'ராணுவம் தான் நாட்டை அழித்துவிட்டது' மனம் வருந்தும் பாகிஸ்தான் இளைஞர்கள்!

Pakistan Army: பாகிஸ்தான் ராணுவம் மீது உள்நாட்டில் நிலவும் அதிருப்தி குறித்தும், இளைஞர்களின் மனநிலை குறித்தும் இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : May 6, 2025, 08:30 PM IST
  • பகல்காம் சம்பவம் கடந்த ஏப். 22ஆம் தேதி நடந்தது.
  • இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம்
  • போர் கால பதற்ற ஒத்திகை நாளை நடைபெறுகிறது.
'ராணுவம் தான் நாட்டை அழித்துவிட்டது' மனம் வருந்தும் பாகிஸ்தான் இளைஞர்கள்!

Public Dissatisfaction On Pakistan Army: பகல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவுகிறது. இரு நாடுகளும் தங்களின் முப்படையை தயாராக இருக்கும்படி அறிவுறுத்தி இருக்கிறது. இந்தியாவில் நாளை நாடு முழுவதும் போர் கால பதற்ற ஒத்திகை நடைபெற இருக்கிறது. 

Add Zee News as a Preferred Source

1971ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்த ஒத்திகை இந்தியாவில் நடத்தப்படுகிறது. இந்த ஒத்திகை கடந்தாண்டு நடத்தப்பட்டபோது, அப்போது இந்தியா - பாகிஸ்தான் போர் வெடித்தது இங்கு கவனிக்கத்தக்கது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு முதல் பல்வேறு நடவடிக்கைகளை பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்திருந்தது. பதிலுக்கு பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிரான சில நடவடிக்கைகளை எடுத்திருந்தது.

Pakistan Army: பொதுமக்களின் அதிருப்தி

போர் பதற்றம் நிலவும் சூழலில், இந்திய மக்கள் அனைவரும் இந்திய ராணுவத்திற்கு பக்கபலமாக இருக்கின்றனர். எல்லையில் ஊடுருவி பொதுமக்களை கொலை செய்த பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்பதே நாட்டு மக்களின் ஒருமித்த குரலாக இருக்கிறது. ஆனால், பாகிஸ்தானிலோ பொதுமக்கள் ராணுவத்தின் மீது அளவு கடந்த அதிருப்தியில் இருப்பது பட்டவர்த்தனமாக வெளிப்படுகிறது.

Pakistan Army: குடும்பத்தை இடம் மாற்றும் ராணுவ அதிகாரிகள்

அரசியலில் ராணுவத்தின் ஆதிக்கத்தையும், நெருக்கடியான தருணங்களில் நாட்டை விட்டு வெளியேறத் தயாராக இருக்கும் தலைவர்களின் நம்பகத்தன்மையையும் குடிமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. பல மூத்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் தங்கள் குடும்பங்களை ஐரோப்பிய நாடுகளுக்கும், வளைகுடா நாடுகளுக்கு மாற்றியுள்ளனர். அரசியல் அழுத்தம் மட்டுமின்றி பிற அச்சுறுத்தலைத் தவிர்க்க, பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இதுபோன்று வெளிநாடுகளுக்கு தங்களின் குடும்பங்களை இடம்பெயர செய்வதை ஒரு பாதுகாப்பாக கருதுகின்றனர்.

Pakistan Army: மனம் வருந்தும் இளைஞர்கள் 

பாகிஸ்தானின் பிரபல பின்னணிப் பாடகர் அட்னான் சாமியின் சமீபத்திய X பதிவு தற்போது அதிகம் கவனம் பெற்று வருகிறது. இவர் கடந்த 2016ஆம் ஆண்டு தனது பாகிஸ்தான் குடியுரிமையை மறுத்து இந்திய குடியுரிமையை பெற்றிருந்தார். இவர் தனது X பக்கத்தில் போட்ட பதிவில், அஜர்பைஜான் நாட்டின் பாகுவில் வீதியில் நடந்து செல்லும்போது, ​​அவர் ஒரு இளம் பாகிஸ்தான் இளைஞர்கள் சிலரை சந்தித்துள்ளார். அவர்கள் தங்களின் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்ற தேசிய அடையாளத்திற்கே வருத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், "நீங்கள் (அட்னான் சாமி) மிகவும் அதிர்ஷ்டசாலி... நீங்கள் நல்ல நேரத்தில் பாகிஸ்தானை விட்டு வெளியேறிவிட்டீர்கள்... நாங்களும் எங்கள் குடியுரிமையை மாற்ற விரும்புகிறோம். நாங்கள் எங்கள் ராணுவத்தை வெறுக்கிறோம்... அவர்கள் எங்கள் நாட்டை அழித்து, குட்டிச் சுவராக்கிவிட்டார்கள்" என்று அந்த இளைஞர்கள் அவரிடம் கூறியிருக்கின்றனர். இதற்கு அவர், "இது எனக்கு நீண்ட காலத்திற்கு முன்பே தெரியும்!" என பதிலளித்துள்ளார்.

Pakistan Army: வைரலாகும் வீடியோ

அதாவது, பொதுமக்கள், இளைஞர்கள் என அனைவரும் பாகிஸ்தான் ராணுவத்தின் மீது அதிருப்தியில் இருப்பது தெரிகிறது. சமீபத்தில் இஸ்லாமாபாத்தில் ஒரு மதகுரு, வழிபாட்டு தலத்தில் கூடியிருந்த பொதுமக்களிடம்,"ஒருவேளை, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் வெடித்தால், நீங்கள் பாகிஸ்தான் ராணுவத்திற்கு ஆதரவளிப்பீர்களா... ஆதரவு அளிப்பேன் என கூறுபவர்கள் கையை தூக்குங்கள்" என்கிறார். ஆனால், ஒருவர் கூட கையை தூக்கவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது கவனிக்கத்தக்கது.

மேலும் படிக்க | பகல்காம் சம்பவம்: 'மோடிக்கு 3 நாட்கள் முன் தகவல் வந்ததா?' - கார்கே பகீர் கேள்விகள்!

மேலும் படிக்க | இந்திய நடிகைகளை... பாக். ஊடகவியலாளர் சர்ச்சை பேச்சு

மேலும் படிக்க | மீண்டும் மீண்டும் சீண்டும் பாகிஸ்தான்... 2வது முறையாக ஏவுகணை சோதனை!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News