)
Viral News: சமீபத்தில் அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியெற்றார். அதன் பின்னர் அவர் பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வருகிறார் அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.
நாடு முழுவதும் சட்ட விரோதமாக குடியேறிவர்களை அடையாளம் கண்டு தினமும் 3000 பேரை கைது செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, அமெரிக்கா - மெக்ஸிகோ எல்லையில் அமைந்திருக்கும் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு முறையாக ஆவணங்கள் இன்றி சுமார் 44 ஊழியர்கள் இருந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இச்சூழலில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும், அமெரிக்க அரசுக்கு எதிராகவும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் போராட்ட களத்தில் குதித்தனர். இந்த போராட்டம் நேற்று முன்தினம் (ஜூன் 07) முதல் நடைபெற்று வருகிறது. மேலும், கைதான 44 பேருக்கு ஆதரவாக பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 2000க்கும் மேற்பட்டோர் போராட்டம் செய்ததால், பொது சொத்துகள் சேதமடைந்தன.
இதன் காரணமாக லாஸ் ஏஞ்சல்ஸ் கடந்த 2 நாட்களாக கலவர பூமியாக மாறி உள்ளது. பொதுமக்களை கட்டுப்படுத்த போலீசார் மற்றும் இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இன்று (ஜூன் 09) செய்தி சேகரிப்பதற்காக சென்ற ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் மீது அமெரிக்க போலீஸ் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
U.S. Correspondent Lauren Tomasi has been caught in the crossfire as the LAPD fired rubber bullets at protesters in the heart of Los Angeles. #9News
— 9News Australia (@9NewsAUS) June 9, 2025
LATEST: https://t.co/l5w7JxixxB pic.twitter.com/nvQ7m9TGLj
தொடர்ந்து மூன்றாவது நாளாக போராட்டம் நடந்து வரும் நிலையில், ஆஸ்திரேலியா முன்னணி ஊடகத்தில் பணிபுரியும் பெண் பத்திரிகையாளர் ஒருவர் இந்த போராட்டம் குறித்து செய்து சேகரித்து வந்தார். அப்போது திடீரென அமெரிக்க போலீஸ் ஒருவர் பத்திரிகையாளரை நோக்கி ரப்பர் குண்டுகளை வைத்து துப்பாக்கி சூடு நடத்தினார். அந்த ரப்பர் குண்டு பெண் பத்திரிகையாளரின் காலில் பட்டது. இதனால் அந்த பெண் பத்திரிகையாளர் மற்றும் கேமரா மேனும் அங்கிருந்து ஓடினர். இது தொடர்பான வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. மேலும், பத்திரிகையாளர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ