)
Axiom-4 மிஷனில் இந்தியாவின் சுபான்ஷு சுக்லா உள்பட 4 விண்வெளி வீரர்கள் சென்ற SpaceX டிராகன் விண்கலம் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இணைந்தது. தற்போது இந்த நால்வரும் சர்வதேச விண்வெளி மையத்திற்குள் நுழைந்தனர். இதன்மூலம் முதல்முறையாக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் கால் பதித்தவர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற்றுள்ளார்.
1984ஆம் ஆண்டில் முதல்முறையாக இந்தியாவைச் சேர்ந்த ராகேஷ் சர்மா என்பவர் விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டார். அவர் சோவியத் யூனியனின் மிஷனில் விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டார்.
Axiom Mission 4 aboard the @SpaceX Dragon docked to the station at 6:31am ET today. Soon the Ax-4 astronauts will open the hatch and greet the Exp 73 crew live on @NASA+. More... https://t.co/XmWYPa4BhT pic.twitter.com/LjjMd7DfmW
— International Space Station (@Space_Station) June 26, 2025
அதற்கு பின் தற்போது 41 ஆண்டுகள் கழித்து சுபான்ஷு சுக்லாதான் 2வது இந்தியராக விண்வெளிக்குச் சென்றிருக்கிறார். அதுமட்டுமின்றி சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் கால்பதித்த முதல் பெருமையை பெற்று சுபான்ஷு சுக்லா சாதனை படைத்திருக்கிறார்.
28 மணிநேரத்தில் பயணம்
Axiom-4 மிஷனில் சுபான்ஷு சுக்லா உடன் போலந்தின் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி-விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரியின் திபோர் கபு, அமெரிக்காவின் பெக்கி விட்சன் ஆகியோர் விண்வெளியை அடைந்துள்ளனர். இதில் சுக்லா மிஷன் பைலட் ஆவார். மிஷன் காமாண்டராக பெக்கி விட்சனும், மிஷன் ஸ்பெஷலிஸ்ட்டாக மற்ற இருவரும் உள்ளனர். இந்தியாவில் இருந்து மட்டுமில்லை போலாந்து மற்றும் ஹங்கேரியில் இருந்து ஒருவர் தற்போதுதான் முதல்முறையாக சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்துள்ளனர்.
இவர்கள் நேற்று அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து, வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து 424 கி.மீ உயரத்தில் இந்திய நேரப்படி 12.01 மணிக்கு புறப்பட்ட நிலையில், தற்போது 28 மணிநேரத்தில் சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தது. மணிக்கு 17 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் இந்த விண்கலம் சென்றிருக்கிறது.
இப்போது விண்கலம் சர்வதேச விண்வெளி மையத்தில் இணைந்துவிட்டது. Docking முடிந்துவிட்டது. ஆனால் Docking தொடங்குவதற்கு முன்பு, விண்கலம் முதலில் விண்வெளி நிலையத்துடன் ஒரே சுற்றுப்பாதைத் தளத்தில் இருக்க வேண்டும். ஒன்றுக்கொன்று நெருக்கமாக நிலைநிறுத்தப்பட வேண்டும்.
விண்வெளி வீரர்கள் மற்றும் சரக்குகளை பரிமாறிக்கொள்ள அனுமதிக்க, விண்கலத்திற்கும் விண்வெளி நிலையத்திற்கும் இடையே பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பான இயற்பியல் இணைப்பை உறுதிப்படுத்த, இடம், வேகம், திசை ஆகியவை பொருந்தும் பல நுணுக்கமான செயல்பாடுகள் நடக்கும். Soft Capture, Hard Capture போன்ற செயல்பாடுகள் முடிந்து, சுமார் 4.15 மணிக்கு Docking முடிந்தது.
தற்போது சர்வதேச விண்வெளி மையத்தில் பல நாடுகளைச் சேர்ந்த 7 விண்வெளி வீரர்கள் உள்ளனர். Docking முடிந்துவிட்டாலும் கூட டிராகன் விண்கலத்தில் இருக்கும் சுக்லா உள்பட நான்கு பேரும் உடனே அந்த 7 பேருடன் சேர்ந்திட மாட்டார்கள். அதற்கு இன்னும் நேரமெடுக்கும். சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்துடனான இணைப்பு நிலைபெறவும், எந்த உடைப்பும் அல்லது எந்த சிக்கலும் இல்லை என்பதை அமைப்பு உறுதி செய்தே பின்னரே அவர்கள் அங்கு செல்வார்கள். அதற்குதான் கால தாமதாம். இந்திய நேரப்படி இன்று மாலை 6.10 மணிக்கு டிராகன் விண்கலம், சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து தொடர்பை துண்டித்துவிடும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ