Pakistan Air Strikes On Afghanistan: ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே 30 பயங்கரவாதிகளை அதன் பாதுகாப்புப் படையினர் கொன்றதாக பாகிஸ்தான் ராணுவம் இன்று (அக். 10) தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் எல்லை அருகே கடந்த அக். 7ஆம் தேதி அன்று பாகிஸ்தான் ராணுவ கான்வாய் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 9 ராணுவ வீரர்கள், 2 ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்ட நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் தாக்குத் தொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
Pakistan Attacks On Afghanistan: இந்தியா மீது பொய் குற்றச்சாட்டு
தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத குழு தொடர்ச்சியாக பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். ஷபாஸ் ஷெரீஃப் தலைமையிலான பாகிஸ்தான் அரசு பதவி விலகி, அதற்கு பதிலாக இஸ்லாமிய தலைமையிலான கடுமையான அரசை கொண்டுவர வேண்டும் என எதிர்ப்புக்குரல் எழுப்பி வருகின்றனர். ஒராக்ஸாய் நகரில் கடந்த அக். 7ஆம் தேதி நடந்த தாக்குதலுக்கும் இவர்களே பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.
ஷாஹித் அப்துல் ஹக் சதுக்கத்திற்கு அருகே பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல், தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் தலைவர் நூர் வாலி மெஹ்சூத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இத்தாக்குதல் குறித்து பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், "உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், ராணுவ நடவடிக்கையின் போது தீவிரமான துப்பாக்கிச் சண்டைகளுக்குப் பிறகு, பயங்கரவாத சம்பவத்தில் ஈடுபட்ட முப்பது இந்திய ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்" என தெரிவித்துள்ளது. அதாவது, இந்த பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி அளித்து இந்தியா ஆதரவு அளிப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தது. அந்த பயங்கரவாத அமைப்புதான் தனது எல்லையில் தாக்குதல் தொடுத்ததாகவும் பாகிஸ்தான் கூறியது.
Pakistan Attacks On Afghanistan: ஆப்கான் உடனான உறவில் விரிசல்
இந்தியாவின் மீது ஆதாரமற்ற வகையில் குற்றஞ்சாட்டியிருக்கிறது. இந்தியாவும் இந்த குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்துள்ளது. பகல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் உறவில் தொடர்ந்து விரிசல் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் இந்த அறிக்கைக்கு இந்திய வெளியுறவுத்துறை இன்னும் விளக்கம் அளிக்கவில்லை. அதேநேரத்தில் பாகிஸ்தான் பல்வேறு பொய் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறது. இந்த பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தான் பயிற்சி பெற்று, பாகிஸ்தான் மீது தாக்குதல் தொடுக்க திட்டமிட்டு வருவதாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது. இந்த குற்றச்சாட்டை ஆப்கானிஸ்தான் மறுத்திருந்தது. 2021ஆம் ஆண்டில் நாட்டோ படைகளை அமெரிக்கா திரும்பப் பெற்றதை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது. அதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் உறவில் விரிசல் ஏற்பட்டது.
Pakistan Attacks On Afghanistan: தாலிபன் அமைச்சரின் சுற்றுப்பயணம்
தற்போது தாலிபான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி, இந்தியாவுக்கு முதல்முறையாக சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த சுற்றுப்பயணம் இந்தியா - ஆப்கானிஸ்தான் உறவை பலமாக்கும் என்பதால் இதனால் பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், அதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் மீது இந்த திடீர் தாக்குதலை பாகிஸ்தான் மேற்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | காசாவில் போர் நிறுத்தம்: அமெரிக்காவின் முரட்டு சம்பவம் - டிரம்புக்கு நோபல் பரிசா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









