நாசா விண்வெளி வீராங்கனையும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான சுனிதா வில்லியம்ஸ், வில்மோா் ஆகியோர் சிரித்தபடி கையசைத்து விண்கலத்தில் இருந்து வெளியே வந்தனர்.

8 நாட்கள் ஆய்வு பணிக்காக விண்வெளி நிலையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ் கிட்டத்தட்ட 9 மாதங்களுக்கு பிறகு இன்று பூமிக்கு திரும்பி உள்ளார். ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக கடந்த 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் மாட்டிக்கொள்ளும் சூழ்நிலை இவர்களுக்கு ஏற்பட்டது. இந்நிலையில் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு இன்று பூமி திரும்பி உள்ளனர். நாசா விண்வெளி வீராங்கனையும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான சுனிதா வில்லியம்ஸ், வில்மோா் ஆகியோர் சிரித்தபடி கையசைத்து விண்கலத்தில் இருந்து வெளியே வந்தனர்.
பல மாதங்களாக விண்வெளியில் மாட்டிக்கொண்ட இவர்களை மீட்டெடுக்க எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் என்ற விண்கலன் புறப்பட்டு சென்றது. இந்நிலையில் வெற்றிகரமாக இன்று அதிகாலை 3.30 மணியளவில் பூமியில் பாதுகாப்பாக தரையிறங்கி உள்ளனர். இதனை நாசா உற்சாகமாக தெரிவித்துள்ளது. சுனிதா வில்லியம்ஸ் மட்டுமின்றி, பட்ச் வில்மோர், நிக் ஹேக், அலெக்சாண்டர் கார்புனோவ் ஆகிய 4 விண்வெளி வீரர்களும் டிராகன் விண்கலத்திலன் மூலம் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பி உள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் பூமியில் இருந்து புறப்பட்டது இந்த டிராகன் விண்கலம்.
Thank you Donald Trump and Elon Musk for bringing the astronauts back! #sunitawilliamsreturn #NASA #AstronautsReturn pic.twitter.com/XlPrglCgho
— Rahul Chauhan (@RahulCh9290) March 19, 2025
17 மணி நேர பாதுகாப்பான பயணத்திற்கு பிறகு, அமெரிக்காவின் கடல் பகுதியில் பாராசூட் உதவியுடன் பாதுகாப்பாக தரையிறங்கி உள்ளது ட்ராகன் விண்கலம். அதனைத் தொடர்ந்து, மீட்டுப்புப்பணிக்காக தயார் நிலையில் இருந்த கப்பல் மூலம் ட்ராகன் விண்கலம் இணைக்கப்பட்டு, ஒவ்வொரு வீரர்களாக கப்பலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்ட பின்னர், அவர்களுக்கு தேவையான மருத்துவச் சிகிச்சைகள் அனைத்தும் அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வர தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என்று நாசா தெரிவித்துள்ளது.
மீண்டு வர ஒரு வருடம் ஆகும்?
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 மாதங்கள் தங்கி ஒரு அசாதாரண பயணத்தை மேற்கொண்டுள்ளனர். தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு அவர்கள் பூமிக்கு திரும்பி உள்ளதால், எண்ணற்ற உடல்நல சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று கூறப்படுகிறது. பூமியின் ஈர்ப்பு விசையில் இருந்து நீண்டகாலமாக இல்லாததால் எலும்புகள் மற்றும் தசைநார்கள் பலவீனமடைந்து, எழுந்து நடப்பது கூட கடினமான பணியாக இருக்கும். மேலும், அவர்களின் தோல் குறிப்பிடத்தக்க வகையில் மென்மையாக மாறி, பார்வைக் குறைபாட்டை சந்திக்க நேரிடும் என்று கூறப்படுகிறது.
இவை விண்வெளியில் நீண்ட நாட்கள் இருந்தால் ஏற்படும் பொதுவான பக்க விளைவுகள் என்று கூறப்படுகிறது. அவர்களின் அசௌகரியத்தை அதிகரிக்கும் விதமாக தொடர்ச்சியான தலைவலி, தலைச்சுற்றல் மற்றும் குமட்டல் இருக்கும். இது கதிரியக்க பாதிப்பு காரணமாக ஏற்படும். விண்வெளியில் இருந்து பூமிக்கு வந்தால் அவர்கள் குணமாக 3 மாதம் முதல் 1 ஆண்டு வரை ஆகலாம் என்று கூறப்படுகிறது. அடுத்த 6 வாரங்களுக்கு இவர்கள் தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருப்பார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ