இந்தியாவிற்கு சலுகை விலையில் கச்சா எண்ணெய்; பீப்பாய்க்கு $35 தள்ளுபடி வழங்கும் ரஷ்யா!
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் முடிவேதும் இல்லாமல் தொடரும் நிலையில், சர்வதேச அளவில் இன்று மிகப்பெரிய அளவில் கவலையளிக்கும் ஒரு விஷயமாக உள்ளது எரிபொருள் விலை உயர்வு என்றால் மிகையில்லை.
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் முடிவேதும் இல்லாமல் தொடரும் நிலையில், சர்வதேச அளவில் இன்று மிகப்பெரிய அளவில் கவலையளிக்கும் ஒரு விஷயமாக உள்ளது எரிபொருள் விலை உயர்வு என்றால் மிகையில்லை. போர் மூண்ட நாளில் இருந்து கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகின்றது.
உக்ரைன் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, சர்வதேச அழுத்தம் அதிகரித்துள்ள நிலையில், ரஷ்யா இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் விலையில் பீப்பாய் ஒன்றுக்கு $35 என்ற அளவிற்கு கணிசமான தள்ளுபடியில் வழங்கியுள்ளது என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக பல மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில்,இந்தியாவிற்கு தள்ளுபடி விலையில் எண்ணெய் விற்க ரஷ்யா முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ரஷ்யாவிடம் இருந்து இந்தியா சலுகை விலையில் எண்ணெய்: அமரிக்கா கூறுவது என்ன!
இந்த ஆண்டுக்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ள 15 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை இந்தியா வாங்க வேண்டும் என்று ரஷ்யா விரும்புகிறது. மேலும் பேச்சுவார்த்தைகள் ராஜீய நிலையில் நடைபெற்று வருகின்றன.
ஆசியாவின் இரண்டாவது பெரிய எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியா, சர்வதேச அழுத்தம் மற்றும் தடைகளை மீறி, ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய்யை இரட்டிப்பாக்கி வரும் ஒரு சில நாடுகளில் ஒன்றாகும்.
முன்னதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 30 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை ரஷ்யாவிடமிருந்து 20-25% தள்ளுபடி விலையில் வாங்குவதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டது. அதிலும் மிக முக்கியமாக, கச்சா எண்ணெய் டெலிவரியின் போது அமெரிக்க டாலரில் இல்லாமல் இந்திய ரூபாயில் கட்டணம் செலுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியானது.
ரஷ்யாவிடம் இருந்து என்ணெய் வாங்குவது தொடர்பாக இந்தியா தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துகையில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய், எரிவாயுவைத் தொடர்ந்து வாங்குவதை சுட்டிக் காட்டினார்
“ரஷ்யாவிடம் இருந்து நாங்கள் மிகவும் குறைந்த அளவில் தான் எண்ணெய் இறக்குமதி செய்கிறோம். நாங்கள் செய்வதைவிட பல நாடுகள் 10, 15 முதல் 20 மடங்கு அதிக எண்ணெயை ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்கின்றன. ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ரஷ்யாவிடமிருந்து பெட்ரோலியம் இறக்குமதி செய்கின்றன. ஆனால் அவை எங்களுக்கு பாடம் புகட்டுகின்றன,” என்றார் வெளியுறவு அமைச்சர்.
மேலும் படிக்க | உக்ரைன் நெருக்கடி இந்தியா- ரஷ்யா உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR