சுனிதா வில்லியம்ஸ் - கல்பனா சாவ்லா... இருவருக்கும் பிடித்த அந்த ஒரு விஷயம் - என்ன தெரியுமா?

Sunita Williams vs Kalpana Chawla: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு விண்வெளி வீராங்கனைகளான மறைந்த கல்பனா சாவ்லா மற்றும் பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் இருவருக்கும் மிகவும் பிடித்த ஒன்றை குறித்து இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Mar 20, 2025, 12:35 PM IST
  • 2003இல் விண்கலம் வெடித்து கல்பனா சாவ்லா மறைந்தார்.
  • கல்பனா சாவ்லாவின் பிறந்த நாள் மார்ச் 17 ஆகும்.
  • மார்ச் 19ஆம் தேதி சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு பத்திரமாக வந்தார்.
சுனிதா வில்லியம்ஸ் - கல்பனா சாவ்லா... இருவருக்கும் பிடித்த அந்த ஒரு விஷயம் - என்ன தெரியுமா?

Sunita Williams vs Kalpana Chawla: வெறும் 8 நாள்கள் ஆய்வுக்காக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு பயணித்த விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் (Sunita Williams) மற்றும் புட்ச் வில்மோர் (Butch Willmore) ஆகியோர் விண்கலனில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சுமார் 286 நாள்கள் விண்வெளியில் தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

Add Zee News as a Preferred Source

பூமிக்கு திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்

286 நாள்களுக்கு பின் விண்வெளியில் இருந்து நேற்று அவர்கள் SpaceX Crew Dragon Capsule மூலம் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கடற்பகுதியில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் மற்றும் சில விண்வெளி வீரர்களும் தரையிறங்கினர்.

9 மாதக்காலம் விண்வெளியில் இருந்ததை தொடர்ந்து, அடுத்த 45 நாள்களுக்கு மறுவாழ்வு மையத்தில் அவர்கள் சிகிச்சையில் இருப்பார்கள் எனலாம். தற்போதைய சூழலில் அவர்கள் நடப்பதே சற்று சிரமம் என்பதால் மருத்துவ நிபுணர்களின் கண்காணிப்பில் சில காலம் இருந்து, படிப்பபடியாக உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கல்பனா சாவ்லாவின் வீரதீர பயணங்கள்

இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பிய இந்த தருணத்தில் ஒட்டுமொத்த உலகமும் இந்திய வம்சாளியைச் சேர்ந்த மற்றொரு விண்வெளி வீராங்கனையை நினைவுக்கூர்ந்தது. ஆம், சுனிதா வில்லியம்ஸை போன்று விண்வெளிக்கு சென்ற கல்பனா சாவ்லாவை (Kalpana Chawla) தான் குறிப்பிடுகிறோம். விண்வெளிக்கு சென்ற முதல் இந்திய வம்சாளியைச் சேர்ந்த முதல் நபர் கல்பனா சாவ்லாதான்.

1994ஆம் ஆண்டில் நாசாவில் விண்வெளி வீராங்கனையாகும் தகுதியை கல்பனா சாவ்லா பெற்றார். அதில் இருந்து மூன்றாண்டுகளில் 1997ஆம் ஆண்டில் கொலம்பியா (Columbia) விண்கலத்தின் மூலம் அவர் விண்வெளிக்கு பயணப்பட்டார். அதை  தொடர்ந்து, 2003ஆம் ஆண்டில் இரண்டாவது விண்வெளி பயணத்தை Columbia STS-107 விண்கலம் மூலம் மேற்கொண்டார். 

கல்பனா சாவ்லாவுக்கு நிகழ்ந்த துயரம்

ஆனால் துரதிருஷ்டவசமாக விண்வெளியில் இருந்து பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்த உடன் விண்கலம் வெடித்துச் சிதறிய சம்பவத்தில் கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 விண்வெளி வீரர்களும் உயிரிழந்தனர். அவரது விருப்பத்தின் படி, அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்தியா முதல் விண்வெளி வரை

இவர் அமெரிக்காவில் தனது பிற்கால வாழ்க்கை வாழ்ந்திருந்தாலும் அவரது இளமைக்காலம் முழுவதும் இந்தியாவிலேயே இருந்திருக்கிறது. 1962ஆம் ஆண்டு ஹரியானா மாநிலத்தின் கர்னால் மாவட்டத்தில் பிறந்த கலப்னா சாவ்லா அவரது தொடக்க கல்வியை அந்த மாவட்டத்திலேயே பயின்றார். அதன்பின்னர் சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் வானூர்தி பொறியியலில் பட்டம் பெற்றார். 

அதன்பின்னர், 1982இல் அதாவது அவரது 20 வயதில் அவர் அமெரிக்காவில் குடிபெயர்ந்தார். அங்கு அவரது முதுநிலை படிப்பை மேற்கொண்டு, விண்வெளித்துறையில் தனி முத்திரையை பதிக்க தொடங்கினார் எனலாம். கல்பனா சாவ்லா ஒருமுறை அல்ல, இரண்டு முறை விண்வெளிக்கு பயணம் சென்று மன உறுதிக்கொண்ட வீராங்கனையாக இன்று வரையிலும் மக்களால் அறியப்படுகிறார்.

கல்பனா சாவ்லாவின் நண்பர் சுனிதா வில்லியம்ஸ்

கல்பனா சாவ்லாவுக்கு நேர்ந்த துரதிருஷ்டம் சுனிதா வில்லியம்ஸிற்கு ஏற்பட்டுவிடக்கூடாது என பலரும் வேண்டிக்கொண்டிருக்க, கல்பனா சாவ்லாவின் பிறந்த நாளான மார்ச் 17இல் இருந்து அடுத்த இரண்டு நாளில் மார்ச் 19இல் (நேற்று) சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்கு திரும்பியது பலருக்கும் மகிழ்ச்சியை தந்திருக்கிறது எனலாம். 

கல்பனா சாவ்லாவும், சுனிதா வில்லியம்ஸும் நாசாவில் நண்பர்களாக இருந்துள்ளனர். சாவ்லா 1997இல் விண்வெளி வீராங்கனையாக தேர்வான நிலையில், சுனிதா 1998இல் வீராங்கனையாக தேர்வானார். விண்வெளி வீராங்கனைகள் என்பது தாண்டி இருவருக்குள்ளும் பல்வேறு ஒற்றுமைகளும் இருக்கின்றன.

சுனிதா வில்லியம்ஸ் vs கல்பனா சாவ்லா - சமோசா விரும்பிகள்

அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் சுனிதா வில்லியம்ஸிற்கும், கல்பனா சாவ்லாவுக்கு இந்திய உணவுகளில் மிகவும் பிடித்தது என்றால் அது சாமோசா தானாம். சாமோசாவை இருவருக்கும் அளவுக்கதிகமாக பிடித்தாலும், அதில் சில வித்தியாசங்களும் இருக்கின்றன. 2006ஆம் ஆண்டில் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்கு பயணப்பட்டபோது, தன்னுடன் விண்வெளிக்கு சாமோசாக்களையும் எடுத்துச்சென்றாராம். இதனை அவர் விண்வெளிக்கு சென்றுவிட்டு வந்தபோது தெரிவித்திருந்தார்.

அதேநேரத்தில், கல்பனா சாவ்லாவோ அந்தளவிற்கு சாமோசாவிற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையாம். இதுகுறித்து அவரது கணவர் ஜீன்-பியர் ஹாரிசன், கல்பனா சாவ்லாவின் சுயசரிதை புத்தகத்தில் கூறும்போது, விண்வெளியில் ஊட்டச்சத்தை கருத்தில் கொண்டு அவர் சமோசாக்களை எடுத்துச் செல்லவில்லை என்றார். 

இதன்மூலம், சுனிதாவுக்கு சமோசாக்கள் மீது எந்தளவிற்கு பிரியம் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. அவர் உடல்நலம் முன்னேற்றம் கண்ட பின் இந்தியா வரும்பட்சத்தில், நிச்சயம் பலரும் அவருக்காக பிரத்யேக சமோசாக்களை அன்பளிப்பாக கொடுப்பார்கள் எனலாம்.

மேலும் படிக்க | பூமிக்கு வந்தவுடன் சுனிதா வில்லியம்ஸ் செய்த முதல் செயல்! என்ன தெரியுமா? வைரலாகும் வீடியோ..

மேலும் படிக்க | சுனிதா வில்லியம்ஸ் உடல்நிலை எப்படி இருக்கு? ஸ்ரீமதி கேசன் பேட்டி!

மேலும் படிக்க | விண்வெளியில் எப்படி தலைக்கு குளிப்பார்கள்? தண்ணியே தேவைப்படாதாம்..
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News