கொழும்பு: பிரிட்டனின் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் மேல்முறையீட்டு ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து இலங்கை மேல்முறையீடு செய்துள்ளது.  அந்த ஆணையம், தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பை பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2000 ஆம் ஆண்டின் இங்கிலாந்து பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் சேர்க்கப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பை, நீக்க வேண்டும் எனக் கோரி, 2019, மார்ச் 8, 2019  அன்று பிரிட்டிஷ் உள்துறை, வெளியுறவுத்துறை செயலாளரின் முடிவை எதிர்த்து, LTTE  அமைப்பு மேல்முறையீடு செய்தது. 


ஆணைக்குழுவில் நடந்த இந்த வழக்கில், இலங்கை (Srilanka) சம்பந்தப்படவில்லை என்றாலும்,  விடுதலை புலிகளின்  பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து தகவல்களை வழங்குவதன் மூலம் இலங்கை அரசு பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு உதவியது.


LTTE மற்றும் அதன் பயங்கரவாத சித்தாந்தத்துடன் இணைந்த குழுக்கள், வெளிநாடுகளில் செயல்பாட்டில் உள்ள என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் உள்ளன என்று இலங்கை கூறுகிறது.


" விடுதலை புலிகளின் மேல்முறையீட்டு மனு தொடர்பாக இங்கிலாந்தில் நடைபெறும் விசாரணைகளை இலங்கை அரசு உன்னிப்பாகக் கண்காணிக்கும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


விடுதலை புலிகள் அமைப்பு மற்றும் அதன் பயங்கரவாத சித்தாந்தத்துடன் இணைந்த குழுக்கள் இன்னும் பல நாடுகளில் தீவிரமாக செயல்படுகின்றன, வன்முறையைத் தூண்டுவதற்கும், நாட்டை ஸ்திரமின்மையை பாதிக்கும் வகையிலான அச்சுறுத்தலாக உள்ளன என்பதற்கான போதுமான ஆதாரங்கள் உள்ளன என்று இலங்கை கருதுகிறது.


இலங்கை தனது தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்தியத்தின் அச்சுறுத்தல்கள் தொடர்பாக விழிப்புடன் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும்,  பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் சர்வதேச சமூகத்திற்கு, இலங்கை முழு ஒத்துழைப்பை அளிக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


2000 ஆம் ஆண்டின் முற்பகுதியில் தமிழ் ஈழ விடுதலை புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக இங்கிலாந்து பட்டியலிட்டது.


2009 ல்  இலங்கை இராணுவம் அதன் தலைவரான வேலுபிள்ளை பிரபாகரனைக் கொல்லப்படுவதற்கு முன்னர், தீவு தேசமான இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தனி தமிழ் ஈழம் வேண்டும் என கோரி வந்தது.


ALSO READ | LTTEக்கு ஏன் தடை விதிக்கப்பட்டது? இங்கிலாந்து நீதிமன்றம் அதிரடி கேள்வி! தடை நீங்க வாய்ப்பு!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR