விந்தை மனிதர்! காதலிகள் 1000; கருத்தடை மாத்திரைகள் 69,000; தண்டனை 1075 ஆண்டுகள்!
துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள ஒரு நீதிமன்றம், இஸ்லாமியர்களின் ஒரு பிரிவின் தலைவரான அட்னான் ஒக்டருக்கு 10 வெவ்வேறு குற்றங்களுக்காக 1075 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள ஒரு நீதிமன்றம், இஸ்லாமியர்களின் ஒரு பிரிவின் தலைவரான அட்னான் ஒக்டருக்கு 10 வெவ்வேறு குற்றங்களுக்காக 1075 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. 2018 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் அட்னான் ஒக்தார் என்பவரின் பல ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
அட்னான் ஒக்தார் தீவிரவாதத்தைப் பற்றி மக்களுக்குப் போதிப்பதோடு, பிளாஸ்டிக் சர்ஜரி செய்த பெண்களுடன் அட்னான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடனமாடினார். அவர் பெண்களை 'பூனை' என்று அழைப்பார்.
கிரிமினல் குற்றவாளி கும்பலை உருவாக்கியது மற்றும் சிறார்களை பாலியல் ரீதியாக துஷபிரயோகம் செய்தது உட்பட பல குற்றங்களில் அவர் குற்றவாளி என்று துருக்கியின் இஸ்தான்புல் நீதிமன்றம் கண்டறிந்ததாக டெய்லி மெயில் தெரிவித்துள்ளது. இப்போது பெண்கள் தாங்கள் இழைக்கப்பட்ட கொடுமைகள் பற்றி வெளிப்படையாகப் பேசுகிறார்கள்.
ஒரு பெண் தனக்கு 16 வயதாக இருந்தபோது அட்னான் ஒக்தார் என்ற இந்த மத தலைவரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும், 20 வயதில், வலுக்காட்டயமாக, மயக்க மருந்து இல்லாமல் ரைனோபிளாஸ்டி சிகிச்சை கொடுக்கப்பட்டதாகவும் கூறினார். ஆபரேஷன் நடந்த பகுதியில் இன்னும் வலியை உணர்வதாகவும், அப்போது தன்னை சுத்தியாலும் உளியாலும் தாக்கியது இன்று நினைத்தாலும் உடல் நடுங்கிறது எனவும் கூறினார்.
அட்னான், பாலியல் குற்றங்கள், சிறார்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தல், மோசடி மற்றும் அரசியல் மற்றும் இராணுவ உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். சுமார் 236 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டு, அதில் 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என NTV அறிக்கை கூறுகிறது.
மேலும் படிக்க | Wi-Fi இணைப்பை துண்டித்ததால், குடும்பத்தையே சுட்டுக் கொன்ற 15 வயது சிறுவன்!
ஒக்டர் டிசம்பரில் தலைமை நீதிபதியிடம் தனக்கு சுமார் 1,000 காதலிகள் இருப்பதாக கூறினார். அக்டோபரில் நடந்த மற்றொரு விசாரணையில், என் இதயம் பெண்கள் மீதான காதல் வெள்ளத்தில் மூழ்கியது என்று கூறினார். காதல் என்பது மனித குணம். இதுதான் இஸ்லாமின் குணம். நான் அசாதாரணமான சக்தி வாய்ந்தவன் என்று கூறினார்.
அவரது வீட்டில் இருந்து 69,000 கருத்தடை மாத்திரைகள் காவல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது பற்றி கேட்டதற்கு, அவை சரும பிரச்சனைகள் மற்றும் மாதவிடாய் கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகின்றன என்று ஒக்டார் கூறினார்.
ஒக்டார் ஒரு படைப்பாளி என்று சொல்லலாம். அவர் டார்வினிய பரிணாமக் கோட்பாட்டை நிராகரித்து, ஹாருன் யாஹ்யா என்ற புனைப்பெயரில் 'The Atlas of Creation' என்ற தலைப்பில் 770 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை எழுதியுள்ளார்.
இந்த ஆண்டு ஜனவரியில், கற்பழிப்பு, சிறுவர் துஷ்பிரயோகம், உளவு பார்த்தல் மற்றும் மிரட்டல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் அட்னான் ஒக்டார் துருக்கியில் 1,075 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். 64 வயதான அவர் தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுக்கிறார், மேலும் மேல்முறையீடு செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | பிரேசிலில் நடந்த கொடூரம்; மனைவியை கொன்று கூறு போட்டு சமைத்து சாப்பிட்ட நபர்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR