மும்பை குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியான பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை பயங்கரவாத பட்டியலில் சேர்த்தது பாகிஸ்தான்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகிஸ்தானைச் சேர்ந்த ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் மீது 2008-ம் ஆண்டு நடந்த மும்பை தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. ஜமாத்-உத்-தாவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையத். மும்பை குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளி ஆவார். மேலும் இந்தியாவில் நடந்த பல்வேறு தாக்குதல்களில் முக்கிய மூளையாக செயல்பட்டவர். 2014-ம் ஆண்டு ஹபீஸ் சயீத்தை ஐ.நா. அமைப்பு மற்றும் அமெரிக்கா சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளன.


பாகிஸ்தானில் சுதந்திரமாக உலவி வரும் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை பயங்கரவாதியாக அறிவிக்க அமெரிக்கா தொடர்ந்து பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்து வந்தது. 


கடந்த வருடம் பாகிஸ்தானில் பயங்கரவாதி ஹபீஸ் சயீத் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். பின்னர் விடுதலை செய்யபட்டார்.


கடந்த சில மாதங்களுக்கு முன்பு காஷ்மீருக்கான எங்கள் போராட்டம் தொடரும். எங்கள் போராட்டத்தை நிறுத்த போவதில்லை. முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் எனக் கூறியிருந்தான்.


பாக்கிஸ்தானுக்கு 2 பில்லியன் டாலர் இராணுவ உதவியை நிறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். இந்நிலையில், பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்புகளை தடை செய்யும் அவசர சட்டத்தில் அந்நாட்டு அதிபர் மம்னூன் ஹுசைன் கையெழுத்திட்டுள்ளதாக, அந்நாட்டு பத்திரிக்கைகள் கூறியுள்ளது. 


இந்த பட்டியலில் ஹபீஸ் சயீத் மற்றும் அவனது ஜமாத்-உத்-தவா அமைப்பும், ஃபாலாஹ-இ-இன்சானிட் ஃபவுண்டேஷன் மற்றும் சில பயங்கரவாதிகளின் பெயரும் இடம்பெற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.