Dangerous Underwater Weapon: பகல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, இந்தியா தரப்பில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை எடுக்கப்பட்டு 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் தகர்க்கப்பட்டன. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ளே புகுந்து பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா செய்த இந்த மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கை இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தை அதிகப்படுத்தியது.
இதனால், இரு நாடுகளின் ஆயுதங்கள், போர் விமானங்கள், ஏவுகணைகள், வான் பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவை குறித்த பேச்சுக்கள் அதிகம் எழுந்தன. அந்த வகையில், தற்போது ஆழ்கடலில் வெடிக்கவைத்தால் சுனாமியையே ஏற்படுத்தும் மிகப் பயங்கரமான ஆயுதம் உலகத்தில் இரண்டு நாடுகளிடம் உள்ளது. அதில் ஒரு நாடு இந்தியாவின் நட்பு நாடுகளில் ஒன்று எனலாம். சுனாமியையே ஏற்படும் அந்த பயங்கரமான ஆயதத்தை வைத்திருக்கும் அந்த 2 நாடுகள் எவை, அந்த பயங்கர ஆயுதத்தின் பெயர் என்ன என்பதை இங்கு காணலாம்.
ரஷ்யாவின் போஸிடான்
இந்தியாவின் நீண்டகால நட்பு நாடாக ரஷ்யா விளங்குகிறது. ரஷ்யாவிடம் போஸிடான் (Poseidon) என்ற அணுசக்தியின் மூலம் நீருக்கடியில் இயங்கும் ஆயுதம் உள்ளது. இது தானியங்கி வகை ஆயுதமாகும். இதுகுறித்து முதன்முதலில் 2015ஆம் ஆண்டு ரஷ்ய ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தது.
அடிப்படையில் போஸிடான் என்பது அணு ஆயுதம் ஏற்றப்பட்ட ஒரு நீருக்கடியில் செயல்படும் டிரோன் ஆகும். 2018ஆம் ஆண்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், போஸிடானை ரஷ்யாவின் ஆறு புதிய சூப்பர் ஆயுதங்களில் ஒன்றாக அறிமுகப்படுத்தினார். 2022ஆம் ஆண்டு மே மாதத்தில், ரஷ்ய தொலைக்காட்சி தொகுப்பாளர் போஸிடான் குறித்து விவரிக்கும்போது, இந்த ஆயுதத்தை பயன்படுத்தி 500 மீட்டர் உயர கதிரியக்க சுனாமி உருவாக்கலாம் என்றும் அது இங்கிலாந்து போன்ற ஒரு நாட்டையே மூழ்கடிக்கும் திறன் கொண்டது என்றும் அவர் கூறினார்.
போஸிடான்
இது அணுசக்தியால் இயங்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் தானியங்கி ஆயுதம் ஆகும். இந்த ஆயுதம் தற்போதைய மற்ற ஏவுகணைகளை விட வேகத்தில் மெதுவாகவே இருக்கும். ஆனால் இந்த ஆயுதம் ஏவப்பட்டால் அதை முறியடிப்பது கடினமானதாகும்.
இந்த ஆயுதம் 10 ஆயிரம் கிமீ தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டதாகும். 1000 மீட்டர் ஆழத்தில் செயல்படும் திறன் கொண்டது. இதன் வேகம் 100 knots என கணக்கிடப்படுகிறது. இரண்டு மெகா டன் அணு ஆயுதத்தை போஸிடான் சுமந்து செல்லும். மேலும் இது வெடித்தால், கதிரியக்க சுனாமியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
வட கொரியா
2024ஆம் ஆண்டில் ஜனவரி மாதம், ஜப்பானிய கடல் பகுதியில் வட கொரியா, நீருக்கடியில் இயங்கும் ஒரு அணு ஆயுதத்தை சோதித்தது. 'Haal-5-23' என பெயரிடப்பட்ட இந்த ஆயுதத்தை பயன்படுத்தியதன் மூலம், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரிக்கச் செய்தது. இது வட கொரியாவின் அணுசக்தி திறன்களில் ஒரு புதிய உச்சம் எனலாம்.
அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து நடத்திய கூட்டு ராணுவப் பயிற்சிகளுக்கு பதிலளிக்கும் விதமாக வட கொரியா இந்த புதிய நீருக்கடியில் இயங்கும் அணு ஆயுத அமைப்பை சோதித்தது. இந்த சோதனை வெற்றிகரமாக இருந்தது என்றும் வட கொரியா அறிவித்திருந்தது. இதுவும் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. பரவலான அழிவை ஏற்படுத்தவல்லது. சுனாமி போன்ற ஆழிப்பேரலைகளை உருவாக்கும் திறன் கொண்டது என்று வட கொரிய அரசின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவில் இருந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு நேரடி எதிர்வினையாக வட கொரியா இந்த சோதனையை வடிவமைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | பாகிஸ்தானுக்கு ஆதரவு தந்த நாடுகள்! இந்தியா என்ன செய்தது தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ