)
Pope Francis Death Who Is Next Leader : கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக இருந்தவர், போப் பிரான்சிஸ். இவர், 88 வயதில் உடல் நலக்குறைவால் காலமாகியிருக்கிறார். இதையடுத்து, இவருக்கு அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
போப் பிரான்சிஸ் உயிரிழப்பு:
உடல்நலக்குறைவு காரணமாக, கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தலைவரான போப் பிரான்ஸிஸ், கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு, வயது மூப்பு மற்றும் சுவாச பிரச்சனை காரணமாக உடல் நலனில் பிரச்சனை ஏற்பட்டதாகவும், அவருக்கு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இவருக்கு, மருத்துவமனையில் தொடர்ந்து 38 நாள் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு வீடு திரும்பி இருந்தார். இவரது உடல் நலன் சற்று தேரியிருந்த நிலையில், ஈஸ்டர் திருநாளான நேற்று விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு, மக்களுக்கு ஆசி வழங்கினார். இந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் இன்று காலை 7.35 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக, வாடிகன் அரசாங்கம் அரிவித்திருக்கிறது. இவரது உயிரிழப்பால், இத்தாலி மட்டுமல்ல, உலகம் முழுவதும் இருகும் கத்தோலிக்க மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
அடுத்த தலைவர் யார்?
பொதுவாக ஒரு நாட்டின் அல்லது மதத்தின் தலைவர் இறந்து விட்டாலே, அடுத்த தலைவர் யார் என்கிற கேள்வி எழும். அதேதான், தற்போது போப் பிரான்ஸிஸின் உயிரிழப்பிலும் நடந்திருக்கிறது. அடுத்த தலைவர் யார் என்பதை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு, 138 கார்டினல்கள் (கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தை இடத்தில் உள்ளவர்கள்) கையில் இருக்கிறது. இதில், 80 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், அடுத்த திருச்சபை தலைவரை தேர்ந்தெடுக்க தகுதியுடையவர்களாகின்றனர். இதில், நான்கு இந்தியர்களும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
யார் அந்த நான்கு இந்திய கார்டினல்கள்:
கார்டினல் ஃபிலிபே நெரி:
கோவா மற்றும் தாமன் ஆகிய திருச்சபைகளின் பேராயர் (Archbishop) கார்டினல் ஃபிலிபே நெரி ஃப்ரேரோ 4 இந்தியர்களில் ஒருவராக இருக்கிறார். இவருக்கு வயது, 72.
கார்டினல் பேசிலியோஸ் க்ளீமிஸ்:
64 வயதாகும், கார்டினல் பேசிலியோஸ் க்ளீமிஸ் என்கிற கேரளாவை சேர்ந்த பேராயரும், இந்த கார்டினல்களுள் ஒருவராக இருக்கிறார். இவர், 2012ஆம் ஆண்டு முதல் இந்த திருச்சபையில் கார்டினலாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
கார்டினல் ஆண்டனி பூலா:
63 வயதாகும் ஆண்டனி பூலா, திருச்சபையின், முதல் தலித் கார்டினல் ஆவார். இவர், ஐதராபாத்தை சேர்ந்த கத்தோலிக்க பேராயர்.
கார்டினல் ஜார்ஜ் ஜேகப் கோவக்காட்:
கேரளாவை சேர்ந்த இன்னொரு கார்டினல், ஜார்ஜ் ஜேகப் கூவக்காட். இவரது வயது, 51. இந்தியாவின் வாட்டிகன் தூதராகவும் இவர் செயல்பட்டு வருகிறார். போப் பிரான்சிஸின் வெளிநாட்டு தொடர்புகளை ஏற்படுத்தி கொடுத்ததில் இவருக்கு பெரும்பங்கு இருப்பதாக கூறப்படுகிறது.
போப் ஆண்டவரின் இறுதிச்சடங்கு!
போப் ஆண்டவர் உயிரிழந்ததை தொடர்ந்து, அவருக்கு இறுதிச்சடங்குகள் நடத்த ஏற்பாடுகள் நடைப்பெற்று வருகிறது. இந்த நிகழ்வு, இன்னும் 5-6 நாட்களுக்குள் கடைப்பிடிக்கப்படும் என கூறப்படுகிறது. காலமான போப் ஆண்டவர், அனைத்து தரப்பு மக்களையும் திருச்சபைக்குள் வரவேற்பவராகவும், அனைவருக்கும் பிடித்தவராக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ