Skylight Oil Tanker: இஸ்ரேல் - அமெரிக்க நாடுகள் இணைந்து கடந்த சனிக்கிழமை (பிப். 28) முதல் ஈரான் நாட்டின் மீது வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது. தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஏவுகணை மற்றும் டிரோன் மூலம் பதிலடி தாக்குதல் தொடுத்து வருகிறது.
1000க்கும் மேற்பட்டோர் பலி
இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த 5 நாள்களாக கடும் பதற்றம் நிலவி வருகிறது. கடந்த 5 நாள்களில் ஈரானில் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் உச்சபட்ச தலைவராக இருந்த அயத்துல்லா அலி காமேனி, அவரது மனைவி, மகள், மருமகன், பேத்தி உள்ளிட்டோரும் இஸ்ரேல் - அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்தனர்.
உக்கிரமடையும் இஸ்ரேல் - ஈரான் போர்
மேலும் மினாப் நகரில் மகளிர் தொடக்க பள்ளியில் இஸ்ரேல் - அமெரிக்கா குண்டு போட்டதில் 160 மாணவிகள் உயிரிழந்ததும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்திய பெருங்கடலில் சர்வதேச கடல்பகுதியில், இந்தியாவில் இருந்து பயிற்சி முடித்து நாடு திரும்பிக்கொண்டிருந்த IRIS Dena ஈரான் போர் கப்பலை, அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தாக்கி அழித்துள்ளது. இதில் ஈரான் கடற்படை வீரர்கள் உள்ளிட்ட 87 பேர் உயிரிழந்ததாக தெரிகிறது. தொடர்ந்து, இஸ்ரேலும் - அமெரிக்காவும் ஈரானின் ராணுவ மற்றும் கடற்படை தளங்களை அழித்தொழிக்கும் நோக்கில் தீவிரம் காட்டுகின்றன. ஈரானும் சற்றும் பின்வாங்காமல் தொடர்ந்து தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.
எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்
அந்த வகையில், கச்சா எண்ணெய் கொண்டுசெல்லும் எண்ணெய் கப்பல்களுக்கு முக்கிய வழித்தடமாக இருக்கும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியும் இஸ்ரேல் - ஈரான் மோதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் கப்பல்களை குறிவைத்து ஈரான் தாக்குவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், Skylight Oil Tanker எண்ணெய் கப்பல் மீது ஈரான் கடந்த ஞாயிறு (மார்ச் 1) அன்று நடத்திய ஏவுகணை தாக்குதலில், கேப்டன் ஆஷிஷ் குமார் உள்பட இரண்டு இந்திய மாலுமிகள் காணாமல் போனதாக கூறப்பட்டது.
2 இந்தியர்கள் உயிரிழப்பு
இந்நிலையில், ஈரானின் தாக்குதலில் இரண்டு இந்திய மாலுமிகளும் உயிரிழந்ததாக The Hindu செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும் இச்செய்தியை Zee News இன்னும் உறுதிசெய்யவில்லை. Skylight Oil Tanker எண்ணெய் கப்பலில் 15 இந்தியர்களும், 5 ஈரானிய மாலுமிகளும் இருந்துள்ளனர், இந்த எண்ணெய் கப்பலை ஈரானிய ஏவுகணை கடந்த மார்ச் 1ஆம் தேதி தாக்கியது.
டிசம்பரில் தடை
முசந்தம் கவர்னரேட் பகுதியில் கசாப் துறைமுகத்தில் இருந்து வடக்கு நோக்கி 5 நாட்டிக்கல் மைல் தூரத்தில் Skylight எண்ணெய் கப்பல் தாக்கப்பட்டதாக ஓமன் நாடு தெரிவித்துள்ளது. Skylight எண்ணெய் கப்பல் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து அமெரிக்காவின் தடைப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









