மியான்மர் விமானம் தரையிறங்கும்போது விபத்து

மியான்மரில் விமானத்தில், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டத்தில், விமானியின் சாதுர்யத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Updated: May 13, 2019, 10:21 AM IST
மியான்மர் விமானம் தரையிறங்கும்போது விபத்து

மியான்மரில் விமானத்தில், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டத்தில், விமானியின் சாதுர்யத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

மியான்மர் ஏர்லைன்சுக்குச் சொந்தமான யுபி-103 விமானம், மாண்டலேவிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் காலை 9 மணிக்கு தரையிறங்க முயன்றது. அந்த விமானத்தில் 7 பணியாளர்கள் உள்பட 89 பேர் இருந்தனர். 

அப்போது, அந்த விமானத்தின் முன் பக்க சக்கரங்கள் விரிய மறுத்தன. அதைத் தொடர்ந்து, உடனடியாக பின்பக்க சக்கரங்களை மட்டும் பயன்படுத்தி அந்த விமானத்தை விமானி தரையிறக்கினார். இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து நேர்ந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.