Pakistan Latest News Updates: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் நகரில் நீதிமன்றத்திற்கு வெளியே நின்றுகொண்டிருந்த காவல்துறை வாகனத்தில் நேற்று முன்தினம் (நவ. 11) வெடிகுண்டு வெடித்ததில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும், 36 பேர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்கொலைப் படை தாக்குதல் என்றும் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Pakistan: தற்கொலைப் படை தாக்குதல்
சம்பவம் நடந்த இடத்தை பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி பார்வையிட்டார். தாக்குதல் நடத்திய நபர் நீதிமன்றத்தின் வளாகத்திற்குள் நுழைய முயன்றார் என கூறப்படுகிறது. அதேநேரத்தில், ஆனால் அத்திட்டம் தோல்வியடையவே பாகிஸ்தான் நேரப்படி மதியம் 12:39 மணிக்கு நீதிமன்றத்தின் வாயிலில் ஒரு போலீஸ் வாகனத்தின் அருகே தனது வெடிபொருட்களை வெடிக்கச் செய்திருக்கிறார் என கூறப்படுகிறது. இந்த தற்கொலைப் படை தாக்குதலுக்கு பாகிஸ்தானிய தாலிபன் (TTP) அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
Pakistan: இரு முனைகளிலும் போருக்கு தயார்
இச்சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து, இச்சம்பவத்தில் ஈடுபட்ட அமைப்பு, இந்தியாவின் ஆதரவுடன் செயல்படுவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கருத்து தெரிவித்திருந்ததும் கவனிக்கத்தக்கது. தற்கொலைப் படை தாக்குதல் குறித்து பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் அதிரடியான கருத்தை தெரிவித்துள்ளார். இந்தியாவையும், ஆப்கானிஸ்தானையும் தாங்க ஒரே நேரத்தில் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
பொது நிகழ்வில் பேசிய கவாஜா ஆசிப், "இரண்டு முனைகளில் இருந்தும் போருக்கு நாம் தயாராக இருக்கிறோம். கிழக்கு பகுதியில் இருந்தும் (இந்தியா) மற்றும் மேற்கு எல்லையில் இருந்தும் (ஆப்கானிஸ்தான்) என இரண்டையும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கிறோம். முதல் சுற்றில் அல்லாஹ் நமக்கு உதவினார், இரண்டாவது சுற்றிலும் அவர் நமக்கு உதவுவார்" என்றார்.
Pakistan: வாய்ச்சவடால் விடும் கவாஜா ஆசிப்
மேலும் கவாஜா ஆசிப் அவரது X பக்கத்தில், "காபூலின் (ஆப்கானிஸ்தானின்) ஆட்சியாளர்களால் பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை நிறுத்த முடியும். ஆனால் இந்தப் போரை இஸ்லாமாபாத் வரை கொண்டு வருவதன் மூலம் காபூலில் இருந்து ஒரு செய்தி சொல்லப்படுகிறது. அதற்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்க முழு பலமும் உள்ளது" என குறிப்பிட்டுள்ளார. பாகிஸ்தானில் வளங்கள் குறைந்துவிட்ட நிலையிலும், பதற்றமான சூழல் நிலவும் நிலையிலும், தங்களது இராணுவ வலிமையை வெளிப்படுத்தும் வகையில் வாய்ச்சவடால் விடுத்திருக்கிறார் கவாஜா ஆசிப்.
Pakistan: டெல்லி சம்பவம் குறித்து கவாஜா ஆசிப்
டெல்லியில் செங்கோட்டை அருகே கடந்த நவ. 10ஆம் தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவத்தை, வெறும் சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் என கவாஜா ஆசிப் குறிப்பிட்டிருந்தது பெரும் சர்ச்சைக்குள்ளானது. "நேற்று வரை, அது ஒரு எரிவாயு சிலிண்டர் வெடிப்பு மட்டும்தான். இப்போது அவர்கள் (இந்திய அரசு) அதை ஒரு வெளிநாட்டு சதி என்று முத்திரை குத்த முயற்சிக்கிறார்கள். இந்தியா விரைவில் இதற்கு பாகிஸ்தானைக் குறை சொல்லக்கூடும்" என்றார். டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் சம்பவத்தை பயங்கரவாத சம்பவம் என இந்தியா உறுதிப்படுத்தியிருக்கிறது. இதில் 9 பேர் உயிரிழந்தனர்.
Pakistan: கவாஜா ஆசிப் கருத்தை நிராகரித்த இந்தியா
கவாஜா ஆசிப்பின் இந்த கருத்தை இந்தியா முற்றிலும் நிராகரித்துள்ளது. மேலும், இது இகவனத்தைத் திசைதிருப்பும் தீவிர முயற்சி என்றும் குற்றஞ்சாட்டி உள்ளது. பாகிஸ்தான் அமைச்சரின் பேச்சு, பாகிஸ்தானின் பதற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் உள்ளதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. குறிப்பாக டெல்லி குண்டுவெடிப்பில் ராணுவ தரத்திலான வெடிபொருள் பயன்படுத்தப்பட்டதாக தொடக்கக் கட்ட தடயவியல் சோதனை முடிவுகளில் தெரியவந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
மேலும் படிக்க | கொடூரமான பெண் சடலம்...! சவால்விட்ட ‘கொலையாளி’ 50 வருஷம் கழிச்சி நடந்த ‘ட்விஸ்ட்’!
மேலும் படிக்க | விமான நிலையங்கள் இல்லாத நாடுகள்.. லிஸ்ட்டில் என்னென்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









