Pope Francis: போப் பிரான்சிஸ் காலமானார்... சோகத்தில் ஆழ்ந்த கத்தோலிக்க மக்கள்

Pope Francis Death: கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் இன்று காலமானார். அவருக்கு வயது 88. 

Written by - Sudharsan G | Last Updated : Apr 21, 2025, 02:28 PM IST
  • 22 வயதில் இருந்து கிறிஸ்துவ சமூகப் பணியில் ஈடுபட்டு வந்தார்.
  • 2013ஆம் ஆண்டு முதல் போப் ஆண்டவாராக இருந்தார்.
  • கடந்த பிப். 14ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Pope Francis: போப் பிரான்சிஸ் காலமானார்... சோகத்தில் ஆழ்ந்த கத்தோலிக்க மக்கள்

Pope Francis Death: கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் காலமானார். அவருக்கு வயது 88. உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை உயிரிழந்தார் என வாடிகன் அறிவித்துள்ளது.

Add Zee News as a Preferred Source

Pope Francis Death: தொடர் உடல்நலக்குறைவு

கடந்த பிப். 14ஆம் தேதி அன்று உடல்நலக்குறைவு காரணமாக போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயது மூப்பு மற்றும் சுவாச பிரச்னை காரணமாக அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், 38 நாள்கள் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியிருந்தார்.

Pope Francis Death: சோகத்தில் கத்தோலிக்க மக்கள்

நேற்று ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு மக்களுக்கு ஆசி வழங்கிய போப் பிரான்சிஸ், இன்று அவரது இல்லத்தில் காலை 7.35 மணியளவில் உயிர் பிரிந்ததாக வாடிகன் அறிவித்துள்ளது. போப் பிரான்சிஸ் மறைவால் உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

Pope Francis Death: 2012ஆம் ஆண்டு முதல்...

அர்ஜென்டீனா நாட்டைச் சேர்ந்த இவர் அவரது 22 வயது முதலே கிறிஸ்துவ சமூகத்துப் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். கடந்த 2013ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி முதல் சுமார் 12 ஆண்டுகளாக கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்து வந்தார். தென் அமெரிக்க நாடுகளில் இருந்து முதன்முதலில் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரானவர் இவர்தான்.

Pope Francis Death: சுவாச நோயால் அவதிப்பட்ட போப் பிரான்சிஸ்

போப் பிரான்சிஸ் வயது மூப்பால் அடிக்கடி சுவாச நோய்களால் அவதிப்பட்டார், மேலும் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் நுரையீரல் வீக்கம் காரணமாக 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு திட்டமிடப்பட்ட பயணத்தை கூட ரத்து செய்தார். போப்பாண்டவரின் இறுதிச் சடங்குகளுக்கான வழிபாட்டு புத்தகத்தின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை போப் பிரான்சிஸ் கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அங்கீகரித்தார். அதன்படி, இறுதிச்சடங்கு நடைபெறும். ஆனால், போப் பிரான்சிஸின் இறுதிச்சடங்கு குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. 

Pope Francis Funeral: இறுதிச்சடங்கு எப்போது?

போப் ஆண்டவரின் மரணத்திற்குப் பிறகு அவரது இறுதிச் சடங்குகள் எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்பது உட்பட பல புதிய கூறுகள் Ordo Exsequiarum Romani Pontificis என்ற புத்தகத்தின் இரண்டாம் பதிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவரது உடல் உடனடியாக சவப்பெட்டியில் வைக்கப்படுகிறது. போப் ஆண்டவர் காலமானால், அவரது இறுதி சடங்கு 4-6 நாட்களில் நடைபெற வேண்டும் என்பது வழக்கமாக உள்ளது.

மேலும் படிக்க | போப் அறிவிப்பு: LGBTQ+ சமூகம் உட்பட அனைவரையும் கத்தோலிக்க திருச்சபை வரவேற்கிறது

மேலும் படிக்க | மியான்மர் நிலநடுக்கத்தை கணித்த பாபா வங்கா.. 2025ல் என்ன நடக்கும்? பயமுறுத்தும் கணிப்புகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News