர் ப்ளூம்பெர்க் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார். கவாஜா ஆசிப் கூறுகையில்,"இது இந்தியாவால் தொடங்கப்பட்டது ஆகும். இந்தியா பின்வாங்கத் தயாராக இருந்தால், அவர்கள் தான் முதலில் ஆரம்பித்தனர், நாங்கள் அதற்கு பதிலளித்துள்ளோம். 

கடந்த 15 நாட்களாக, இந்தியாவுக்கு எதிராக நாங்கள் ஒருபோதும் விரோதமான எதையும் தொடங்க மாட்டோம் என்று கூறி வருகிறோம். ஆனால் நாங்கள் தாக்கப்பட்டால் பதிலடி கொடுப்போம். இந்தியா பின்வாங்கினால், நாங்கள் நிச்சயமாக இந்த விஷயங்களை முடித்துக்கொள்ள முயற்சிப்போம்" என கூறியிருக்கிறார். 

ஆனால், ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பின் பேசிய கவாஜா ஆசிப் மிகக் கடுமையாக இந்தியாவை தாக்கிப் பேசியிருந்தார். ஆனால் தற்போது அவரது பேச்சில் மாற்றம் தெரிகிறது. முன்னர் அவர் கூறுகையில்,"எங்களின் நிலத்தின் ஒரு அங்குலத்தைக் கூட இந்தியா ஆக்கிரமிக்க முயன்றால், அதற்கு அவர்கள் அதிக விலை கொடுக்க நேரிடும். நாங்கள் முழு பலத்துடன் பதிலடி கொடுப்போம்" என பேசியிருந்தது கவனிக்கத்தக்கது.

பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், இந்திய விமானப்படை மற்றும் இந்தியா கடற்படை இணைந்து நடத்திய ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலில் 80 பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் 9 பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் பாகிஸ்தான் பொதுமக்கள் யாரும் உயிரிழக்கவில்லை என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், பாகிஸ்தான் ராணுவ கிடங்குகள் மீதோ, உள்கட்டமைப்புகள் மீதோ தாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என்றும் விளக்கமளித்துள்ளது.

மேலும் படிக்க | 10 பேர் பலி! நானும் இறந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.. பயங்கரவாதி மசூத் அசார் கண்ணீர்

மேலும் படிக்க | 'ராணுவம் தான் நாட்டை அழித்துவிட்டது' மனம் வருந்தும் பாகிஸ்தான் இளைஞர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News